பயனர் பேச்சு:Rsmn/தொகுப்பு 2
Request for translation. Yanka Kupala and Yakub Kolas
Warm greeting from Belarusian Wikipedia! This year we celebrate 130. birthday of Belarusian great poets en:Yanka Kupala and en:Yakub Kolas Could you help us to translate articles into your unique and honourable language? Thank you in advance!--Rymchonak 07:26, 17 சனவரி 2012 (UTC)
குறுந்தகடுத் திட்டம்
- கட்டுரைகள் தெரிவு முடிந்து விட்டது. பட்டியலிட்டு வைத்துள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 23:36, 2 சனவரி 2012 (UTC)
- கவனிப்பில் உள்ளது சோடாபாட்டில். ஆவன செய்கிறேன்.--மணியன் 08:11, 3 சனவரி 2012 (UTC)
மாக் இயக்குதளம் கட்டுரை பற்றி
வணக்கம்,
தாங்கள் உருவாக்கியுள்ள மாக் இயக்குதளம் கட்டுரை பார்த்தேன்.. மேலும் மாக் ஓ.எசு என்றொரு குறுங்கட்டுரை உள்ளது.. அதனை இதனுடன் இணைத்து வழிமாற்றாக்கிவிடலாமா?
நன்றி--shanmugam 11:21, 6 பெப்ரவரி 2012 (UTC)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தங்களுக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிறிது நாட்களாகத் தமிழ் விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமத்தைக் கவனிக்கவில்லை. அது தான் பிந்தி விட்டது. --மதனாஹரன் 06:17, 7 பெப்ரவரி 2012 (UTC)
- மிக்க நன்றி, மதனாஹரன் !--மணியன் 06:25, 7 பெப்ரவரி 2012 (UTC)
மணியன், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! --செல்வா 11:29, 7 பெப்ரவரி 2012 (UTC)
- மிக்க நன்றி,செல்வா !--மணியன் 13:25, 7 பெப்ரவரி 2012 (UTC)
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், மணியன். --சிவக்குமார் \பேச்சு 14:00, 7 பெப்ரவரி 2012 (UTC)
- மிக்க நன்றி, சிவக்குமார் ! --மணியன் 02:49, 8 பெப்ரவரி 2012 (UTC)
உதவி தேவை!
ஐயா, வணக்கம்!
நான் எழுதிய 'தொலைக்காட்சித் தொடர்' எனும் கட்டுரையின் தலைப்பினை 'தொலைக்காட்சி நாடகத் தொடர்' எனும் தலைப்பிற்கு வழிமாற்று இல்லாமல் நகர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:03, 7 மார்ச் 2012 (UTC)
@செல்வா: நகர்த்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சித் தொடர் என்ற தலைப்பை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
- செல்வசிவகுருநாதன், தொலைக்காட்சித் தொடர் என்ற வழிமாற்றும் இருக்கட்டுமே...பொது வழக்கில் இருப்பதுதானே ?--மணியன் (பேச்சு) 15:29, 7 மார்ச் 2012 (UTC)
- நீங்கள் சொல்வது சரியே! தொலைக்காட்சி நிறுவனங்களும் பத்திரிகைகளும் 'தொடர்' என்றே (வர்த்தகரீதியாக) குறிப்பிடுகின்றன. சுட்டியுணர்த்தியமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:31, 8 மார்ச் 2012 (UTC)
பதக்கம்
சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர் | ||
தாங்கள் தொடர்ந்து முக்கிய கட்டுரைகள் உருவாக்கத்தில் ஈடுபடுவது சிறப்பு. இதன் மூலம் என்னைப் போன்ற மற்றவர்களையும் இந்த முக்கியமான பணியை நோக்கித் திருப்பியுள்ளமைக்கு நன்றி கூறி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன் - இரவி (பேச்சு) 13:56, 9 மார்ச் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- உங்கள் ஊக்கத்திற்கும் பதக்கத்திற்கும் மிக்க நன்றி இரவி. அனைவரின் கூட்டு முயற்சியாக இந்தக் கட்டுரைகள் விரைவில் ஆக்கப்பட உங்களது தூண்டுதல்கள் பெரிதும் உதவியுள்ளன. நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்புகள் நிகழ்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. --மணியன் (பேச்சு) 15:26, 9 மார்ச் 2012 (UTC)
ஆம், அண்மைய மாற்றங்கள் விறு விறு என்று நகருவது மகிழ்ச்சியளிக்கிறது :) இவற்றில் பல கூட்டு ஆக்கங்களாகவும் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவனவாகவும் உள்ளது தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்தும் என்பதும் இன்னும் சிறப்பு --இரவி (பேச்சு) 09:48, 14 மார்ச் 2012 (UTC)
நன்றி
உங்களின் வாழ்ந்து கண்டு மகிழ்ந்தேன். மாற்று! போன்ற முயற்சிகளில் நீங்கள் சீராக பங்களித்த போதே தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வர மாட்டீர்களா என்ற ஏக்கம் இருந்த்து. வந்து விட்டீர்கள் :) ஒரு சிலராவது விக்கிப்பீடியாவுக்கு வர நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு சிறு காரணமாக இருந்திருக்கிறேன் என்றால், அதை விட மகிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை. தமிழ் விக்கியின்அனைத்து முனைப்பான பங்களிப்பாளர்களுக்கும் என்றுமே ஈடுபாடு குன்றாது என்றே எண்ணுகிறேன். வாழ்க்கைச் சூழல் காரணமாக பங்களிக்கும் அளவும் காலமும் வேண்டுமானால் மாறலாம். ஆதர்சம் (idealistic?), நிதர்சனம் (realistic, pragmatic?)... எனக்கும் சட்டென இதற்கு ஈடான தமிழ்ச் சொற்கள் சிக்க வில்லை :( --இரவி (பேச்சு) 09:48, 14 மார்ச் 2012 (UTC)
நன்றி
மீளமைத்தமைக்கு நன்றி மணியன்.. ஆங்கில விக்கியில் அந்த vandal செய்த மாற்றங்களை revert செய்ததால் அங்கேயும், இங்கேயும் வந்து தொல்லை கொடுக்கிறது.. அங்கே தடை செய்து விட்டார்கள்...:) --shanmugam (பேச்சு) 12:06, 30 மார்ச் 2012 (UTC)
மிக்க நன்றி!
நன்றி | ||
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளராக வெற்றி பெற்றதற்கான உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! Anton (பேச்சு) 05:41, 31 மார்ச் 2012 (UTC) |
- மணியன், வணக்கம்!
- எனது 'உரையாடல்' பகுதியில் நீங்கள் தெரிவித்த வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள்! என்னால் முடிந்த அளவு, தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு உதவுவேன். (ஹரிவராசனம் கட்டுரையை நான் தொடங்கியபோது, நீங்கள் விரிவாக்கம் செய்து உதவினீர்கள்; அது என்றும் என் மனதில் இருக்கும்.) - நட்புடன்...--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:10, 31 மார்ச் 2012 (UTC)
Tamil intro
Thanks!
I just posted an intro to myself in my user page WhisperToMe (பேச்சு) 15:03, 4 ஏப்ரல் 2012 (UTC)
வணக்கம் மணியன்
ராம் மனோகர் லோகியா கட்டுரையை நான் புகுபதிகை செய்யாமல் தொடங்கிவிட்டேன். இது நான் தொடங்கிய கட்டுரைகளில் வரவில்லை. ஏதேனும் வழிகள் உள்ளனவா? நன்றி! -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:30, 26 ஏப்ரல் 2012 (UTC)
- வணக்கம் பார்வதிஸ்ரீ. எனக்குத் தெரிந்த எளியவழி வேறு எவரும் தொகுக்கும் முன் உள்ளடக்கத்தை படி எடுத்துக்கொண்டு பக்கத்தை நீக்கி மீண்டும் நீங்களே புதியதாக துவக்குவதாகும். நிர்வாகிகள் மட்டுமே நீக்க முடியுமாதலால் நீங்கள் தயாரானநிலையில் பக்கத்தை நீக்க வார்ப்புரு இடலாம். நிர்வாகி ஒருவர் நீக்கியபின்னர் நீங்கள் மீண்டும் துவக்கி உங்கள் படியை ஒட்டலாம்.
வேறு முறைகள் சோடாபாட்டில், கனக்ஸ்,மதனாஹரன் போன்றோருக்குத் தெரியலாம்.--மணியன் (பேச்சு) 00:54, 27 ஏப்ரல் 2012 (UTC)
ஒரு கோரிக்கை!
வணக்கம், மணியன்!
'விந்து நாலத்திரள்' எனும் கட்டுரையை வழிமாற்று இல்லாமல் 'விந்து நாளத்திரள்' எனும் தலைப்பிற்கு நகர்த்தி உதவவும், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:48, 3 மே 2012 (UTC)
கட்டுரைத் தலைப்பு
வாழ்க்கை வட்டம் (உயிரியல்) கட்டுரையில் உரைதிருத்தம், விக்கியாக்கம் செய்தபோது கலவியில்முறை இனப்பெருக்கம் கட்டுரை இல்லையென்று நினைத்து புதிய கட்டுரை ஒன்றை ஆரம்பித்துவிட்டேன். கலவியற்ற இனப்பெருக்கம் கட்டுரையை பின்னர்தான் அவதானித்தேன். இரண்டையும் இணைத்து விடுகின்றேன். எந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்கும் எனக் கூறுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 13:49, 8 மே 2012 (UTC)
- கலை, என்னுடையவை ஆங்கில-தமிழ் பெயர்ப்புகளே. துறையறிவு மிக்க உங்களது தேர்வே சரியாக அமையும். எனினும் கலவியற்ற எனும்போது எதிர்மறை எளிதாக விளங்குவதாகப் படுகிறது. கலவிமுறை எதிர் கலவியில் முறையும் சரிதான்..வேண்டுமானால் கலவியில்லா முறை எனலாமா ? --மணியன் (பேச்சு) 14:26, 8 மே 2012 (UTC)
கலவியற்ற இனப்பெருக்கம் என்றே அழைக்கலாம் என நினைக்கின்றேன். கட்டுரைகளை இணைத்து, தேவையான மாற்றங்களை பின்னர் செய்கின்றேன்.--கலை (பேச்சு) 14:45, 8 மே 2012 (UTC)
கட்டுரைகளை வரலாற்றுடன் இணைத்து, கலவியற்ற இனப்பெருக்கம் என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். பாருங்கள். ஏதாவது மாற்றங்கள் தேவையாயின் திருத்தி விடுங்கள்.--கலை (பேச்சு) 18:18, 10 மே 2012 (UTC)
- நன்றி கலை. சிறப்பாக வளர்த்துள்ளீர்கள். --மணியன் (பேச்சு) 23:21, 10 மே 2012 (UTC)
Parthenogenesis and Apomixis பற்றி அந்தக் கட்டுரையில் எழுதியிருப்பது சரியா, புரிகின்றதா எனத் தெரியவில்லை. அதுபற்றிய தெளிவு எனக்கும் சரியாக இல்லையென்த் தோன்றுகின்றது. அதை ஒரு தடவை பார்த்து திருத்துங்கள். தெளிவில்லை எனில் அந்த விளக்கத்தை நீக்கி விடலாம்.--கலை (பேச்சு) 13:13, 11 மே 2012 (UTC)
- கலை, நான் புரிந்துகொண்டதை திருத்தி உள்ளேன். தெளிவாக உள்ளதா என்பதை நீங்கள் பார்த்து முடிவெடுங்கள். நீக்குவதானால் பத்தித் தலைப்புகள் இருக்கட்டும். வேறொருவர் எழுதத் தூண்டுதலாக இருக்கும்.--மணியன் (பேச்சு) 17:34, 11 மே 2012 (UTC)
மகிழ்ச்சி
ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டுத் தாங்கள் உருவாக்கி வரும் பல்வேறு விளையாட்டுகள் குறித்த கட்டுரைகள் படிக்க ஆர்வமூட்டுவனவாகவும் பயனுள்ளனவாகவும் உள்ளன. நன்றி--இரவி (பேச்சு) 06:34, 15 மே 2012 (UTC)
- நன்றி இரவி. விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் முகனையானவை. பல துணைக்கட்டுரைகளும் வார்ப்புருக்களும் ஆக்க வேண்டிய நிலையில் கடந்த துடுப்பாட்ட உலகக்கோப்பைக்கு அளித்த ஆதரவு போல கூடுமானவர்கள் பங்களித்தால் சிறப்பாக இருக்கும்.
- கட்டுரைத் தலைப்புக்களை ஏற்கெனவே உள்ளனவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கிறேன். பிழைகளைக் களைந்து பொருத்தமானத் தலைப்புகளுக்கு நகர்த்துவதை வரவேற்கிறேன். இருப்பினும், ஒற்றுப் பிழைகளைத் தவிர்த்து, உரையாடல் நடத்தி பொதுக்கருத்து உள்ளத் தலைப்புகளுக்கு மாற்றுவது சரியான விக்கி செயல்பாடாக இருக்கும். --மணியன் (பேச்சு) 15:01, 15 மே 2012 (UTC)
நல்லது, மணியன். தற்போது, முக்கிய கட்டுரைகளை உருவாக்கி முடித்த பிறகு, தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரை இருப்பைக் கருத்தில் கொண்டு துறை வாரியாக நாமே சில கட்டுரைகளை இனங்கண்டு உருவாக்கலாம். ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு விளையாட்டுத் துறையில் இருந்தே இதைத் தொடங்கலாம் என நினைக்கிறேன்--இரவி (பேச்சு) 18:22, 15 மே 2012 (UTC)
டிஐ நிறுவனம்
பார்க்க பேச்சு:டிஐ சைக்கிள்ஸ் நிறுவனம்--சண்முகம் (பேச்சு) 03:22, 24 மே 2012 (UTC)
- ஆயிற்று --மணியன் (பேச்சு) 03:48, 24 மே 2012 (UTC)
நன்றி
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி. -பார்வதிஸ்ரீ |
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:17, 26 மே 2012 (UTC) +1தங்கள் நம்பிக்கைக்கு மிக்க நன்றி மணியன், அதற்கேற்றவாறு செயல்படுவேன்--சண்முகம் (பேச்சு) 11:31, 26 மே 2012 (UTC)
+1 ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:08, 30 மே 2012 (UTC)
பெரும் கழிவகற்றல் (Great Purge) பற்றி
மணியன், இத்தலைப்பை மாற்றவேண்டாம் என்று நீங்கள் கூறுவதில் உண்மை உளது என்பதை நான் ஏற்கிறேன். ஆனால், அரசியல் எதிரிகளை, கருத்து மாறுபாடு தெரிவிப்பவர்களை "கழிவு" (dirt, garbage, excrement) என்று ஸ்டாலின் (அல்லது இட்லர்) கருதியிருந்தாலும் அது தவறுதான். மேலும் purge என்னும் சொல் "தூய்மை ஆக்கல்" என்னும் கருத்துடைய மூலத்திலிருந்து பிறப்பதால் "துப்புரவு" சரியாக இருக்கும் என்று கருதினேன். அவ்வளவுதான்! நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 18:35, 29 மே 2012 (UTC)
- பவுல், உங்களது எண்ணத்தை நான் முன்னமே யூகித்திருந்தேன். இருப்பினும் ஸ்டாலின் கருதியது தவறு என்பதை பதிவதும் வரலாற்றில் முக்கியமல்லவா ? உங்களது தலைப்பு முதன்மையாகவும் கழிவகற்றல் என்ற சொல் வழிமாற்றாகவும் இருக்கட்டும். நன்றி!--மணியன் (பேச்சு) 19:09, 29 மே 2012 (UTC)
புதுப்பயனர் தடை
பயனர்:Velram3 என்பவரை பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் செய்தார் என்று நீங்கள் தடை செய்துளதாகத் தெரிகிறதே. அவர் ஒன்றும் எதையும் தப்பாக செய்யவில்லை என்பது போல் தெரிகிறது. கட்டுரைகளில் இடையிணைப்புகளுக்கு பதிலாக விக்கித்தொடுப்புக்களை கொடுத்துளதாக மட்டும் தெரிகிறது. நான் ஆசாத் கட்டுரையில் அவர் பங்களித்ததை பார்த்துவிட்டு அவர் பக்கத்தில் அத்தவறை விளக்கலாம் என்று போகையில் நீங்கள அவரை தடை செய்ததாக வந்தது. புதுப்பய்னரான அவருக்கு அவரின் பேச்சுப்பக்கத்தில் அதை விளக்கியிருக்கலாமே. அல்லது மின்னஞ்சல் செய்திருக்கலாமே. அவரிடம் இருந்து எந்தப் பதிலையும் பெறாமல் ஏன் தடை செய்தீர்கள்? புதுப்பயனர்களுக்கு விக்கி முறைகளை விளக்கிய பின்னும் அவர் அதை கேட்காமிலிருந்தால் தானே விளக்க இயலும். இல்லை அவர் வேறேதும் விசமம் செய்தாரா..!?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:23, 9 சூன் 2012 (UTC)
- தென்காசி, சொல்வது சரிதான் மணியன். அவர் பெரிதாக தவறு ஒன்றும் செய்யவில்லை. அவருக்குத் தமிழ் தெரியவில்லை என்று நினைக்கிறேன். (எழுதும் அளவு) எனவே, இணைப்புகளை இட்டுவருகிறார். அவரது தடையை நீக்கலாம். நானே நீக்கிவிடுகிறேன். மேலும், அவரது பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கிறேன். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரெனில் தடை குறித்து எண்ணலாம். :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 06:47, 9 சூன் 2012 (UTC)
- சண்முகம் திருத்தங்கள் செய்தபிறகும் மீண்டும் அதையே செய்தமையால் தெரிந்தே பக்க வடிவமைப்பை சிதைக்கிறார் என்று எண்ணினேன். இருப்பினும் தென்காசியின் கருத்துக்கள் சரியே. சற்று பொறுமையுடன் உரையாடி அவரை வழிப்படுத்தியிருக்கலாம். தவறுக்கு வருந்துகிறேன். தடையை நீக்கியதற்கு நன்றி சூர்யபிரகாஷ்.--மணியன் (பேச்சு) 14:51, 9 சூன் 2012 (UTC)
ஒலிம்பிக் விளையாட்டுகள்
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்#போட்டிகள் பகுதியில் இடம்பெறும் விளையாட்டுகளைக் குறித்து ஒரு அடிப்பக்க வார்ப்புரு உருவாக்கினால், ஒலிம்பிக் விளையாட்டுகள் துவக்கத்தை முன்னிட்டு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். உதவ இயலுமா?--இரவி (பேச்சு) 07:05, 25 சூலை 2012 (UTC)
- உதவியாக இருக்க மிக்க மகிழ்ச்சி அடைவேன் ;) உருவாக்குகிறேன்.--மணியன் (பேச்சு) 13:44, 25 சூலை 2012 (UTC) அடிப்பக்க வார்ப்புரு ஆயிற்று--மணியன் (பேச்சு) 15:08, 25 சூலை 2012 (UTC)
முதற்பக்கத்தில் இட்டாச்சு. சரியான நேரத்தில் இதனைக் காட்சிப்படுத்த முடிந்ததில் எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி. என்னால் இயன்ற அளவு இக்கட்டுரைகளை மேம்படுத்தவும் முயல்வேன். --இரவி (பேச்சு) 18:43, 25 சூலை 2012 (UTC)
உதவி தேவை...
வணக்கம்! '2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம்' கட்டுரையில் ஒரு திருத்தம் செய்ய உங்களின் உதவி தேவைப்படுகிறது. BRN என்பது Bahrain நாட்டையும், BRU என்பது Brunei நாட்டையும் குறிப்பதாக நமது வார்ப்புருகள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால், தமிழ்க் கட்டுரையின் பதக்கப் பட்டியலில் தவறு உள்ளது. புரூணை நாடு 0 -0 -1 -1 என்ற கணக்கில் பதக்கம் வாங்கியதாக பட்டியலில் உள்ளது. புரூணைக்குப் பதிலாக பஹ்ரைன் என இருக்கவேண்டும். தவறான வார்ப்புருவே இதற்குக் காரணம். வார்ப்புருவில் திருத்தம் செய்ய எனக்குத் தெரியவில்லை. உதவவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:41, 14 ஆகத்து 2012 (UTC)
- திருத்தஞ்செய்து விட்டேன். --மதனாகரன் (பேச்சு) 09:46, 14 ஆகத்து 2012 (UTC)
- நன்றி, 'சுறுசுறுப்பு' மதன்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:12, 14 ஆகத்து 2012 (UTC)
- மிக்க நன்றி மதன் !--மணியன் (பேச்சு) 13:29, 14 ஆகத்து 2012 (UTC)
2012 கோடைக்கால ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள் கட்டுரையில் பதக்கப்பட்டியலின் பிற்பகுதியில் உள்ள பிழையினை திருத்த உதவவும். முயன்றேன், வெற்றி இல்லை.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:02, 14 ஆகத்து 2012 (UTC)
- திருத்தியாகி விட்டது. முன்னதான "26" வரிசையில் (rowspan) ஏழு வரிசைகளுக்குப் பதிலாக எட்டு கொடுக்கப்பட்டிருந்ததுதான் பிழைக்குக் காரணம்.--மணியன் (பேச்சு) 15:43, 14 ஆகத்து 2012 (UTC)
நன்றி
மணியன், அண்மையில் நீங்கள் கிரிசா ஒசநகரா நாகராஜேகவுடா, வினோத் ராய் போன்ற முக்கிய நபர்களைப் பற்றிய கட்டுரைகளை உருவாக்கி வருவது கண்டு மகிழ்ந்தேன். நன்றி. -- சுந்தர் \பேச்சு 07:55, 5 செப்டெம்பர் 2012 (UTC)
- உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி சுந்தர். மேலும் இதேபோல பங்களிக்க உந்துதலாக உள்ளது.--மணியன் (பேச்சு) 13:11, 5 செப்டெம்பர் 2012 (UTC)
- :) -- சுந்தர் \பேச்சு 13:14, 5 செப்டெம்பர் 2012 (UTC)
Rajesh Khanna
Its really shocking to know that all information as available in http://en.wikipedia.org/wiki/Rajesh_Khanna has not been translated into Tamil till now.All the information must be translated soon. So it would be nice if you take the initiative as all needed references are provided in wiki article on Khanna in english.--Onceshook1 (பேச்சு) 11:16, 6 செப்டெம்பர் 2012 (UTC)
சிந்தாரிப்பேட்டை
உதெவில் இடம்பெறப்போகும் நீங்கள் சேர்த்த சிந்தாரிப்பேட்டை பற்றிய தகவல் பற்றி குறைந்தது ஒரு குறுங்கட்டுரையாவது இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா விதி என்பது உங்களுக்குத் தெரியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:14, 14 செப்டெம்பர் 2012 (UTC)
- தவறெனில் விலக்கிக் கொள்ளவும். மன்னிக்க வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 14:33, 14 செப்டெம்பர் 2012 (UTC)
சும்மா எதுகை மோனைக்காக கேட்டேன். அத்ற்கு ஏன் பெரிய வார்த்தைகள்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:08, 14 செப்டெம்பர் 2012 (UTC)
நன்றிகள்
மணியன், நான் அமீரகத்துக்கு வெளியே சென்றிருந்ததால் இன்றுதான் உங்கள் வாழ்த்துக்களைப் பார்க்க முடிந்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். --- மயூரநாதன் (பேச்சு) 18:17, 18 செப்டெம்பர் 2012 (UTC)
Article translation/collaboration request
Hi Rsmn, how are you? Mate, I am trying to find an editor/s who can help by translating User:Russavia/Polandball into Tamil. I am wondering if we could make a collaborative trade?
If you could translate that article into Tamil for me, I would be happy to upload approximately 50 aviation photos from Tamil-speaking countries to Commons from amongst the 200,000 I have permission to upload. I have uploaded a number of photos already to give you a brief idea of what I can upload, and I am keeping a gallery at User:Russavia of photos uploaded.
Would you be interested in such a collaborative "trade"? Do let me know, either by responding here, or on my talk page, or by emailing me. Cheers, Russavia (பேச்சு) 07:05, 21 செப்டெம்பர் 2012 (UTC)
Polandball barnstar
The Polandball Barnstar | ||
Hello India, Australia be approvings of your translatings of Polandball. With India help, we provings that whilst Poland can not into space, Polandball can into Wikipedia. As Australia making note of on his page of user, he will continue to make uploadings of aviation picturings to Commons. Many of greetings and exultations. Russavia (பேச்சு) 03:02, 25 செப்டெம்பர் 2012 (UTC) |
தாங்கள் தொடங்கிய கட்டுரைகளை இற்றைப்படுத்த, மேம்படுத்த வேண்டுகோள்
வணக்கம், Rsmn/தொகுப்பு 2! நீங்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது கண்டு மகிழ்கிறேன். தாங்கள் புதிதாக கட்டுரைகள் எழுதுவது, மற்ற விக்கிப்பணிகளில் பங்கு கொள்வதுடன் ஏற்கனவே நீங்கள் எழுதிய சில கட்டுரைகளையும் அவ்வப்போது மேம்படுத்த முனைந்தால் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, நீங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கிய காலத்தில் உருவாக்கிய கட்டுரைகளை இற்றைப்படுத்தலாம். இவ்வாறு செய்வது தமிழ் விக்கிப்பீடியா 50,000 கட்டுரைகளை எட்டும் நிலையில் அதன் தரத்தை உயர்த்த உதவும். பின்வரும் வழிகளில் உங்கள் கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
- தகுந்த இடங்களில் உள்ளிணைப்பு தரலாம்.
- பிற விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு பக்கப்பட்டையில் இருந்து இணைப்பு தரலாம்.
- எழுத்து, இலக்கணம், தகவல் முதலியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்தலாம்.
- கட்டுரைக்குப் பொருத்தமான படங்களைச் சேர்க்கலாம்.
- தகுந்த உசாத்துணைகள், மேற்கோள்கள் சேர்க்கலாம்.
- தகுந்த பகுப்புகளைச் சேர்க்கலாம்.
- கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் ஏதேனும் கருத்து இருந்தால், அதைப் படித்துப் பார்த்து அதற்கு ஏற்ற மாற்றம் செய்யலாம். உரையாடல் பக்கத்தில் மறுமொழி இடலாம்.
- கட்டுரையை விரிவாக்கலாம்.
- கட்டுரையில் உள்ள தரவுகளை இற்றைப்படுத்தலாம்.
ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். இது என் தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமே :) இன்னும் இலகுவான வழிகளில் பல்வேறு பங்களிப்பாளர்களும் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்த இயலும் எனில், அது குறித்த உங்கள் பரிந்துரைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
சிறு தொகுப்பு
மணியன், அண்மையில் நீங்கள் எனக்கு அளித்த பல மறுமொழிகளைத் தாமதமாகவே கண்டு வந்துள்ளேன். பேச்சுப் பக்கக் குறிப்புகளை சிறு தொகுப்பு என்று குறிப்பதால் அண்மைய மாற்றங்களில் சிக்காமல் போகிறது. எனவே பெரிய, குறிப்பிடத்தக்க மறுமொழிகளை சிறு தொகுப்பு என்று குறிக்காமல் இட வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 13:54, 26 அக்டோபர் 2012 (UTC)
- சரி இரவி, இனி கவனத்தில் கொள்கிறேன்.--மணியன் (பேச்சு) 09:46, 27 அக்டோபர் 2012 (UTC)
Tamil question
Hi! What is the Tamil name of "en:The Scarborough Hospital" in http://www.tsh.to/pdf/Tamil_Intro.pdf ? What is the Tamil text in the picture File:Grace trilingual sign.jpg? If you want, it would be nice if someone made a Tamil article on the hospital. Thanks WhisperToMe (பேச்சு) 02:32, 8 திசம்பர் 2012 (UTC)
- Hi ! "en:The Scarborough Hospital" - ஸ்கேர்பொரோ மருத்துவமனை and the Tamil text in the picture: அவசர சிகிச்சை, வெளி நோயாளர் means Emergency, Outpatients only.
Thank you for the pointers...will do a Tamil article in due course :)--மணியன் (பேச்சு) 04:32, 8 திசம்பர் 2012 (UTC)
- Thank you very much! I am glad to help you out :) WhisperToMe (பேச்சு) 07:23, 8 திசம்பர் 2012 (UTC)
பதக்கம்
நடப்பு நிகழ்வுகள் பதக்கம் | ||
இதற்குத் தகுதியானவர், உங்களைத் தவிர வேறு எவர்?!
நன்றி! அன்புடன் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:44, 23 திசம்பர் 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- மிக்க நன்றி செல்வசிவகுருநாதன். --மணியன் (பேச்சு) 04:35, 23 திசம்பர் 2012 (UTC)
தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு
இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:32, 26 திசம்பர் 2012 (UTC)
- அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி நக்கீரன். தற்போதைய உடல்நலமும் நேரக்குறைவும் கொண்டு என்னால் பங்கேற்க இயலாது உள்ளது. மாநாடு செவ்வனே நடந்தேற வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 10:24, 27 திசம்பர் 2012 (UTC)
- நன்றி மணியன். உடல்நலம் மேம்பட வேண்டுகிறேன். --Natkeeran (பேச்சு) 02:47, 28 திசம்பர் 2012 (UTC)
மலேசியாவில் ஒரே விக்கிபீடியர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
மலேசியாவைப்பற்றி 128 கட்டுரைகள். மலேசியாவிற்கு ஓர் இடம் கொடுங்கள். எனக்கு உதவி செய்ய வேண்டாம். மலேசியாவில் இருக்கும் 22 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் எழுதி கொண்டுதான் இருப்பேன். ஆளை விடுங்கள்.--ksmuthukrishnan 15:09, 12 சனவரி 2013 (UTC)
நன்றி
நன்றி | ||
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:08, 14 சனவரி 2013 (UTC) |
நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:21, 14 சனவரி 2013 (UTC)
+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:49, 15 சனவரி 2013 (UTC)
பேச்சுப் பக்கச் செய்தி
நீங்கள் எனது பேச்சுப் பக்கத்தில் இட்டிருந்த செய்திக்கு மறுமொழி இட்டுள்ளேன். கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் :) --இரவி (பேச்சு) 05:06, 24 சனவரி 2013 (UTC)
- கவனித்தேன் இரவி. ஏற்றுக் கொண்டதை அறிவிக்க மறந்து விட்டேன் :) முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தும் வார்ப்புருவை யாரேனும் இற்றைப்படுத்தினால் நல்லது. நான் விக்கிக்கு வருவது தற்போது சீராக இல்லாத காரணத்தால் என்னால் செய்ய இயலவில்லை :(--மணியன் (பேச்சு) 07:33, 24 சனவரி 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்
நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:43, 31 சனவரி 2013 (UTC)
- பார்வதிஸ்ரீ, முதற்பக்க ஒருங்கிணைப்பைச் சீரிய முறையில் செய்து வருகிறீர்கள் !! பாராட்டுக்கள் !! எனது கட்டுரைகள் பலவும் முழுமையாக இன்றி முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த தக்கவையாக இல்லை...ஏதேனும் சில கட்டுரைகளையாவது முதற்பக்க தரத்துக்கு உயர்த்திய பின்னர் உங்களிடம் பரிந்துரைக்கிறேன். பிற சிறந்த கட்டுரைகளையும் இயன்றளவில் பரிந்துரைக்கிறேன். --மணியன் (பேச்சு) 03:50, 7 பெப்ரவரி 2013 (UTC)
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்
வணக்கம், Rsmn/தொகுப்பு 2!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:10, 2 பெப்ரவரி 2013 (UTC)
மீண்டும் விக்கியில் உங்களைக் காண்பது மகிழ்ச்சி புதிய கட்டுரைகள் வேகமாகப் பிறக்கும் என நினைக்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:36, 6 பெப்ரவரி 2013 (UTC)
- ஒன்றுக்கொன்று சார்ந்துள்ள கலைச்சொற்களின் விளக்கத்திற்காகவும் தெளிவிற்காகவும் அவற்றின் துவக்கத்தை மட்டும் விரைவாக எழுதுகிறேன். வாரத்திற்கு ஒன்றிரண்டாவது முழுமையான கட்டுரை எழுத வேண்டும் என்னும் அவா உள்ளது. காலமும் நேரமும் கூடி வர வேண்டும். --மணியன் (பேச்சு) 03:54, 7 பெப்ரவரி 2013 (UTC)
கோரப்படும் கட்டுரைகளில் இருந்து நீங்கள் அவ்வப்போது கட்டுரை இயற்றுவது கண்டு மகிழ்ச்சி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:36, 12 பெப்ரவரி 2013 (UTC)
அரசு, பிற நிறுவனங்களுடன் தமிழ் விக்கிப்பீடியா உறவாட்டம் குறித்த கொள்கை
வணக்கம். ஒரு முன்னாள் அரசு அலுவலர், பல்வேறு நிறுவனங்களுடன் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் என்ற முறையில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு அரசும் பள்ளிச் சூழலும் நடைமுறையில் எவ்வாறு, எந்த அளவு உதவக்கூடும் என்பதைப் பற்றிய உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். உங்கள் பரிந்துரைகள், ஆதரவை இங்கு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:15, 25 பெப்ரவரி 2013 (UTC)
பதக்கம்
சிறந்த கூட்டு முயற்சிக் கட்டுரையாளர் | ||
இவ்வார கூட்டு முயற்சியான இங்கிலாந்து தொடர்புடைய பல கட்டுரைகளைச் சிறப்பாக உருவாக்கி வருவதைக் கண்டு மகிழ்கிறேன். நன்றி. இரவி (பேச்சு) 04:59, 2 மார்ச் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- நன்றி இரவி. எனது முயற்சி கவனிக்கப்படுகிறது என்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான் ;)--மணியன் (பேச்சு) 05:11, 2 மார்ச் 2013 (UTC)
- அடடா, கவனிக்கப்படாமல் என்ன :) தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட இங்கிலாந்தைப் பற்றிய முழுமையான, தொடர் கட்டுரைகள் எழுதுவது மிக முக்கியமான பணி. புதிய பங்களிப்பாளர்களைக் கவனிக்கும் மும்முரத்தில் நெடுநாள் பங்களிப்பாளர்களிடம் மகிழ்ச்சியைத் தெரிவிக்காமல் விட்டு விடுகிறோம்.. அவ்வளவு தான் :) --இரவி (பேச்சு) 05:44, 2 மார்ச் 2013 (UTC)
- பதக்கம் பெற்றதற்கு வாழ்த்துகள். இங்கிலாந்து தொடர்பான பக்கங்களை மிகச்சீரிய முறையில் அளித்து வருகிறீர்கள்.--பரிதிமதி (பேச்சு) 05:14, 3 மார்ச் 2013 (UTC)
- நன்றி பரிதிமதி.--மணியன் (பேச்சு) 11:24, 3 மார்ச் 2013 (UTC)
மாதம் 250 தொகுப்புகள் மைல்கள்
வணக்கம், Rsmn/தொகுப்பு 2!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
சென்னை விக்கியர் சந்திப்பு
வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:36, 4 மார்ச் 2013 (UTC)
சிறு தொகுப்பு
இயற்பியல் கட்டுரையில் பல ஆயிரம் பைட்டு அளவுள்ள தகவலைச் சேர்த்து விட்டு சிறு தொகுப்பு என்று குறித்துள்ளீர்களே? உங்கள் தன்னடக்கத்துக்கு ஒரு அளவே இல்லையா :) அருள்கூர்ந்து, உண்மையிலேயே சிறிய தொகுப்புகளை ( எழுத்துப்பிழை திருத்தம் போன்றவை) மட்டும் அவ்வாறு குறிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:31, 29 மார்ச் 2013 (UTC)
- ஹி..ஹி.. சிறு தொகுப்பு என்பது தொகுத்தல் பெட்டியில் இயல்பிருப்பாக தேர்வாகி உள்ளதால் ஏற்பட்ட பிழை. இனி கவனத்தில் கொள்கிறேன்.--மணியன் (பேச்சு) 02:49, 30 மார்ச் 2013 (UTC)
- ஓ, சரி. முன்பு நானும் அவ்வாறு இயல்பிருப்பாக வைத்திருந்து பிழை விட்டேன். இப்போது இயல்பிருப்பைத் தூக்கி விட்டேன்.--இரவி (பேச்சு) 04:44, 30 மார்ச் 2013 (UTC)
- நீங்கள் இதை இன்னும் மாற்றவில்லை போல இருக்கிறதே :) ? உங்களின் அண்மைய பல உரையாடல்களை இதனால் மிகத் தாமதமாகவே கவனிக்க நேர்ந்தது. --இரவி (பேச்சு) 10:20, 3 சூன் 2013 (UTC)
- ஓ, சரி. முன்பு நானும் அவ்வாறு இயல்பிருப்பாக வைத்திருந்து பிழை விட்டேன். இப்போது இயல்பிருப்பைத் தூக்கி விட்டேன்.--இரவி (பேச்சு) 04:44, 30 மார்ச் 2013 (UTC)
தேவைப்படும் கட்டுரைகள்
தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதிதாக வருபவர்கள் எழுதக்கூடியவை என்ற நோக்கில், இலகுவான ஆனால் முக்கியமான கட்டுரைகள் என்று சிலவற்றை இங்கு பரிந்துரைக்க முடியுமா? நன்றி. --இரவி (பேச்சு) 15:32, 29 மார்ச் 2013 (UTC)
63/28
பிப்ரவரி மாதத்தின் 28 நாட்களில் 63 கட்டுரைகளைத் தாங்கள் துவங்கியமை கண்டு மகிழ்கிறேன். நன்றி !--Karthi.dr (பேச்சு) 09:51, 30 மார்ச் 2013 (UTC)--Karthi.dr (பேச்சு) 09:51, 30 மார்ச் 2013 (UTC)
மிக்க நன்றி!
வணக்கம்!
‘இந்தி நடிகர் பிரானுக்கு பால்கே விருது’ செய்தித் தொகுப்பு மூலம் ஏறத்தாழ 15 மாதங்களுக்குப் பிறகு விக்கிசெய்தியில் தங்களின் பங்களிப்பினை செய்துள்ளீர்கள். விக்கிப்பீடியாவில் ‘நடப்பு நிகழ்வு’ கட்டுரைகளை எழுதுவதில் வித்தகரான தாங்கள், நேரம் கிடைக்கும்போதேல்லாம் விக்கிசெய்தியிலும் தங்களின் சேவையை அளிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:33, 14 ஏப்ரல் 2013 (UTC)
New article request
Hi! I added a request for en:Transport for London on my talk page. The agency operates a Tamil website that can be helpful in writing the article Thanks WhisperToMe (பேச்சு) 01:20, 18 ஏப்ரல் 2013 (UTC)
- Thank you for your continued interest in Tamil Wikipedia. 'coz of my limited time and varied interests, no timelines can be set but will meet your request one of these days !
--மணியன் (பேச்சு) 03:23, 18 ஏப்ரல் 2013 (UTC)
- Ok. Thank you for the response. If/when you do write one, please let me know :) WhisperToMe (பேச்சு) 09:18, 18 ஏப்ரல் 2013 (UTC)
ஒரு உதவி...
வணக்கம்!
வலைவாசல்:தமிழிலக்கியம்/உங்களுக்குத்தெரியுமா எனும் பக்கத்தினை வழிமாற்று இல்லாமல் வலைவாசல்:தமிழிலக்கியம்/உங்களுக்குத் தெரியுமா எனும் பக்கமாக நகர்த்தி உதவவும் (உங்களுக்குத், தெரியுமா என்பனவற்றுக்கு இடையே இடைவெளி தேவை). நன்றி!−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Selvasivagurunathan m (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. 04:30, 10 மே 2013 (UTC)
- ஆயிற்று--மணியன் (பேச்சு) 05:48, 10 மே 2013 (UTC)
உதவிக்கு நன்றி! கையொப்பமிட மறந்தமைக்கு மன்னிக்கவும்; unsigned வார்ப்புருவினை இட்டமைக்கு கூடுதல் நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:18, 13 மே 2013 (UTC)
தொடர் கட்டுரைப் போட்டி தொடர்பாக கருத்து தேவை
விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி பக்கத்தில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள கருத்துகளை உள்வாங்கி புதிய பரிந்துரையை இட்டுள்ளேன். உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 05:18, 13 மே 2013 (UTC) ஆயிற்று--மணியன் (பேச்சு) 06:45, 13 மே 2013 (UTC)
சென்னை விக்கியர் சந்திப்பு
மே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:29, 21 மே 2013 (UTC)
- மிக்க மகிழ்ச்சியூட்டும் செய்தி. இத்தகைய சந்திப்பைத் தான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் எனது தம்பி பெண் திருமணத்திற்காக அந்நாட்களில் கோவை செல்லவிருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். --மணியன் (பேச்சு) 06:00, 21 மே 2013 (UTC)
பார்வைக்கு
- ஐயா, தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்றுத் துறைகளில் எனது அறிவு மேலோட்டமானது என்பதால் அங்கு கருத்தளிக்க நான் வல்லேனல்லன். --மணியன் (பேச்சு) 04:41, 30 மே 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
வணக்கம் மணியன். '2013 தமிழ் விக்கிப்பீடியா தொடர் கட்டுரைப் போட்டி நீங்கள் அறிந்ததே'. அமைதியான முறையில் விக்கிக்குப் பல சிறப்பான கட்டுரைகளை உருவாக்கி பங்களித்து வரும் தாங்கள் அப்போட்டியில் பங்களிக்க வேண்டுகிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:38, 2 சூன் 2013 (UTC)
- நன்றிகள் பார்வதிஸ்ரீ ! நிச்சயமாகப் பங்கேற்பேன் :)--மணியன் (பேச்சு) 05:50, 2 சூன் 2013 (UTC)
பதக்கம்
களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் | ||
உங்களுக்கென்றே புதிது புதிதாக பதக்கங்களை உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன்! ஏற்கனவே மிச்சம் இருக்கும் இப்பதக்கத்தை இப்போதைக்கு தந்து விடுகிறேன்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்! (கட்டுரைப் போட்டியில் உங்களின் பங்களிப்பு கண்டு வியக்கிறேன்)
மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:25, 6 சூன் 2013 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- மிக்க நன்றி செல்வகுருநாதன்! மற்றவர்களைப் போலத்தான் நானும் பங்களித்து வருகிறேன். தமிழின் சிறப்பே உயர்வுநவிற்சியணிதானே ;) இருப்பினும் ஊக்கப்பட்டுத்தும் நல்மொழிகளுக்கு மீண்டும் நன்றி !
- நீங்களும் கலந்து கொள்ளுங்கள் !! --மணியன் (பேச்சு) 12:10, 6 சூன் 2013 (UTC)
- தமிழின் சிறப்பு உயர்வுநவிற்சியணி என்றால் தமிழரின் சிறப்பு தன்னடக்கமோ :) முற்றிலும் பொருத்தமான பதக்கம். --இரவி (பேச்சு) 18:13, 8 சூன் 2013 (UTC)
- நன்றி இரவி ! பணிவுடையன் ஆதலும் அமரருள் உய்க்கும் அடக்கம் பேணுதலும் வள்ளுவன் காட்டிய வழியன்றோ !?--மணியன் (பேச்சு) 04:08, 10 சூன் 2013 (UTC)
- விக்கிப்பீடியா மூலம் செய்யும் பணி ஒரு இன்பம் என்றால் ஒத்த கருத்துடைய சான்றோருடன் பணியாற்றுவது பேரின்பம் :)--இரவி (பேச்சு) 13:12, 11 சூன் 2013 (UTC)
தங்களின் பார்வைக்கு....
இங்கு வாசித்து, உரியன செய்யவும். இந்தப் பயனர் கட்டுரைப் போட்டியில் தனது பங்களிப்பினை செய்து வருகிறார். அவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும். ஏற்கனவேயுள்ள கட்டுரையை நீங்கள் துவக்கியதால், நீங்கள் முடிவு செய்தலே சரியாக இருக்கும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:25, 10 சூன் 2013 (UTC)
- அங்கு மறுமொழியிட்டுள்ளேன்.--மணியன் (பேச்சு) 04:04, 10 சூன் 2013 (UTC)
கடல் அலை ஆற்றல் இருக்கிறதே? என்ன செய்யலாம்?--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:12, 10 சூன் 2013 (UTC)
- ஹூம்..இது சரியான கேள்விதான்;) இரண்டு கட்டுரைகளையும் இணைக்க வேண்டியிருக்கும். உரிய வார்ப்புருவை இரண்டு கட்டுரைகளிலும் இட்டு விடுகிறேன். போட்டியாளர் தமது எல்லையை எட்டியவுடன் வரலாற்றுடன் இணைத்து விடலாம் என எண்ணுகிறேன். கடல் அலை ஆற்றல் கட்டுரைக்கு ஆங்கில விக்கி இணைப்பு ஏற்படுத்தாததால் இந்த சிக்கல் எழுந்துள்ளது ;( போட்டி நடுவர் இரவியின் தீர்வே முடிவானது !--மணியன் (பேச்சு) 04:33, 10 சூன் 2013 (UTC)
- சில தவறுகள்..கடல் அலை ஆற்றல் கட்டுரைக்கு wave power ஆங்கில விக்கி கட்டுரையுடன் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் சிந்தித்ததில், அலை மின்சாரம் என்பது கடல் அலை ஆற்றலின் ஒரு பகுதியாகும். இந்த கட்டுரையை வைத்துக்கொண்டு இதன் சாராம்சத்தை ஒரு பத்தியாக கடல் அலை ஆற்றல் கட்டுரையில் கொடுத்து விடலாம்.--மணியன் (பேச்சு) 04:44, 10 சூன் 2013 (UTC)
நான் போட்டி நடுவர் எல்லாம் இல்லீங்கோ ! குறிப்பாக, பல வழமையான பங்களிப்பாளர்கள் போட்டியிடும் இடத்தில் அகவயமான மதிப்பிடல், நடுவர் பணி இருக்கக் கூடாது என்ற காரணத்தால் தான் 15360 பைட்டைத் தாண்ட வேண்டும் என்ற புறவயமான விதியையே முன்வைத்தேன். உங்களைப் போலே நானும் இப்போட்டித் திட்டத்தில் ஆர்வம் கொண்டவன். பங்கேற்பாளன். அவ்வளவு தான். எனவே, இந்தப் பிரச்சினைக்கு எது உரிய முடிவோ அதைச் செயற்படுத்தி விடுங்கள். குழப்பம் வந்தால் அதன் பயனைப் புதிய பங்களிப்பாளருக்குத் தந்து உற்சாகப்படுத்தலாம். துடுப்பாட்டத்தில் benefit of doubt மட்டையாளருக்கு என்பது போல் :)--இரவி (பேச்சு) 14:51, 12 சூன் 2013 (UTC)
- இரவி, போட்டி நடுவர் இல்லை, ஒருங்கிணைப்பாளர்தான் :) உங்கள் எண்ணம்போலவே,கட்டுரையை வைத்துக் கொள்வோம் என மேலே ஏற்கெனவே தீர்வு கொடுத்தாகிவிட்டது.. --மணியன் (பேச்சு) 06:11, 13 சூன் 2013 (UTC)
பதக்கம்
மெய்வாழ்வுப் பதக்கம் | ||
போட்டிக்குட்பட்ட கட்டுரைகளில் வெற்றிக் கோடான 15360 பைட்டுகளைத் தாண்டியும் கட்டுரைகளைச் சீராக்க முனைவதைக் கண்டு மகிழ்கிறேன். இந்த மெய்யான விக்கிப் பண்பு மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியான செயற்பாடு ஆகும். இரவி (பேச்சு) 13:16, 11 சூன் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- நன்றிகள் இரவி !--மணியன் (பேச்சு) 06:12, 13 சூன் 2013 (UTC)
An important request: Centralized Monitoring System
The en:Centralized Monitoring System is a system that will monitor internet traffic in India. Are you interested in writing an article in Tamil about this system? Thanks WhisperToMe (பேச்சு) 22:48, 3 சூலை 2013 (UTC) ஆயிற்று--மணியன் (பேச்சு) 04:11, 4 சூலை 2013 (UTC)
- Thank you so much! WhisperToMe (பேச்சு) 13:19, 4 சூலை 2013 (UTC)
Article requests: plane crashes in Sri Lanka
Hi, Rsmn!
When you have a chance, are you interested in starting Tamil stubs on the following?
- en:Martinair Flight 138 மார்ட்டினேர் பறப்பு எண் 138 ஆயிற்று
- en:Icelandic Airlines Flight 001 ஐசுலாந்திய ஏர்லைன்சு பறப்பு எண் 001 ஆயிற்று
Both incidents happened in Sri Lanka. A user started the Sinhala stubs on them, and they need stubs in Tamil too. Thank you WhisperToMe (பேச்சு) 17:13, 9 சூலை 2013 (UTC)