பயனர் பேச்சு:AntanO/தொகுப்பு 1

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic களப்பிரர் படம்

வாருங்கள்!

வாருங்கள், AntanO, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--பாஹிம் 12:57, 15 நவம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் அன்ரன், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. உங்கள் கட்டுரைகள் நன்றாக உள்ளன. குறிப்பாகப் பரங்கியர் கட்டுரையைத் தொடங்கியமைக்குப் பாராட்டுகள். மேலும், பறங்கியர் என்ர தலைப்பில் வேறு ஒரு கட்டுரை எழுதத் தேவையில்லை. இப்படியான தலைப்புகளுக்கு மூலக் கட்டுரைக்கு வழிமாற்றுகள் ஏற்படுத்தலாம். பறங்கியர் என்ற தலைப்பை பரங்கியர் என்ற கட்டுரைக்கு வழி மாற்றியிருக்கிறேன். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:02, 18 நவம்பர் 2011 (UTC)Reply

  • ஊக்கப்படுத்தலுக்கும் தெளிவுபடுத்தலுக்கும் மிக்க நன்றி! என் பங்களிப்பு தொடரும். --Anton

அருமை

தொகு

அருமையான படங்கள் ஆன்டன்,

காமன்சில் பதிவேற்றும் போது நமது போட்டி வலைவாசல் வழியாகச் சென்று அனைத்து ஊடகங்களையும் பதிவேற்றுங்கள். போட்டிக்கான படங்களை அடையாளம் காண அது உதவுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 18:41, 18 நவம்பர் 2011 (UTC)Reply

  • நன்றி! காமன்சில் பதிவேற்றும் போது வேறு பயனர் பெயரில்தான் (Anton_17)உள் நுழைகிறேன். இது குழப்பத்தை ஏற்படுத்தாதா? --Anton
வெவ்வேறு விக்கித் திட்டங்களில் வெவ்வேறு பயனர் பெயர்கள் பயன்படுத்தப்படுவது இயல்பே (காமன்சில் anton ஏற்கனவே யாரோ எடுத்திருப்பார்கள் என யூகிக்கிறேன். இது போல பலருக்கும் நிகழ்ந்துள்ளது). உங்கள் காமன்ஸ் பயனர் பக்கத்தில் உங்கள் தமிழ் விக்கி பயனர் பக்கத்துக்கு இணைப்பு கொடுத்து விடுங்கள். அது அனைவருக்கும் தெளிவு படுத்திவிடும்.--சோடாபாட்டில்உரையாடுக 19:06, 18 நவம்பர் 2011 (UTC)Reply


நன்றி!--Anton

photography in Tamil

தொகு

தமிழில் புகைப்படக்கலை குழுமத்தில் தாங்கள் உறுப்பினராக உள்ளதைக் கண்டேன். நமது ஊடகப் போட்டியினைப் பற்றி அதன் பிற உறுப்பினர்களிடம் சொல்லி பரப்புரைக்கு உதவ வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:15, 21 நவம்பர் 2011 (UTC)Reply

பயனுள்ள பரிந்துரை. அதற்கான ஏற்பாட்டை மேற்கொள்கிறேன் --Anton 04:03, 22 நவம்பர் 2011 (UTC)Reply


தமிழில் புகைப்படக் கலையில் (PiT) தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி அறிவிப்பு வெளியாகியுள்ளது.http://photography-in-tamil.blogspot.com/2011/11/blog-post.html --Anton 17:26, 23 நவம்பர் 2011 (UTC)Reply
மிக்க நன்றி அன்டன்--சோடாபாட்டில்உரையாடுக 17:49, 23 நவம்பர் 2011 (UTC)Reply

மட்டக்களப்பு அருங்காட்சியகம்

தொகு

மட்டக்களப்பு அருங்காட்சியகத்தில் இருந்து நீங்கள் படம்பிடித்த அடையாளம் தெரியாத பொருள் பற்றி இங்கு கேட்டிருந்தேன். சில யூகங்கள் கிடைத்துள்ளன. --சோடாபாட்டில்உரையாடுக 16:30, 14 திசம்பர் 2011 (UTC)Reply

நன்றி! அங்கு குறிப்பிட்டுள்ளபடி இது ஒரு கதவு மணியாக இருக்கலாமென கருதுகிறேன். அருங்காட்சியகத்திலும் கேட்டுவிட்டேன், அவர்களுக்கும் இதுபற்றித் தெரியாது. இன்னும் சில இடங்களிலும் இதுபற்றி விசாரிக்க இருக்கிறேன். --Anton 02:40, 18 திசம்பர் 2011 (UTC)Reply

அந்தரங்க உரிமை மீறல்

தொகு

காமன்சின் விதிமுறைகளைத் தேடியதில், வண்டி இலக்கத்தை மறைக்க உரிமை இருப்பது தெரிந்தது. நீங்கள் குறிப்பிட்ட அந்த படத்தில் இருந்த வண்டியின் வாகன எண்ணை மறைத்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:43, 18 திசம்பர் 2011 (UTC)Reply

பறவைகள் பற்றிய படங்களின் பதிவேற்றம்

தொகு

நீங்கள் காமென்சில் (விக்கி ஊடக நடுவம்) பதிவேற்றும் பறவைகளின் படங்கள் நீண்ட நேரம் பார்த்து இரசிக்கும் படி உள்ளது. இயற்கையை இரசிப்பதும் ஒரு வித தியானம் என்றே எண்ணுகிறேன். தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்.வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

உற்சாகமான வார்த்தைகளுக்கு நன்றி. பறவைகளின் பெயர்களை தேடுவதும் நேரமின்மையும் சில தாமதங்களை ஏற்படுத்துகின்றன. ஆயினும் படங்களின் பதிவேற்றம் தொடரும். --Anton 09:03, 26 திசம்பர் 2011 (UTC)Reply
படமெடுத்தலில் எனக்கும் ஆர்வமுண்டு. உங்களின் படிமி போன்றதொன்றை வாங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய எண்ணம். சூழ்நிலைக் காரணமாகத் தள்ளிப் போடுகிறேன். பொதுவாக விலங்கியல் பெயர்களையும், உரிய தமிழ் பெயர்களையும் இடுவது நேரத்தை விழுங்கக் கூடியது தான். இதில் ஏதேனும் ஒன்றை தவிர்த்து, தொடர்ந்து அதிகபடப் பதிவேற்றத்தைத் தொடரவும். விட்டுப்போன பிற பெயர்களை பின்னர் பொறுமையாகத் தேடி இடலாம் என்பது எனது ஆலோசனை. பறவையியலில் ஆர்வமுடையவர் நமது பரிதிமதி ஆவார். நேரம் கிடைக்கும் போது, அவரிடம் உரையாடவும். அவ்வுரையாடலில் மிக நுணுக்கமான அளவில், தங்களின் படத்தகவல்கள் மேம்படும் என்பது என் எண்ணம். உமது அறிவியல் தமிழ் பங்களிப்பை தொடர்க . மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
மிக்க நன்றி! என்னிடமுள்ள பட்டாம்பூச்சி படங்கள் சிலவற்றை பதிவேற்றிய பின் மீண்டும் பறவைகளின் படங்களை பதிவேற்றலாம் என எண்ணியுள்ளேன். பட்டாம்பூச்சிகளின் தமிழ் பெயர்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகவுள்ளது. ஆகவே நீங்கள் குறிப்பிட்டபடியே பட்டாம்பூச்சிகளின் தமிழ்ப் பெயர்களைத் தவிர்த்து பதிவேற்றுகிறேன். --Anton 05:56, 1 சனவரி 2012 (UTC)Reply
பறவைகள் பெயர்கள் குறித்த மின்னூல் ஒன்றினை அனுப்ப, தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தேடினேன். கிடைக்கவில்லை.நான் தங்களுக்கு அனுப்ப விரும்பிய நூல், நல்லவேளையாக நூலகத்திலேயேக் கிடைக்கிறது. காணவும். ஏதேனும் இடர் இருப்பின், எனது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். tha.uzhavan(ஜிமெயில்).பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
நன்றி! உங்களுக்கு ஓர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் --Anton 04:12, 5 சனவரி 2012 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறந்த படக்கலைஞர் பதக்கம்
காமன்சில் உங்கள் பங்களிப்பு கண்டு வியந்தேன். அருமையான படங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள படங்களைத் தமிழாக்கித் தருவதும் மிகச் சிறப்பு. இதனை முன்னிட்டு இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறேன் - இரவி (பேச்சு) 12:17, 10 மார்ச் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி!--Anton (பேச்சு) 12:25, 10 மார்ச் 2012 (UTC)

அன்டொன், இரவியோடு நானும் சேர்ந்தே இப்பதக்கம் அளிப்பதாகக் கொள்ளுங்கள்! உங்கள் படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை! அருள்கூர்ந்து தொடர்ந்து பற்பல அரிய படங்களை எடுத்து கலைச்செல்வம் சேருங்கள்! நீங்கள் ஆர்வமாய்த் தமிழ் விக்கிப்பீடியாவிலும் பங்குகொள்வது அரியதோர் நல்வரவு தமிழ்விக்கிக்கு. வாழ்க உங்கள் கலைத்திறம், பகிர்வுணர்வு! --செல்வா (பேச்சு) 13:21, 10 மார்ச் 2012 (UTC)
நன்றி! --Anton (பேச்சு) 17:43, 10 மார்ச் 2012 (UTC)

நன்றி

தொகு

உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். உங்களைப் போன்ற பலரும் தமிழ் விக்கிப்பீடியாவின் இணைந்து பங்களிப்பதே, இன்னும் கூடிய உற்சாகத்துடன் அனைவரையும் பங்களிக்க வைக்கிறது. நன்றி.--இரவி (பேச்சு) 07:17, 14 மார்ச் 2012 (UTC)

வாழ்த்துகள்

தொகு
  தமிழ் விக்கி ஊடகப் போட்டி பரிசு
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் நீங்கள் தொடர் பங்களிப்பாளர் பரிசு பெற்றுள்ளீர்கள்.

பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை உங்களுக்கு அனுப்பி வைக்கப் பின்வரும் விவரங்களை tamil.wikipedia@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்:

1) சான்றிதழில் இடம் பெற வேண்டிய பெயர் (தமிழில்)

2) முழு அஞ்சல் முகவரி

3) வசிக்கும் நாடு

--சோடாபாட்டில்உரையாடுக 20:31, 29 மார்ச் 2012 (UTC)

விக்கி ஊடகப் போட்டியில் முனைப்புடன் தொடர்ந்து பங்களித்து பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் !! உங்களது பங்களிப்பால் பல பயனுள்ள படிமங்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு கிடைத்துள்ளன.--மணியன் (பேச்சு) 13:19, 30 மார்ச் 2012 (UTC)
வணக்கம் அண்டன்.. இலங்கை குறித்த தங்களின் ஊடகப் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:12, 30 மார்ச் 2012 (UTC)
வணக்கம் போட்டியில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்கள் --Iramuthusamy (பேச்சு) 15:03, 30 மார்ச் 2012 (UTC)
அன்ரன், விக்கி ஊடகப் போட்டியில் பரிசு பெற்ற தங்களுக்கு எனது வாழ்த்துகள். தங்கள் படிமங்கள் அனைத்தும் மிகவும் அருமை. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளைச் செலுத்துவீர்கள் என நம்புகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 21:27, 30 மார்ச் 2012 (UTC)
ஊடகப்போட்டியில் தொடர் பங்களிப்பாளர் பரிசைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். உங்கள் பங்களிப்புக்கள் தொடரட்டும்.--கலை (பேச்சு) 22:38, 30 மார்ச் 2012 (UTC)
தாங்கள் ஊடகப்போட்டியில் தொடர் பங்களிப்பாளர் பரிசு பெற்றது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:06, 31 மார்ச் 2012 (UTC)
வாழ்த்துக்கள் அண்டன் --கலாநிதி 17:54, 1 ஏப்ரல் 2012 (UTC)
உங்களின் ஒளிப்படங்களின் தரத்திற்குக் கிடைத்த வெற்றி இது. மேலும் சிறப்பாகச் செயல்படுங்கள்; விக்கிப்பீடியாவிலும் பங்களிக்க வேண்டுகிறேன். --பரிதிமதி (பேச்சு) 03:46, 8 ஏப்ரல் 2012 (UTC)
நான் வாழ்த்துக்கூறப் பிந்தி விட்டேன் அன்ரன். இலங்கையில் இருந்து அதுவும் மட்டக்களப்பில் இருந்து(நானும் மட்டக்களப்பில் உள்ளவன் என்பதால்) வெற்றிபெற்றுள்ள உங்களுக்கு எனது மனமாந்த வாழ்த்துக்கள். விக்கி பற்றி இலங்கையில் அறிமுகப் பட்டறைகளை செய்வதில் உங்களுடன் சேர்ந்து செயற்படலாம் என எண்ணுகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:57, 9 ஏப்ரல் 2012 (UTC)

அன்டொன், தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் நீங்கள் பெற்ற பரிசிற்கு என் நல்வாழ்த்துகள். போட்டியும் பரிசுகளும் ஒருபுறம் இருக்க உங்கள் படங்கள் என் கணிப்பில் உண்மையிலேயே உலகத்தரம் வாய்ந்தவை. தமிழ்ச்சூழலில் காணப்படும் உயிரினங்கள் முதலியவற்றையும், பிறவற்றையும் நீங்கள் விடாது உங்கள் மிக அருமையான ஒளிப்படக்கலை நுட்ப அறிவோடும் ஆர்வத்தோடும் பதிவு செய்து வாருங்கள். அவை மாபெரும் பெருமையையும் பயனையும் அளிக்கும் என்று திண்ணமாக நம்புகின்றேன். நீங்கள் எடுத்திருந்த பறவைகளின் படங்களை அவ்வளவு அழகாக நான் எங்கும் கண்டதில்லை! அவற்றை அப்படி படம் எடுப்பதும் அவ்வளவு எளிதும் அல்ல (நல்ல ஒளிப்படக்கருவி இருந்தாலும்). மீண்டும் என் நல்வாழ்த்துகள்!!--செல்வா (பேச்சு) 15:35, 3 சூன் 2012 (UTC)Reply


சுண்ணாம்புக் கல்

தொகு

ஒத்தாசைப் பக்கத்தில் உங்களுக்கான செய்தி உள்ளது. --மதனாஹரன் (பேச்சு) 09:55, 23 மார்ச் 2012 (UTC)

பறவைகள் பற்றி பக்கங்கள்

தொகு

அண்டன்! பறவைகள் பற்றிய பக்கங்களை எழுதுங்கள். (வெள்ளைக் கண்ணி, பச்சைக் குக்குறுவான் - Brown-headed Barbet-இன் பெயரை மிகச் சரியாகக் கண்டறிந்துள்ளீர்கள் - பற்றிய பக்கங்கள் அருமையாக வருகின்றன). இயன்றவரை நானும் விரிவாக்குகின்றேன். --பரிதிமதி (பேச்சு) 04:21, 8 ஏப்ரல் 2012 (UTC)

நன்றி! --Anton (பேச்சு) 04:23, 8 ஏப்ரல் 2012 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

தொகு

வணக்கம், அன்டன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/அன்டன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், புகைப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி--இரவி (பேச்சு) 06:35, 30 மே 2012 (UTC)Reply

 Y ஆயிற்று --Anton (பேச்சு) 11:34, 30 மே 2012 (UTC)Reply

நன்றி அன்டன். தொழில் விவரத்தைச் சுருக்கமாகக் கொடுக்க வேண்டும் என்பதால் அறிமுகத்தில் சிறு திருத்தம் செய்துள்ளேன். தங்களின் ஊடகப் போட்டிப் பரிசைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். --இரவி (பேச்சு) 15:13, 30 மே 2012 (UTC)Reply

நன்றி இரவி. நல்லது!--Anton (பேச்சு) 15:39, 30 மே 2012 (UTC)Reply
வணக்கம் அன்டன். இன்றிலிருந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்களைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் இடம்பெறும். தங்கள் பங்களிப்புகள் மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி--சண்முகம் (பேச்சு) 18:48, 3 சூன் 2012 (UTC)Reply

நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்

தொகு

அன்ரன், நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இரண்டு வார்ப்புருக்கள் தேவையில்லை. ஒன்று போதும். ஆங்கிலப் பக்கத்தைத் தமிழுக்கு வழிமாற்றி விடுங்கள். பார்க்க: வார்ப்புரு:Country data Iraqi Kurdistan. நன்றி.--Kanags \உரையாடுக 02:07, 2 சூன் 2012 (UTC)Reply

நன்றி! வழிமாற்றி விடுகிறேன் --Anton (பேச்சு) 02:11, 2 சூன் 2012 (UTC)Reply

-----

தொகு

வணக்கம் Anton. தேவாலயங்கள் பற்றிய கட்டுரைகளை தொகுத்து வருகிறீர்கள். கூடவே அதற்கான சான்று அல்லது குறிப்புகளை இட்டுவிடுங்கள். பின்னர் இடலாம் என தற்போது விட்டால் அது அப்படியே நின்று போய்விடும். நானும் அவ்வாறே இப்போது :( முழிக்கிறேன்.. நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:39, 2 சூன் 2012 (UTC)Reply

வணக்கம், நன்றி! நல்ல ஆலோசனை. இத்துடன் தேவாலயங்கள் பற்றிய கட்டுரைகளை நிறுத்திவிட்டேன். இன்று ஆரம்பித்த கட்டுரைகளுக்கு என்னிடமுள்ள படங்களைப் பதிவேற்றி, கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு தேவையானவற்றைச் செய்யத் தொடங்கவுள்ளேன். ஏற்கெனவேயுள்ள கட்டுரைகளும் சீர் செய்ய வேண்டியே உள்ளன. :( --Anton (பேச்சு) 15:51, 2 சூன் 2012 (UTC)Reply

கிறித்தவக் கோவில்களுக்குப் பெயரிடும் முறை பற்றி

தொகு

Anton, கடந்த சில நாட்களாக நீங்கள் இசுரயேல் நாட்டிலுள்ள பல கிறித்தவக் கோவில்கள் பற்றிய இடுகைகள் செய்துள்ளதைப் பார்த்தேன். பாராட்டுகள்! அக்கோவில்களுக்கு நீங்கள் இட்டுள்ள பெயர்கள் கிறித்தவ வழக்கத்துக்கு ஏற்ப முறைப்படுத்தப்பட வேண்டும். இக்கோவில்கள் ஒவ்வொன்றின் பெயர்களும் விவிலிய நிகழ்ச்சிகளின் அடிப்படையில் உருவானவை. எனவே, அந்நிகழ்ச்சிகள் விவிலியத்தில் எவ்வாறு விளக்கப்படுகின்றனவோ அவ்வாறே கோவில்களின் பெயர்களும் அமைவதுதான் முறையாகும்.

ஒரு சில எடுத்துக்காட்டுகள்: Church of the Nativity, Visitation, Condemnation and Imposition of the Cross, Transfiguration. இவற்றிற்கு முறையே "இயேசு பிறப்புக் கோவில்", "மரியா சந்திப்புக் கோவில்", "இயேசு கண்டனம் செய்யப்பட்டு சிலுவை சுமத்தப்பட்ட கோவில்", "இயேசு தோற்றம் மாறிய கோவில்" என்று பெயரிடுவதுதான் முறை. எனவே, நீங்கள் கொடுத்த பெயர்களை மாற்றி அமைக்கின்றேன்.

மேலும் கோவில் பெயர்களைத் தமிழாக்கம் செய்ய விரும்பினால் என்னுடைய பேச்சுப் பக்கத்தில் தகவல் இடுங்கள். நான் சரியான பெயர்களை ஆக்கித் தருகின்றேன். முனைப்பான உங்கள் பங்களிப்புக்கு என் உளமார்ந்த பாராட்டுகள். வளர்க உங்கள் விக்கிப் பணி! --பவுல்-Paul (பேச்சு) 19:24, 2 சூன் 2012 (UTC)Reply

தாராளமாக மாற்றி விடுங்கள். உங்களிடம் கேட்கலாமென்று நினைத்திருந்தேன். ஆனாலும், உங்களுக்கு தொல்லையாக இருக்குமோ என்பதால் நானே அதைச் செய்து விட்டேன்.
  • கோவில் என்பதா தேவாலயம் என்பதா பொருத்தமாக இருக்கும்? இலங்கையில் ஓர் வழக்கம் உள்ளது. அதாவது கிறிஸ்தவக் கோவில் (Chuch) என்பது தேவாலயம் எனவும் இந்துக் கோவில் (temple) என்பது கோவில் என்பவும் அநேகமாக அழைக்கப்படும். எனவே, இயேசு பிறப்புக் கோவில் என்பது இயேசு பிறப்புத் தேவாலயம் எனவும் இருந்தால் பொருத்தமாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. ஆயினும் சரியானது எதுவோ அதற்கேற்ப மாற்றிவிடுங்கள். எனக்கு ஆட்சேபனையில்லை. உங்கள் ஆலோசனைக்கும் உதவிக்கும் மிக்க நன்றி! --Anton (பேச்சு) 00:51, 3 சூன் 2012 (UTC)Reply

கோவில் என்பதே தமிழ்ச் சொல் (ஆலயம்-ஆன்மா லயப்படும் இடம், லயம் தமிழ்ச் சொல்லல்ல). ஆகவே, அதனையே பயன்படுத்துவது பொருத்தமானது. --மதனாகரன் (பேச்சு) 12:10, 3 சூன் 2012 (UTC)Reply

தாய்ப்பகுப்பு

தொகு

அன்ரன், ஐரோப்பிய நாடுகள் என்ற பகுப்பு தாய்ப்பகுப்பாக அந்தந்த நாடுகளின் பெயர்களில் உள்ள பகுப்புகளுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. தாய்ப்பகுப்புக்குள் உள்ளதால் தனியே அந்தந்த நாடுகளின் கட்டுரைகளில் சேர்ப்பது தேவையில்லை.--Kanags \உரையாடுக 02:42, 3 சூன் 2012 (UTC)Reply

 
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், AntanO. உங்களுக்கான புதிய தகவல்கள் Kanags இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


பாமினி மின்னஞ்சல்

தொகு
 
வணக்கம். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது - உங்கள் மின்னஞ்சல் கணக்கைப் பார்க்கவும்!
நீங்கள் இந்த அறிவிப்பை {{மின்னஞ்சல்}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்!


ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:45, 3 சூன் 2012 (UTC)Reply

முதற்பக்க அறிமுக வாழ்த்துக்கள்

தொகு

உங்கள் அறிமுகத்தை முதற்பக்கத்தில் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:45, 3 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துக்கு மிக்க நன்றி!--Anton (பேச்சு) 00:58, 4 சூன் 2012 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் கண்டேன். வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:13, 4 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துக்கு மிக்க நன்றி!--Anton (பேச்சு) 02:04, 4 சூன் 2012 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் கண்டு தங்களைப் பற்றி அறிந்துகொண்டேன். தங்கள் சீரிய விக்கிப்பணி மென்மேலும் சிறந்திட வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 01:37, 4 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துக்கு மிக்க நன்றி!--Anton (பேச்சு) 02:04, 4 சூன் 2012 (UTC)Reply
  • Anton, முதற்பக்க அறிமுகம் கண்டேன். மகிழ்ந்தேன். விக்கியின் வளர்ச்சிக்கு உங்களைப் போன்ற இளம் தலைமுறையினர் பங்களிப்பு மிகத் தேவை. பாராட்டுகள்! மேலே "இசுரயேலில் கிறித்தவக் கோவில்கள்" பற்றிய உரையாடலைத் தொடர்ந்து, கட்டுரைத் தலைப்புகளைப் பொருத்தமாக மாற்றுகிறேன். கிறித்தவம் தொடர்பாகச் சொல்லாக்கம் செய்வதில் உதவி தேவை எனின் தயங்காது கேளுங்கள். தொடர்க உங்கள் விக்கிப் பணி!--பவுல்-Paul (பேச்சு) 01:58, 4 சூன் 2012 (UTC)Reply
வாழ்த்துக்கு மிக்க நன்றி! உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி. தேவையேற்படும்போது தொடர் கொள்கிறேன்.--Anton (பேச்சு) 02:04, 4 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 02:31, 4 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துக்கு மிக்க நன்றி!--Anton (பேச்சு) 07:18, 4 சூன் 2012 (UTC)Reply
வாழ்த்துக்கு மிக்க நன்றி!--Anton (பேச்சு) 07:18, 4 சூன் 2012 (UTC)Reply

அன்ரன், உங்கள் அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:19, 4 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துக்கு மிக்க நன்றி!--Anton (பேச்சு) 08:57, 4 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துக்கள் அண்டன். இன்னும் நிறைய காலக்கோட்டு கட்டுரைகளை உருவாக்குங்கள். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:47, 5 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துக்கு மிக்க நன்றி!--Anton (பேச்சு) 15:03, 5 சூன் 2012 (UTC)Reply

Anton, தாங்கள் பங்களிப்புகள் மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். :) --எஸ்ஸார் (பேச்சு) 11:07, 5 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துக்கு மிக்க நன்றி! --Anton (பேச்சு) 15:03, 5 சூன் 2012 (UTC)Reply

முதற்பக்கத்தில் கண்டதில் உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி. கலைப்பணி மென்மேலும் தொடரட்டும்.--பரிதிமதி (பேச்சு) 14:15, 6 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துக்கு மிக்க நன்றி!--Anton (பேச்சு) 23:49, 6 சூன் 2012 (UTC)Reply

நிழற்படக்கலையிலும் சிறந்தவரான உங்களைக் கண்டபொழுது மகிழ்ந்தேன். அவ்வப்பொழுது படம் கொடுங்கள்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

வாழ்த்துக்கு மிக்க நன்றி! --Anton (பேச்சு) 16:07, 10 சூன் 2012 (UTC)Reply

பட உதவி கோரல்

தொகு

கரப்பு பற்றி ஒரு கட்டுரையை ஆரம்பித்தேன். ஆயினும் தமிழ்நாட்டில் இச்சொல் பயன்பாட்டில் இல்லை போல் தெரிகின்றது. இதனால் பயனர்கள் புரிந்து கொள்ளுதலில் சிரமம் உள்ளது. உங்களால் பட இணைப்பும் மேலதிக தகவல்களும் தரமுடியுமெனின் இக்கட்டுரையை மேம்படுத்த முடியும். நன்றிகள் --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:43, 11 சூன் 2012 (UTC)Reply

உடனடியாக என்னிடம் படம் இல்லை. தாமதமாக என்னால் படம் எடுத்துத்தர முடியும். தேவையானால், வரைபடமாக்கியும் தரலாம். தற்போதைக்கு என்னால் நூறு வருட மட்டுநகர் நினைவுகள் நூலிலிருந்துதான் எடுக்க முடிந்தது. பார்க்கவும்: கரப்பு --Anton (பேச்சு) 05:37, 11 சூன் 2012 (UTC)Reply
மிக்க நன்றிகள் அன்ரன். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:16, 11 சூன் 2012 (UTC)Reply

ஒத்தாசை பக்கத்தொடர்ச்சி..

தொகு

ஒத்தாசைப்பக்கத்தில் தொடர்ந்துள்ளேன். வாரம் ஒரு மணிநேரமே என்னால் விக்கிப்பீடியாவுக்கு வர இயலும்.இதனால், ஏதேனும் இடர் இருப்பின் மன்னிக்கவும். பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

வணக்கம் அன்டன், தமிழ்நாட்டில் college என்பது கல்லூரி (இதுவே உயர்கல்வி) எனவும் school என்பது பள்ளி (பாடசாலை) எனவும் அழைக்கப்படும். இவ்வார்ர்புருவில் உள்ள உயர்கல்வி (school), பாடசாலை (college) எனவும் இருப்பது சற்று வித்தியாசமாக தோன்றுகிறது (எதிப்பதம் போல) :).. அதே வார்ப்புருவில் இன்னும் இரண்டு labelகள் இணைக்க இயலுமா? college(tamilnadu) என்பது போல..இல்லையெனில் முழுவதும் நகலெடுத்து மாற்றிக் கொள்ளலாம் (வார்ப்புரு:பயனர் தகவல் பெட்டி தமிழ்நாடு என்று). --சண்முகம்ப7 (பேச்சு) 11:14, 11 சூன் 2012 (UTC)Reply

வணக்கம் சண்முகம், இப்போது சரியாகவுள்ளதா எனப்பாருங்கள்? --Anton (பேச்சு) 11:20, 11 சூன் 2012 (UTC)Reply
இப்பொழுது சரியாகிவிட்டது. நன்றி Anton! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:38, 11 சூன் 2012 (UTC)Reply
சரியாகவே உள்ளது நன்றி.. ஆனால் உங்களுக்கு (இலங்கை வழக்கில்) வேறுபடாதா?--சண்முகம்ப7 (பேச்சு) 11:40, 11 சூன் 2012 (UTC)Reply
பாரிய வேறுபாடு இல்லை. தேவைப்பட்டால் labelகள் மூலம் இணைத்துவிடலாம். --Anton (பேச்சு) 12:12, 11 சூன் 2012 (UTC)Reply

பதில்

தொகு
 
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், AntanO. உங்களுக்கான புதிய தகவல்கள் Kalaiarasy இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


நன்றிகள்!

தொகு

வணக்கம் அண்டன்!
உங்களின் களைப்படையாத சீரிய தொண்டினை நான் கவனித்து வந்தாலும், உங்களுடன் உரையாடுவது இதுவே முதல்முறை. அன்னைத் தமிழுக்கு நீங்கள் தொடர்ந்து அளப்பரிய பணியினை செய்தல் வேண்டும் என்பது எனது வேண்டுகோள், நன்றி! - அன்புடன்...--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:12, 17 சூன் 2012 (UTC)Reply

வணக்கம் செல்வசிவகுருநாதன்! தங்கள் பாராட்டுதலுக்கும் செய்திக்கும் மிக்க நன்றி! உங்களைப் போன்ற தமிழ் மீது ஈடுபாடுள்ளவர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! --Anton (பேச்சு) 17:23, 17 சூன் 2012 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

வணக்கம் அன்டன் உங்கள் கட்டுரைகள் அருமை. மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் என்றொரு கட்டுரை விக்கியில் எழுதப்படாமலேயே உள்ளது. நான் எழுதுவதற்கு விரும்பினாலும் மிக நீண்ட நாட்களாக கொழும்பில் வசித்து வருவதால் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் ஒரளவு மறந்தே போய்விட்டது. உங்களால் முடிந்தால் எழுதுங்கள். நானும் என்னால் முடிந்தளவு உதவுகிறேன், உதவிக்கு யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் கட்டுரையை பாருங்கள். நன்றி--Sank (பேச்சு) 10:22, 21 சூன் 2012 (UTC)Reply

மிகவும் பயனுள்ள யோசனை, சங்கீர்த்தன். அதற்கான தகவல்களை சேகரித்து வைத்துள்ளேன். மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன். ஏறக்குறை எழுத ஆரம்பிக்க இருக்கையில் உங்கள் கருத்தும் வந்து சேர்ந்துள்ளது. :)--Anton (பேச்சு) 10:27, 21 சூன் 2012 (UTC)Reply
மிகவும் மகிழ்ச்சி மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் கட்டுரையை படிக்க ஆவலாய் உள்ளேன்..:)--Sank (பேச்சு) 11:10, 21 சூன் 2012 (UTC)Reply
பாரட்டுக்கள் அன்ரன் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் கட்டுரை சிறப்பாயுள்ளது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:42, 22 சூன் 2012 (UTC)Reply
நன்றி. இன்னும் சில பகுதிகள் தொகுக்கப்பட வேண்டியுள்ளது. --Anton (பேச்சு) 08:00, 22 சூன் 2012 (UTC)Reply

இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள்

தொகு

நீங்கள் தொகுத்துக் கொண்டு இருக்கும் போது இடையூறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். மன்னிக்க. "இப்பேச்சு வழக்குகள் தமிழர், இலங்கைச் சோனகர், பறங்கியர், வேடுவர் மற்றும் சிங்களவர்களால் பாவிக்கப்படுகின்றன." என்ற வசனம் சரியான பொருளை உணர்த்த வில்லை என்று நினைக்கிறேன். அவர்களின் இலங்கைத் தமிழர்கள், இலங்கை முஸ்லீம்களுக்கு, கரையோர வேடர், மலையகத் தமிழர் ஆகியோருக்கு தமிழ் முதன்மை/தாய் மொழியாக அமைய, மற்றவர்களில் சிலர் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகிறார்கள் என்ற பொருள் வர வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும்:

  • யாழ் (வட)
  • கிழக்கு (கிழக்கு)
  • நீர்கொழும்பு (தெற்கு ?)
  • மலையகம் (மத்திய)
  • மேற்கு ?? இது தனி வழக்கா என்று தெரியவில்லை. முல்லைத்தீவு/வன்னித் தமிழும் தனி வழக்காக கருதப்படுகிறதா என்றும் தெரியவில்லை?
இன்னுமொரு குறிப்பு. பாவித்தல் என்பது இலங்கைத் தமிழ் வழக்கு. பயன்படுத்தல் என்பதே எலோருக்கும் புரியும்!!

--Natkeeran (பேச்சு) 16:42, 26 சூன் 2012 (UTC)Reply

பெரிய இடையூறு ஒன்றுமில்லை. :) இங்கு 5 வகை காணப்பட்டன. ஆங்கில விக்கி 3 வகைகளைக் காட்டியது. நீங்கள் சொல்வதிலும் உண்மையுள்ளது. முடியுமானவரை தகவல்களைச் சேர்க்க முயற்சிக்கிறேன். உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி! --Anton (பேச்சு) 17:05, 26 சூன் 2012 (UTC)Reply

கொழும்பு

தொகு

இவ்வார கூட்டு முயற்சியான கொழும்பு கட்டுரையை மேம்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 08:27, 3 சூலை 2012 (UTC)Reply

முரண்பாடு தவிர்ப்பு உரையாடல்கள்

தொகு

நீங்கள் முரண்பாடு தவிர்ப்பு உரையாடல்களில் முனைப்புடன் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கின்றது. இன்றைய சூழலில் விக்கியின் வளர்ச்சியில் இத்தகைய ஈடுபாடும் மிக முக்கியமுடையதே.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:43, 13 சூலை 2012 (UTC)Reply

நன்றிகள்! முரண்பாடுகளில் நானும் சிக்கிக் கொள்ளாதிருக்கவே விரும்புகிறேன். :)--Anton (பேச்சு) 12:33, 13 சூலை 2012 (UTC)Reply


பதக்கம்

தொகு
  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
அன்டன், யூதம்-இசுரேல் தொடர்பான பல கட்டுரைகள், அறுபட்ட கோப்புகளைச் சீர்செய்வது போன்ற பராமரிப்புப் பணிகள் என்று உங்கள் பன்முகப் பங்களிப்பும் உழைப்பும் வியக்க வைக்கிறது. ஊடகப் போட்டி நடத்தியதற்கு நீங்கள் ஒருவர் கிடைத்ததே போதும் :) தொடர்ந்து சிறந்த பங்களிப்புகளை நல்க வாழ்த்துகிறேன். இரவி (பேச்சு) 08:00, 14 சூலை 2012 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி இரவி!--Anton (பேச்சு) 08:10, 14 சூலை 2012 (UTC)Reply

சிறிய தொகுப்புகள்

தொகு

வணக்கம் அன்டன். அறுபட்ட கோப்புகளை நீக்கும் தொகுப்புகளை சிறிய தொகுப்புகளாக குறித்தால் எளிதில் அண்மைய மாற்றங்களில் ஏனைய தொகுப்புகளை காண இயலும்.:)..--சண்முகம்ப7 (பேச்சு) 10:06, 14 சூலை 2012 (UTC)Reply

நன்றி சண்முகம். குறித்துக் கொள்கிறேன்--Anton (பேச்சு) 10:08, 14 சூலை 2012 (UTC)Reply

முதற்பக்க சிறப்புப்படங்கள்

தொகு

அன்ரன், முதற்பக்கத்தில் வெளியிடுவதற்கேற்ற சிறந்த படங்களை விக்கிமீடியா பொதுவில் இருந்து தெரிவு செய்து இங்கு பரிந்துரைக்க முடியுமா? குறிப்பாக விக்கிஊடகப் போட்டிகளுக்கு வந்த படிமங்களுக்கு முன்னுரிமை வழங்கலாம். ஒரேயொரு நிபந்தனை: படிமங்களுக்கு ஏற்ற கட்டுரைகள் தமிழ் விக்கியில் இருக்க வேண்டும். அவை குறுங்கட்டுரைகளாகக் கூட இருக்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 01:45, 14 சூலை 2012 (UTC)Reply

ஒன்றினைப் பரிந்துரை செய்துள்ளேன். இது சரியாயின், மேலும் சில பரிந்துரைகளை இடுகிறேன். --Anton (பேச்சு) 01:55, 14 சூலை 2012 (UTC)Reply
நன்றி அன்ரன். சூலை 18 இல் முதற்பக்கத்தில் வரும்.--Kanags \உரையாடுக 04:51, 14 சூலை 2012 (UTC)Reply

பெயர்

தொகு

வணக்கம் அன்டன்,

 

இந்த செடியின் பெயர் தெரியுமா?--சண்முகம்ப7 (பேச்சு) 09:13, 18 சூலை 2012 (UTC)Reply

இதன் தமிழ்ப் பெயர் தெரியாது. en:Dypsis lutescens என்ற இனம் சட்டிகளில் வைத்து வளர்க்கப்படும் சிறிய வகைச் செடி. en:Phoenix roebelenii என்பது பெரிய வகை வீடுகளில் வளர்ப்பது குறைவு. பூங்கா, பொது இடங்களில் வளர்க்கப்படும். பொதுவாக உள்ளூரில் Palm tree என அழைப்பர். படத்திலுள்ளது Dypsis lutescens போன்று உள்ளது. --Anton (பேச்சு) 11:11, 18 சூலை 2012 (UTC)Reply
எனக்கும் சரியாக தெரியவில்லை, இது காடுகளில் தானாக வளரும் செடி, மேலும் இதை அழகுக்காக கோவில், திருமணம் போன்ற இடங்களில் கட்டுவர். தமிழில் பரணி or தரணி செடி (சரியாகத் தெரியவில்லை) என அழைப்பார்கள். நீங்கள் கூறுவது போல பேரிச்சை மரத்தின் அடிப்பகுதி போன்ற ஒரு சிறிய கிழங்கு போன்ற பகுதியில் இருந்து இந்த இலைகள் வளரும். பெரியவர்களுக்கு இதன் தமிழ்ப் பெயர் தெரிந்திருக்கலாம். பதிவேற்றி விட்டேன் ஆனால் பெயர் சரியாக தெரியாததினால் உங்களிடம் கேட்டேன் :). பார்க்கலாம் வேறு யாருக்கவது தெரிகிறதா என்று... நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 11:58, 18 சூலை 2012 (UTC)Reply

Carnivore vs. Carnivora

தொகு
  • en:Carnivora என்பது அறிவியல் வகைப்பாட்டுப் பெயர். இது பாலூட்டிகள் என்னும் வகுப்பில் ஊனுண்ணி என்னும் வரிசையின் பெயர். ஆனால் en:Carnivore என்பது பொது வழக்கில் உள்ள ஆங்கிலச்சொல். அது உயிரை உண்ணும் எந்த உயிரினமாகவும் இருக்கலாம். அறிவியல் வரையறை அன்று, வகைப்பாடும் அன்று. Carnivore என்னும் சொல் இறைச்சியை உண்ணும் பாலூட்டி வகை விலங்குகளையும், அவற்றில் சேராத சில புழு பூச்சிகளையும் தாவரங்களையும் குறிக்கும். எனவே ஊனுண்ணி (Carnivora) என்பது பாலூட்டி அறிவியல் வகுப்பின் உள்ளே வரும் ஒரு வரிசையில் வரும் விலங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் (எனவே புழு, பூச்சி, தாவரங்கள் இதில் அடங்காது). --செல்வா (பேச்சு) 20:18, 18 சூலை 2012 (UTC)Reply
விளக்கத்திற்கு மிக்க நன்றி!--Anton (பேச்சு) 01:30, 19 சூலை 2012 (UTC)Reply

வரைகலை உதவி தேவை

தொகு

அன்டன், ஊடகப் போட்டி விளம்பரத்துக்குச் செய்த பதாகைகள் போல் சில பதாகை வடிவமைப்புகளைச் செய்து தர முடியுமா? மீண்டும் விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் கொண்டு வரலாம் என்று எண்ணியுள்ளோம். ஆனால், போன முறை மாதிரி வெறும் உரையாக இல்லாமல் நன்கு வடிவமைக்கபட்ட பதாகைகளையும் முயன்று பார்க்கலாம் என்று தோன்றுகிறது. http://www.hubspot.com/examples-of-effective-calls-to-action/ சொல்வது போன்ற கருத்துருக்களையும் பதாகை வடிவமைப்பில் கொண்டு வர முடிந்தால் நன்றாக இருக்கும்--இரவி (பேச்சு) 09:34, 28 சூலை 2012 (UTC)Reply

ஆம், இரவி. எப்படியென்ற விடயங்களைக் குறிப்பிடுங்கள். --Anton (பேச்சு) 00:16, 29 சூலை 2012 (UTC)Reply

நன்றி, அன்டன். மின்மடல் / அரட்டையில் தொடர்வோமா?--இரவி (பேச்சு) 16:33, 29 சூலை 2012 (UTC)Reply

முதற்பக்கப் படிமம் அறிவிப்பு

தொகு


படமெடுக்கும் முறையறிய?

தொகு

மேலுள்ள படத்தை எப்படி எடுத்தீர்கள்? புகைப்படம் ஜோர்.--203.99.218.140 09:07, 7 ஆகத்து 2012 (UTC)Reply

நன்றி. இவ்வகை காட்டுயிர் ஒளிப்படக்கலை ஆகும். வழமையான ஒளிப்படக்கலை நுட்பங்களுடன் உயிரினங்களின் நடத்தை பற்றிய அறிவும், தொலை தூர வில்லையும் தேவை. பொதுவாக 400மிமி - 800மிமி வரையான வில்லை பாவிக்கப்படும். நான் பாவித்தது 250மிமி. இது சற்றுக் கடினமானது. ஏனென்றால் மிகச் சிறிய 10 செ.மி. தேன்சிட்டை தெளிவாக படம்பிடிக்க 400மிமி க்கு மேல் தேவை. அப்பறவையின் நடத்தை பற்றிய அறிவு இருந்ததால் கிட்டத்தட்ட 10 அடிக்கும் குறைந்த தூரத்தில் அணுக முடிந்தது. ஒளிப்படக் கருவியின் தொழில் நுட்பத் தகவல்களை இங்கு பார்க்கலாம்: [விபரம்]−முன்நிற்கும் கருத்து Anton (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மட்டக்களப்பின் பிரதேச செயலாளர் பிரிவுகள்

தொகு

ஆங்கில விக்கி [கட்டுரையில் http://en.wikipedia.org/wiki/Divisional_Secretariats_of_Sri_Lanka] கோறளைப்பற்று மத்தி, மண்முனை தென்மேற்கு ஆகிய இரண்டும் இல்லை. ஆனால் மட்டக்களப்பு பிரதேசச் செயலாளர் பிரிவு உள்ளது. அதனால் குழப்பமாக உள்ளது. திருத்தவும்.--பிரஷாந் (பேச்சு) 08:48, 14 ஆகத்து 2012 (UTC)Reply

CSSவில் வார்ப்புரு

தொகு

விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#காவடியாட்டம் என்ற பக்கத்தில் {{Reflist}.} என்ற வார்ப்புரு CSS-இனை பாவிக்கிறது என்று கூறியிருந்தீர்கள். பொதுவாக ஒரு வார்ப்புருவினை, அங்கு(CSS) வைப்பதால், எத்தகைய நன்மை அதிகம். ஏனென்றால், விக்சனரியில் ஒரு சொல்லின் கட்டமைப்பில் பல வார்ப்புருக்கள் இருக்கும். இடம் மாற்றவே, ஆர்வத்தால் கேட்கிறேன்.-- உழவன் +உரை.. 05:38, 16 ஆகத்து 2012 (UTC)Reply

தாமதத்திற்கு வருந்துகிறேன். இங்குள்ளதைப் பாருங்கள் en:Wikipedia:Citation templates. இதனை நானும் சற்று ஆழமாகப் பார்த்துவிட்டு மீண்டும் பதிலளிக்கிறேன். --Anton (பேச்சு) 08:28, 18 ஆகத்து 2012 (UTC)Reply
குறுகிய காலத்தில்,நாம் பல செயல்களை செய்ய வேண்டிய உலகில் வாழ்வதால், தாமதத்திற்காக எல்லாம், நாம் வருந்தவேண்டாம். ஏதேனும் வேலையாக இருந்திருப்பீர்கள் என்றே நான் புரிந்து கொள்வது வழக்கம்.விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#ஊடகப் பங்களிப்பு(கல்யான் வெர்மா) பார்த்த போது உங்களைத்தான் முதலில் நினைத்தேன். சாதரண ஈ, கொசு, கரப்பான் பூச்சி, எறும்பு போன்றவைகளின் சிறப்புகளை உங்கள் படிமிக்கண் கொண்டு பார்க்கவும். வண்ணத்துப்பூச்சியின் இறக்கை அமைவு என கோணம் மாற்றி படமெடுங்கள். அதன் அழகே அழகு. என்னிடம் உங்களிடம் இருப்பது மாதிரி, படிமியில்லை. சாதாரண குவியாடியை வைத்தே பெரிதாக்கிக் கண்டு இன்புறுகிறேன். மீண்டும் பிரிதொரு உரையாடலில் சந்திப்போம். வணக்கம்.-- உழவன் +உரை.. 05:59, 28 ஆகத்து 2012 (UTC)Reply

வணக்கம் ஆண்டன். விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் பக்கத்தில் சில படங்கள் பரிந்துரைப்பில் உள்ளது. அதில் தங்களின் படங்களும் உள்ளன. அப்படங்களுக்கான பெயர்களை அதில் இணைக்க முடியுமா? கட்டுரை இல்லாவிடினும் உருவாக்க ஏதுவாக இருக்கும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:47, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

 Y ஆயிற்று--Anton (பேச்சு) 21:12, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

மட்டக்களப்பு கட்டுரை

தொகு

அன்புடன் அன்ரன். மட்டக்களப்பு கட்டுரையில் மேம்படுத்தல் பார்த்தேன். பாராட்டுக்கள். கல்விநிலையங்கள் பற்றிய விபரிப்பை மட்டக்களப்பு மாவட்டம் எனும் கட்டுரையில் செய்தால் இன்னும் விரிவாகவும் பொருத்தமாயுமிருக்கும் என்பது எனது கருத்து.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:28, 3 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றி. கல்விநிலையங்கள் பற்றிய விபரிப்பு இதற்கு மேலும் செய்யும் எண்ணமில்லை. நீங்கள் கூறியதுபோன்று மட்டக்களப்பு மாவட்ட கட்டுரையில் செய்யலாம். அவ்வப்போது உங்கள் ஆலோசனைகளைத் தெரிவியுங்கள். இறுதியில் வரலாறு பற்றி எழுத எண்ணியுள்ளேன். --Anton (பேச்சு) 04:37, 3 செப்டெம்பர் 2012 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
அறுபட்ட கோப்புகளுள்ள விக்கிப் பக்கங்களை சீர்படுத்த தாங்கள் எடுக்கும் முனைப்பான பங்களிப்புகளைப் பாராட்டி இந்தச் சிறப்புப் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்வுறுகிறேன். மணியன் (பேச்சு) 13:18, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி மணியன்! --Anton (பேச்சு) 13:31, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நீக்கல் வேண்டுகோள்

தொகு

பொருத்தம் அற்ற விவாதத்தமுள்ள இப்பகுதியை நீக்க அல்லது வரலாற்றுடன் மூடிவிட முடியுமா? பேச்சு:இலங்கைத் தமிழில் பயன்பாட்டிலுள்ள சிங்களச் சொற்கள்#உண்மை நிலவரம் --Anton (பேச்சு) 14:20, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

மிக மோசமான, ஆபத்தான பதிப்புகளுக்கு கடைசித் தெரிவாக அவ்வாறு செய்ய முடியும். நன்றி. --Natkeeran (பேச்சு) 16:48, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

பகுப்பு உதவி

தொகு

கலாச்சாரம் என்பது தமிழ்ச் சொல்லா? கலை, சாரம் ஆகியவற்றின் இணைப்பா? இது குறித்து விளக்குங்கள்/ இதைவிட பண்பாடு என்ற சொல் பொருத்தமாக இருக்குமா? பொருத்தமாக இருந்தால், இலங்கையின் பண்பாடு என பகுப்பை மாற்றிவிடலாம். ஆகவே கேட்கிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:34, 8 செப்டெம்பர் 2012 (UTC)Reply

கலாச்சாரம் எனும் சொல் தமிழா இல்லையாவென்பது சரியாகத் தெரியாது. ஆனால் பண்பாடு என்பது தமிழ்ச் சொல். எனவே பண்பாடு என்பது பொருத்தமாக இருக்குமெனக் கருதுகிறேன். --Anton (பேச்சு) 14:44, 8 செப்டெம்பர் 2012 (UTC)Reply
ஈழவழக்கு கலாசாரம், தமிழக வழக்கு: கலாச்சாரம். கலாசாரம், பண்பாடு இரண்டும் வெவ்வேறு கருத்துள்ளவை என தமிழறிஞர் கா. சிவத்தம்பி எங்கோ கூறியதாக நினைவு.--Kanags \உரையாடுக 06:12, 9 செப்டெம்பர் 2012 (UTC)Reply

மேற்கோள் வடிவம்

தொகு

நீங்கள் ரூபெல் பிணந்தின்னிக் கழுகு கட்டுரையை கோரப்படும் கட்டுரைகளில் இருந்து இயற்றினீர்களா? நன்றிகள். அதில் கொடுத்த மேற்கோள் வடிவம் புதிதாக உள்ளதே. அதை எப்படிச் செய்ய வேண்டும்? அதில் சில பிழைகளும் உள்ளன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:50, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

ஆம் சுப்பிரமணியன், கோரப்படும் கட்டுரைகளில் இருந்துதான் இயற்றினேன். மேற்கோளையும் பிழைகளையும் திருத்திவிடுகிறேன். --Anton (பேச்சு) 06:55, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

50000 ஆண்டுகள் முன் தமிழ்

தொகு

வணக்கம் அன்ரன். நீங்கள் ஆலமரத்தடியில் தினம்ணி செய்தியை பற்றி கூறியிருந்தீர்கள். தினமணி கூறுவது யாதெனில் 50,000 ஆன்டுகலுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசுதிரேலியாவிற்கு தென்னிந்தியா வழியாக சென்ற மக்கள் கூட்டம் பேசும் தற்போதைய மொழி தமிழ் போல் இருப்பதே. நீங்கள் கேட்பதைப் பார்த்தால் அங்குள்ள தமிழ் தொடர்பான பழங்குடிகள் உங்களுக்கு வடை பாயாச உணவுடன் வாழையிழை விருந்து படைத்தால் தான் அதை நம்புவீர்கள் போலும்.:)-

நானும் அதை ஆராய்ச்சிக்கருதுகோளாக தான் பார்க்கிறேன். அதனாலேயே அதை எங்கும் மேற்கோளாக சுட்டவில்லை. மேலும் அதை எழுதியவர் பற்றிய விவரம் அறிய முடியவில்லை. ஆனால் இது தொடர்பான மற்ற ஆராய்ச்சிகளைச் செய்த ஆய்வாளர்களின் முடிவை ம்ட்டுமே மேற்கோளாக சுட்டுவதுண்டு. தினமணி செய்தியை நாம் விக்கியில் இணைக்கும் போது அதை வாதங்கள் அல்லது கருதுகோள்கள் என்ற ரீதியில் தான் இணைக்க வேண்டும். இதனால் நாம் நம்பகத்தன்மை கெடாமல் பார்த்துக் கொள்ளலாம். நம்பகத்தன்னமை என்பது நாம் விக்கிப்படுத்தும் விதத்தில் உள்ளது. வினவு தளத்தில் உள்ள கட்டுரைகளையும் நாம் கருதுகோள்கள் என்ற தலைப்பின் கீழே விடலாம். கூறியவர் ஆறாய்ச்சியாளராக இருப்பின்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:02, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் சுப்பிரமணியன், நான் சொல் வந்தது திரிவடைந்துவிட்டது. அவ்வாறான தகவல்கள் உள்ள மேற்கோள்களை பாவித்தால் என்னவாவது என்பதுதான் என் கேள்ளியே தவிர, அது சரியென்பது என் கருத்தல்ல. முகநூலில் இணைத்ததற்கு நன்றி தென்காசி சுப்பிரமணியன். என்பதை அடைப்புக்குறிக்குள் இட தவறிவிட்டதால் கேள்வி உங்களுக்குப் போலாகிவிட்டது. தகவலுக்காக இதையும் பார்க்கவும்: http://www.youtube.com/watch?v=Z9Ws-DG_HgA&feature=share

தமிழ் தொடர்பான பழங்குடிகளிடம் நல்ல வடை பாயாச உணவு கிடைக்குமா, சுப்பிரமணியன்? :-) --Anton (பேச்சு) 07:23, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வலைப்பதிவர் ஒருவர் எத்தியோப்பிய அரசர்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களே எனக் கூறியுள்ளதையும் பாருங்கள்.. எத்தியோப்பியாவிலும் வடை பாயாச விருந்து கிடைக்கும். என்ன தென்காசியாரே! இப்ப எங்கே போகப்போறீங்க! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:41, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வலைப்பதிவில் எதுவும் எழுதலாம். மேலேயுள்ள யூடியூப்பில் குறிப்பில் இப்படி எழுதியுள்ளார்கள் "More than 60% of English words' roots could be had from Tamil". ஆனால், நிருபிக்க வேண்டுமே. எனக்கும் தாய் மொழி மீது காதல்தான். ஆனால், பழைய பெருமைகளில் மட்டுமே ஊறிக்கிடக்க விருப்பமில்லை. தமிழின் இன்றைய நிலை உங்களுக்கு நன்றாகவே புரியும், தமிழ்க்குரிசில்.
எத்தியோப்பியாவிற்குப் போய் உங்கள் அரசர்களுக்கு பெயர் வைத்ததே நாங்கள் என்றால் பாயாச கிடைக்குமே? "சாப்பாடு" கிடைக்குமோ? :))

--Anton (பேச்சு) 12:59, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

உங்கள் கூற்றை ஏற்கிறேன் அன்றன். இவர்கள் நற்றமிழில் எழுத வேண்டியெல்லாம் நான் கேட்கவில்லை. பலருக்கு குழந்தைத் தமிழிலேயே எழுதத் தெரியவில்லையே! அதுதானே பிரச்சினை. எப்படித் தான் ஆங்கிலத்துடன் கலந்து எழுதும் முறையைக் கொண்டு வந்தார்களோ. இவர்களுக்காக மிகவும் வருந்துகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:10, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

உண்மைதான். தமிழ் பலமானதும், வளமானதும், பெருமையானதும் எனும் நிலை வரும்போது எல்லோரும் திரும்பிப்பார்ப்பார்கள்! --Anton (பேச்சு) 15:29, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

பதக்கம்

தொகு
  உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

நீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களிதத காரணம் பற்றி உங்களுக்கு இதை வழங்குகிறோம்.

மேலும் பல வரலாற்று கட்டுரைகள் எழுதி வரலாறு படைக்க வாழ்த்துக்கள். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:55, 3 அக்டோபர் 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டதுReply

  விருப்பம் வாழ்த்துகள் அன்றன்- நூற்றுக்கணக்கான அறுபட்ட கோப்பு இணைப்புகளை சீர் செய்தமைக்கும் நன்றி. இதே போல் மேலும் பல நல்ல தகவல்களை தமிழ்விக்கிக்கு தந்து உதவுமாறும் வேண்டுகிறேன் -தமிழ்க்குரிசில் (பேச்சு)

நன்றி தென்காசி, தமிழ்க்குரிசில் :) --Anton (பேச்சு) 18:34, 3 அக்டோபர் 2012 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம் அன்டன். எனக்கு பல புகைப்பட ஆதாரங்கள் தேவைப்படுகின்றன, ஆனால் அவை வேறு இணையங்களில் கண்டுள்ளேன். ஆனால் அதற்கான பதிப்புறிமை கேட்டு தகவல் அனுப்பி உள்ளேன் இருந்தும் பதில் வரவில்லை ஆனால் அது ஒரு ஓவியம், உதாரணம்: பூதத்தம்பி அது போல எனது படங்களை வேறு இணையங்களில் இணைத்துள்ளேன் அவற்றை இங்கு இடுவது தவறா?? தயவு கூர்ந்து உதவுங்கள். உதாரணம் கூகில் ஏர்த் http://www.panoramio.com/user/1694396 போன்ற பல இடங்களில் எனது படங்கள் உள்ளன, அதே போன்று எனது படங்களை வேறு நண்பர்கள் முக நூல் மூலமாக எடுத்து வேறு சில இணையத்திலும் பார்த்துள்ளேன். ஆனால் அந்த படங்களுக்கான பதிப்புருமை எனதுதான் இருந்தும் அந்த படங்களை விக்கியில் இப்போது இணைக்கும் பொது பிரச்சனை வருகின்றன. என்ன செய்யலாம்?? --சிவம் 00:20, 11 அக்டோபர் 2012 (UTC)

வணக்கம் சிவம், நீங்கள் எடுத்த அல்லது உருவாக்கிய சொந்த படமென்றால் எவ்வித தயக்கமுமின்றி பதிவேற்றுங்கள். (மறக்காமல் சரியான பெயர், பகுப்பு, காப்புரிமை என்பவற்றோடு முடிந்தால் விளக்கத்தையும் சேர்த்துவிடுங்கள்) உங்கள் படங்கள் வேறு இணையங்களில் இணைத்திருந்தாலும் தப்பில்லை. பொதுவிக்கியில் காப்புரிமை கட்டுப்பாடுகள் சற்று இறுக்கமானவை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் த.வி.இல் சில கோப்புக்களை நியாய பயன்பாட்டின் கீழ் பதிவேற்றிப் பாவிக்கலாம். பார்க்க: விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் எ.கா. டிவிடி அட்டைகள், முக்கிய பிரமுகர்கள். பதிப்புரிமை கேட்டு தகவல் அனுப்பினால், அவர்கள் விக்கிக்குத்தான் பதிப்புரிமையளிக்க வேண்டும். எனவே, பதிப்புரிமை தெரியாத கோப்பு மூலம் சிக்கல் வராமலிருக்க, முடியுமானவரை சொந்தக் கோப்பு அற்றவற்றை தவிர்ப்பது நன்று. பார்க்க: en:Wikipedia:Copyright violations

--Anton (பேச்சு) 05:12, 11 அக்டோபர் 2012 (UTC)Reply

நன்றி அன்டன். இப்பொது எனக்கு புரிகிறது. --சிவம் 05:20, 11 அக்டோபர் 2012 (UTC)

களப்பிரர் படம்

தொகு

நிங்கள் களப்பிரர் தொடர்பான வரைபடத்தில் மாற்றம் செய்தது கண்டு மகிழ்ச்சி. ஆனால் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மற்றும் இலங்கை என்பது ச்ரியல்ல. களப்பிரர் இலங்கையை ஆளவில்லை. நானும் வேறு எங்காவது அதைப்போல் எழுதியிருந்தால் மாற்றிவிடுங்கள். மேலும் டென்னிலங்கைஅயை சிங்களவரே ஆண்டதாக் தெரிகிறது. மேலும் தமிழர் துரத்தும் போதெல்லாம் சிங்களவர் ஓடி ஒளிய பெரும்பாலும் ரோகனமான தென்னிலங்கையையே நாடுவர். நாவல்களும் ரோகனத்தை மறைவதற்கு ஏற்ற அடர்த்தியான காடாகவே காட்டுகின்றன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:25, 15 அக்டோபர் 2012 (UTC)Reply

Return to the user page of "AntanO/தொகுப்பு 1".