இராபர்ட்டு புரூசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 21:
| mother = மர்ஜோரி
| birth_date = {{birth date|1274|7|11|df=y}}
| birth_place = டர்ன்பெரி கோட்டை, ஐர்சையர்<ref name=RB_Birth/><ref>Robert The Bruce. Publisher: Heinemann. {{ISBN |0-431-05883-0}}.</ref>
| death_date = {{death date and age|1329|6|7|1274|7|11|df=y}}
| death_place = கார்ட்ராசு பிரபுமனை
வரிசை 31:
'''முதலாம் இராபர்ட்டு''' (''Robert I'', 11 சூலை 1274 – 7 சூன் 1329), பரவலாக '''இராபர்ட்டு புரூசு''' (''Robert the Bruce'', பண்டைய கேலிக்: ''Roibert a Briuis''; [[சுகாத்திசு கேலிக்கு|தற்கால இசுக்காத்திய கேலிக்]]: ''Raibeart Bruis''; நார்மன் பிரான்சியம்: ''Robert de Brus'' அல்லது ''Robert de Bruys'') 1306இலிருந்து 1329இல் தனது மரணம் வரை [[இசுக்கொட்லாந்து|இசுகாத்திய]] அரசராக இருந்தவர். அவரது [[தலைமுறை]]யில் மிகச் சிறந்த போர்வீரராகத் திகழ்ந்த இராபர்ட்டு [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்திற்கு]] எதிரான முதல் விடுதலைப் போரை நடத்தியவர். இசுக்கொட்லாந்து ஓர் தன்னாட்சி பெற்ற நாடாக மீட்பதற்கு போராடி வெற்றி கண்டார்; இன்றும் இவர் இசுக்கொட்லாந்தின் தேசிய நாயகராக கருதப்படுகின்றார்.
== இளமை வாழ்க்கை ==
இராபர்ட்டு புரூசு டர்ன்பெரி கோட்டையில் சூலை 11, 1274இல் பிறந்தார்.<ref name="RMS9">Robert McNair Scott, ''Robert the Bruce; King of Scots'' (New York: Carroll & Graf Publishers, Inc., 1999), p. 9 {{ISBN |0-7867-0329-6}}</ref>ஆறாம் இராபர்ட் புரூசிற்கும் கார்ரிக் கோமகள் மர்ஜோரிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.<ref name="RMS9"/> இராபர்ட்டின் குடும்பம் [[பிரான்சு|பிரான்சிலிருந்து]] குடிபெயர்ந்தவர்கள். பிரான்சின் வடபகுதியில் உள்ள [[நார்மாண்டி]]யில் புரூசு என்றவிடத்திலிருந்து வந்தவர்கள்.<ref name="GWRS82">George Way; Romilly Squires, ''Scottish Clan & Family Encyclopedia'' (Glasgow: HarperCollins Publishers, 1994), p. 82 {{ISBN |0-00-470547-5}}</ref>1066இல் இதே பெயருடைய இவரது மூதாதை ஒருவர் [[இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்|முதலாம் வில்லியமுடன்]] இங்கிலாந்து வந்துள்ளார்.<ref name="GWRS82"/> மற்றுமொரு இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்தின் முதலாம் டேவிடுடன் வந்துள்ளார்.<ref name="GWRS82"/>
 
1286இல் இசுக்கொட்லாந்தின் மூன்றாம் அலெக்சாண்டர் மரணமடைந்தார்.<ref name="JBPI7-8">''The Scots Peerage, Founded on Wood's Edition of Sir Robert Douglas's Peerage of Scotland'' ed: James Balfour Paul, Vol. I (Edinburgh: David Douglas, 1904), pp. 7-8</ref> அடுத்த அரசியாக பதவியேற்கவிருந்த அவரது பேத்தியும் மரணமடைந்தார்.<ref name="JBPI7-8"/> 1292இல் புரூசு குடும்பமும் பேலியோல் குடும்பமும் தங்களில் ஒருவரை இசுக்கொட்லாந்து அரசராக நியமிக்கும்படி இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு அரசரை வேண்டினர். எட்வர்டு அரசர் பேலியோல் குடும்பத்தின் ஜானை தேர்ந்தெடுத்தார். <ref>Herbert Maxwell, ''Robert the Bruce and the Struggle for Scottish Independence'' (New York; London: G.P. Putnam's Sons, 1906), pp. 63-4</ref>
வரிசை 39:
1306இல் ஜான் கோமின் என்பவரை தேவாலயமொன்றில் இராபர்ட்டு சந்தித்தார். இவரும் இசுக்கொட்லாந்திய அரசராக விரும்பியவர். இவர்களுக்கு இடையே எழுந்த சண்டையில் இராபர்ட்டு ஜானைக் கொன்றார்.<ref>Herbert Maxwell, ''Robert the Bruce and the Struggle for Scottish Independence'' (New York; London: G.P. Putnam's Sons, 1906), pp. 129-30</ref> இதனையடுத்து இராபர்ட்டு இசுக்கூன் என்றவிடத்திற்குச் சென்றார். இங்கு இங்கிலாந்து அரசருக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த இசுகொத்திய அரச அங்கிகளை இசுக்கொத்திய பிரபுக்கள் கொண்டுவந்தனர். இவர்கள் இராபர்ட்டை இசுகொட்லாந்தின் அரசராக முடிசூட்டினர்.<ref>John Barbour; John Pinkerton, ''The Bruce: Or, The History of Robert I. King of Scotland'', Vol. 1 (London: Printed by H. Hughs, for G. Nicol, bookseller to His Majesty, 1790), p. 42</ref>
 
இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து இசுக்கொட்லாந்தை விடுவிக்க இராபர்ட்டு பல போர்களை நடத்தினார். முதலாம் எட்வர்டு அரசருடனும் பின்னர் அவரது மகன் இரண்டாம் எட்வர்டு அரசருடனும் சண்டைகள் புரிந்தார். 1314இல் பன்னோக்பர்ன் சண்டையில் இராபர்ட்டின் படைகள் இரண்டாம் எட்வர்டின் படைகளை வெற்றி கண்டனர்.<ref>Alan Young; Michael J. Stead, ''In the Footsteps of Robert the Bruce'' (Stroud: Sutton Publishing Limited, 1999), pp. 6, 124 {{ISBN |0-7509-1910-8}}</ref>
 
1315இல் இராபர்ட்டு புரூசு தனது படைகளை [[அயர்லாந்து|அயர்லாந்திற்கு]] அனுப்பினார்.<ref name="RMS173-74">Robert McNair Scott, ''Robert the Bruce; King of Scots'' (New York: Carroll & Graf Publishers, Inc., 1999), pp. 173-74</ref> இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்த அயர்லாந்தை வென்று தமது சகோதரர் எட்வர்டு புரூசை 1316இல் அயர்லாந்தின் அரசராக்கினார்.<ref name="RMS173-74"/> இசுக்கொட்லாந்து படையினருக்கும் அயர்லாந்து மக்களுக்கும் சண்டைகள் எழுந்தவண்ணம் இருந்தன. 1318இல் எட்வர்டு புரூசு கொல்லப்பட்டதுடன் இசுகொட்லாந்து அயர்லாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது.
==மரபுடைமை==
சூன் 7, 1329இல் இராபர்ட்டு புரூசு இறந்தார்.<ref name="JDM78">J. D. Mackie, ''A History of Scotland'', Second Edition, ed. Bruce Lenman; Geoffrey Parker (London; New York: Penguin Books Ltd., 1991), p. 78 {{ISBN |0-7867-0329-6}}</ref> போரிடுவதிலேயே கழிந்த தமது வாழ்நாளுக்கு மீட்பாக [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்களில்]] கலந்துகொள்ள விரும்பினார். தன்னால் இதனை நிறைவேற்ற முடியவில்லை என்ற நிலையில் தமது நம்பிக்கைக்குரிய நண்பர் சேர் ஜேம்ஸ் டக்ளசிடம் தனது இதயத்தை ஓர் சிறிய வெள்ளிப் பெட்டகத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டினார்.<ref>Michael Brown, ''The Black Douglases'' (Scotland: Tuckwell Press, 1998), p. 27</ref> ஜேம்ஸ் டக்ளசு இராபர்ட்டின் இறுதி விருப்பதை நிறைவேற்றும் பொருட்டு இதயத்தை எடுத்துக்கொண்டு பல போர்வீரர்களுடன் புறப்பட்டார்.<ref name="RMS226-8">Robert McNair Scott, ''Robert the Bruce; King of Scots'' (New York: Carroll & Graf Publishers, Inc., 1999), pp. 226-28</ref> ஆனால் எசுப்பானியாவில் நடந்த சண்டையில் சர் ஜேம்ஸ் கொல்லப்பட்டார். இராபர்ட்டின் இதயம் இசுக்கொட்லாந்திற்கே திரும்பியது. இராபர்ட்டு புரூசின் உடல் டன்பெர்ம்லைன் மடத்தில் புதைக்கப்பட்டது; அவரது இதயம் மெர்லோசு மடத்தில் புதைக்கப்பட்டது.<ref name="RMS226-8"/>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்டு_புரூசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது