உலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 12:
== கட்டமைப்பு மற்றும் பிணைப்பு ==
 
உலோகப்பொருட்களில் உள்ள அணுக்கள் யாவும் பொதுவாக மூன்று வகையான படிக அமைப்புகளில் அடுக்கப்பட்டிருக்கும். மூல கனசதுரம், அறுகோண நெருக்கப்பொதிவு கனசதுரம், முகமைய கனசதுரம் என்பன மூன்று வகையான படிக அமைப்பு வகைகளாகும். மூல கனசதுரக் கட்டமைப்பில் அணுக்கள் கனசதுரத்தின் மூலைகளில் மட்டுமே அமைந்துள்ளன. மூலையில் உள்ள ஒவ்வொரு அணுவும் சுற்றியுள்ள எட்டு கனசதுரங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அறுகோண நெருக்கப்பொதிவு கனசதுரத்திலும், முகமைய கனசதுரத்திலும் ஒவ்வோர் அணுவும் 12 பிற அணுக்களால் சூழப்பட்டிருக்கும். ஆனால் அடுக்குகள் அடுக்கப்படும் முறை மாறுபடுகிறது. சில உலோகங்கள் வெப்பத்தின் அடிப்படையில் வெவ்வேறான கட்டமைப்புகளை ஏற்கின்றன <ref>Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. {{ISBN |0-12-352651-5}}.</ref>.
 
உலோகங்களின் அணுக்கள் தங்கள் வெளிக்கூட்டிலுள்ள எலக்ட்ரான்களை எளிதாக இழக்கின்றன. இதன் விளைவாக எலக்ட்ரான்கள் தடையின்றி தங்கள் பாதையில் சுழல்கின்றன. வெப்பமும் மின்சாரமும் எளிமையாகக் கடத்தப்படுகின்றன. ஒவ்வோர் அணுவிற்கும் உட்கருவைச் சுற்றிவரும் எலக்ட்ரான்களுக்கும் இடையில் உள்ள நிலைமின்னியல் இடைவினைகள் உலோகங்களின் திண்மப் பண்புகளை உருவாக்குகின்றன. இத்தகைய பிணைப்புகள் உலோகப் பிணைப்புகள் எனப்படுகின்றன <ref name="morty">{{cite book| author = Mortimer, Charles E.|title = Chemistry: A Conceptual Approach|location = New York:|publisher = D. Van Nostrad Company| edition = 3rd |year= 1975}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/உலோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது