நீர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 18:
== உதாரணங்கள் ==
 
[[பாதரசம்]] மற்றும் [[புரோமின்]] தனிமங்கள் மட்டுமே சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்த சூழ்நிலையில் நிலையான நீர்மங்களாக உள்ளன. [[பிரான்சியம்]], [[சீசியம்]], [[காலியம்]], [[ருபீடியம்]] போன்ற மேலும் நான்கு தனிமங்கள் அறை வெப்பநிலைக்கு சற்று அதிகமான உருகுநிலையைக் கொண்டுள்ளன <ref>Theodore Gray, The Elements: A Visual Exploration of Every Known Atom in the Universe New York: Workman Publishing, 2009 p. 127 {{ISBN |1-57912-814-9}}</ref> சோடியம்பொட்டாசியம் உலோகக்கலவை (NaK), காலின்சுடன் எனப்படும் உருகும் உலோகக்கலவை மற்றும் சில பாதரச உலோகக்கலவைகள் உள்ளிட்டவை அறைவெப்பநிலையில் நீர்மங்களாக உள்ள சில உலோகக்கலவைகளாகும்.
 
[[தண்ணீர்]], [[எத்தனால்]] மற்றும் பல கரிமக் கரைப்பான்கள் போன்ற தூய்மையான பொருட்கள் சாதாரண சூழ்நிலையில் நீர்மங்களாக உள்ளன. நீர்மநிலையில் உள்ள நீர், வேதியியல் மற்றும் உயிரியல் பிரிவுகளுக்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிரது. மேலும் உயிர் வாழ்கைக்கு தண்ணீர் ஓர் அத்தியாவசியத் தேவை என்றும் நம்பப்படுகிறது.
வரிசை 33:
 
உயவுப் பொருட்கள், கரைப்பான்கள், குளிரூட்டிகள், என்று பலவகையான பயன்களை நீர்மங்கள் வழங்குகின்றன. நீரியல் அமைப்புகளில், ஆற்றல் பரிமாற்றத்திற்கும் நீர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீர்மங்களை உயவுப்பொருளாகப் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகளில் உராய்வியல் கவனம் செலுத்துகிறது.
நீர்மக் கூறுகளின் பாகுத்தன்மை மற்றும் பாய்மப் பண்புகளை வெப்ப இயக்க எல்லை வரையிலும் ஆய்வு செய்ய பொருத்தமான உயவுப்பொருளாக எண்ணெய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இயந்திரங்கள் பற்சக்கரங்கள், உலோக வேலைகள், நீரியல் கருவிகள் போன்றவற்றில் எண்ணெய்கள் சிறந்த உயவுப் பொருட்களாகப் பயன்படுகின்றன <ref>Theo Mang, Wilfried Dressel [https://books.google.com/books?id=UTdfxf2rkNcC& ’’Lubricants and lubrication’’], Wiley-VCH 2007 {{ISBN |3-527-31497-0}}</ref>.
 
பிற நீர்மங்களை அல்லது திண்மங்களைக் கரைக்கும் கரைப்பானாகப் பல நீர்மங்கள் பயன்படுகின்றன. வர்ணங்கள், மேற்பூச்சுகள், மற்றும் பசைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயன்பாடுகளை கரைசல்கள் வழங்குகின்றன. எண்ணெய்ப் பசை, மசகு, இயந்திர பாகங்களில் வடியும் கரி எண்ணெய் முதலியவற்றை தூய்மைப்படுத்த தொழிற்சாலைகளில் நாப்தா மற்றும் அசிட்டோன் போன்ற நீர்மங்கள் பயன்படுகின்றன. உயிரினங்களின் உள்ளே உருவாகும் அல்லது சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் [[உடல் நீர்மம்|உடல் நீர்மங்களும்]] நீர்மங்களேயாகும்.
 
சோப்புகளிலும் அழுக்குநீக்கிகளிலும் பொதுவாக பரப்பியங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆல்ககால் போன்ற கரைப்பான்கள் பெரும்பாலும் நுண்ணுயிர்க் கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அழகுசாதனப் பொருட்கள், மைகள், சீரொளி ஊடகத்தில் நீர்மச்சாயம் போன்றவற்றில் இவை காணப்படுகின்றன. தாவர எண்ணெய்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளில் நீர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன <ref>George Wypych [https://books.google.com/books?id=NzhUTvUkpDQC&pg=PA847 ’’Handbook of solvents’’] William Andrew Publishing 2001 pp. 847–881 {{ISBN |1-895198-24-0}}</ref>.
 
நீர்மங்கள் வாயுக்களைக்காட்டிலும் அதிக வெப்பக் கடத்துத்திறனைக் கொண்டுள்ளன, நீர்மங்களின் பாய்மப்பண்பு திறனால், இயந்திர பாகங்களின் அதீத வெப்பத்தை நீக்குவதற்கு உதவும் பொருத்தமான ஒரு பொருளாக நீர்மம் பயன்படுகிறது. கதிர்வீசுக் கருவி போன்ற வெப்ப பரிமாற்றக் கருவியினால் வெப்பத்தை நீக்கலாம் அல்லது ஆவியாக்கலின் போதும் வெப்பத்தை வெளியேற்றலாம் <ref>N. B. Vargaftik ’’Handbook of thermal conductivity of liquids and gases’’ CRC Press 1994 {{ISBN |0-8493-9345-0}}</ref>. இயந்திரங்கள் மிகையாக சூடாவதைத் தடுக்க தண்ணீர் அல்லது கிளைக்கால் குளிரூட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள் <ref>Jack Erjavec [https://books.google.com/books?id=U4TBoJB2zgsC&pg=PA309 ’’Automotive technology: a systems approach’’] Delmar Learning 2000 p. 309 {{ISBN |1-4018-4831-1}}</ref>. அணு உலைகளில் தண்ணீர் அல்லது [[சோடியம்]] அல்லது [[பிசுமத்]] போன்ற நீர்ம உலோகங்கள் குளிரூட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன <ref>Gerald Wendt ’’The prospects of nuclear power and technology’’ D. Van Nostrand Company 1957 p. 266</ref>.இராக்கெட்டுகளின் உந்துதல் அறைகளைக் குளிர்விக்க நீர்ம உந்தி படலங்கள் பயன்படுத்தப்படுகின்றன<ref>’’Modern engineering for design of liquid-propellant rocket engines’’ by Dieter K. Huzel, David H. Huang – American Institute of Aeronautics and Astronautics 1992 p. 99 {{ISBN |1-56347-013-6}}</ref>. இயந்திரங்களின் உபரி வெப்பத்தை நீக்க தண்ணீர் மற்றும் எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இயந்திரத்தையும் கருவியையும் அழிவிலிருந்து காப்பாற்றவும் நீர்மங்கள் யன்படுத்தப்படுகின்றன.
 
வியர்த்தலின் போது வியர்வை ஆவியாக்குவதன் மூலம் மனித உடலில் இருந்து வெப்பம் வெளியேறுகிறது. வெப்பமூட்டும், காற்றோட்டம், மற்றும் காற்று சீரமைப்புத் தொழிற்சாலைகளில் தண்ணிர் போன்ற நீர்மங்கள் வெப்பத்தை ஒரு பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு பரிமாற்ற பயன்படுத்தப்படுகின்றன <ref>Thomas E Mull ’’HVAC principles and applications manual’’ McGraw-Hill 1997 {{ISBN |0-07-044451-X}}</ref>.
 
நீரியல் அமைப்புகளின் பிரதான அங்கமாக நீர்மங்கள் பயன்படுகின்றன. பாசுகல் விதி வழங்கும் நீர்மசக்தியை இவை அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. பண்டைய காலந்தொட்டே குழாய்கள் மற்றும் தண்ணீர் சக்கரங்கள் போன்ற கருவிகள் நீர்மங்களின் இயக்கத்தை இயந்திர வேலையாக மாற்றிக் கொள்வது பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீரியல் குழாய்களின் வழியாக எண்ணெய்கள் உந்தப்படுகின்றன. இவை இந்த சக்தியை நீரியல் உருளைகளுக்கு மாற்றித் தருகின்றன. மோட்டார் வாகனத் தடைகள் மற்றும் இயந்திரவியல் சக்தி பரிமாற்றங்கள், கனரக கருவிகள், மற்றும் விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற பல பயன்பாடுகளில் நீரியல் கருவிகள் பயன்படுகின்றன. பாரங்களைத் தூக்கவும் பஞ்சு போன்றவற்றை அழுத்தவும் பல்வேறு நீரியல் அழுத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நீர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது