மான்சா மாவட்டம், பஞ்சாப்

ஒரு இந்திய பஞ்சாப் மாவட்டம்

மான்சா மாவட்டம் (Mansa district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் மான்சா ஆகும்.

மன்சா மாவட்டம்
Mansa district

ਮਾਨਸਾ ਜ਼ਿਲ੍ਹਾ
மாவட்டம்
Location of மன்சா மாவட்டம் Mansa district
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
Headquartersமன்சா
பரப்பளவு‡[›]
 • மொத்தம்2,174 km2 (839 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்7,68,808
 • அடர்த்தி350/km2 (900/sq mi)
மொழிகள்
 • ஆட்சிமொழிபஞ்சாபி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-PB
வாகனப் பதிவுPB-31
பாலின விகிதாசாரம்1000/880 /
எழுத்தறிவு63%
இணையதளம்www.mansa.nic.in

மாவட்ட நிர்வாகம் தொகு

மான்சா மாவட்டம் மான்சா, புத்லதா, சர்துல்கர் என மூன்று வருவாய் வட்டங்களையும்; மான்சா, பிக்கி, புத்லதா, சர்துல்கர் மற்றும் ஜுனீர் என ஐந்து ஊராட்சி ஒன்றியங்களையும்; 240 கிராமங்களையும் கொண்டது.

மக்கள் தொகையியல் தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை ஆக 7,68,808 உள்ளது.[1] கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 11.62% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 350 மக்கள் வாழ்கின்றனர்.

மொழிகள் தொகு

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

புவியியல் தொகு

 
பஞ்சாபின் மாவட்டங்கள்

முக்கோண வடிவத்தில் அமைந்த மான்சா மாவட்டம், வடக்கில் பர்னாலா மாவட்டம் வடமேற்கில் பதிண்டா மாவட்டம் வடகிழக்கில் சங்கரூர் மாவட்டம், தெற்கில் அரியானா மாநிலம் எல்லைகளாக கொண்டுள்ளது.

பொருளாதாரம் தொகு

மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் தொழிலை குறிப்பாக பருத்தி வேளாண்மைத் தொழிலை நம்பியுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "District Census 2011". www.census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 22 January 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்சா_மாவட்டம்,_பஞ்சாப்&oldid=3890740" இலிருந்து மீள்விக்கப்பட்டது