வட மாகாண முதலமைச்சர்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

வட மாகாண முதலமைச்சர் (Chief Minister of North Eastern Province) என்பவர் மாகாண மட்டத்தில் இலங்கையின் வட மாகாணத்தில் பல்வேறு நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். வட மாகாண அரசின் நிறைவேற்று சபையின் தலைவராக ஆளுனர் உள்ளார். வட மாகாண சபையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினால் முதலமைச்சராகப் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரை ஆளுனர் அப்பதவிக்கு நியமிப்பார்.

வட மாகாண முதலமைச்சர்
தற்போது
க. வி. விக்னேஸ்வரன்

7 அக்டோபர் 2013 முதல்
வட மாகாண அரசு
உறுப்பினர்வட மாகாண சபை
நியமிப்பவர்ஜி. ஏ. சந்திரசிறி
பதவிக் காலம்5 ஆண்டுகள்
உருவாக்கம்1 சனவரி 2007
முதலாமவர்க. வி. விக்னேஸ்வரன்
இணையதளம்Northern Provincial Council

முதலமைச்சர்களின் பட்டியல் தொகு

இல. பெயர் கட்சி பதவியில் விலகல்
எவருமில்லை நடுவண் அரசின் நேரடி ஆட்சி 1 சனவரி 2007 7 அக்டோபர் 2013
1   க. வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 அக்டோபர் 2013 இன்று

அதிகாரங்கள் தொடர்பான தீர்ப்புகள் தொகு

மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் நடுவண் அரசின் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உண்டு என்றும், அவ்வதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்றும் இலங்கை உயர்நீதிமன்றம் 2014 ஆகத்து 4 இல் தீர்ப்பளித்தது. வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரனுக்கு எதிராக மாகாண செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.[1]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள்s தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_மாகாண_முதலமைச்சர்&oldid=1701694" இலிருந்து மீள்விக்கப்பட்டது