சிறிய புள்ளி கழுகு
சிறிய புள்ளி கழுகு | |
---|---|
இளம் கழுகு காண்க வெண்ணிறப் புள்ளிகள் இறக்கையிலும், வி வடிவத்தில் புள்ளிகள் பிட்டத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | கி. பொமாரினா
|
இருசொற் பெயரீடு | |
கிளாங்கா பொமாரினா | |
சிறிய புள்ளி கழுகு பரம்பல்
இனப்பெருக்க காலம் பிற காலம் வலசைப் போகும் காலம் | |
வேறு பெயர்கள் | |
அக்கியுலா பொமாரினா |
சிறிய புள்ளி கழுகு (கிளாங்கா பொமாரினா-Clanga pomarina) ஒரு பெரிய கிழக்கு ஐரோப்பியக் கொன்றுண்ணி பறவை ஆகும். அனைத்து வழக்கமான கழுகுகளைப் போலவே, இது அசிப்பிட்ரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. வழக்கமான கழுகுகள் பெரும்பாலும் பியூட்டியோசு, கடல் கழுகு மற்றும் பிற பெரிய அசிபிட்ரிடேவுடன் ஒன்றிணைக்கப்படுகின்றன. ஆனால் மிகச் சமீபத்தில் இவை நம்பப்பட்டதை விட மெல்லிய அசிபிட்ரைன் பருந்துகளிலிருந்து வேறுபடுவது போல் தோன்றுகிறது.
விளக்கம்
தொகுஇது ஒரு நடுத்தர அளவிலான கழுகு. சுமார் 60 செமீ (24 அங்குல நீளமும் 150 செமீ (59 அங்குலம்) இறக்கை நீட்டமும் கொண்டது.[2] இதன் தலை மற்றும் இறக்கைகள் வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும். பொதுவாக அடர் நிற இறகுகளுடன் வேறுபடுகின்றன. இவற்றின் தலையும் அலகும் சிறியவை.[3] வழக்கமாக, மேல் இறக்கைகளில் ஒரு வெள்ளை இணைப்பு காணப்படும். மேலும் முதிர்ச்சியடைந்த பறவைகளின் பிட்டத்தில் தெளிவான வெள்ளை நிறத்தில் ஆங்கில எழுத்தான "வி" போன்று தோற்றமுடைய புள்ளிகள் காணப்படும். ஆனால் இத்தகைய தோற்றம் பெரும் புள்ளிக் கழுகுகளில் காணப்படுவதில்லை.
இளம் பறவைகளில் இறக்கைகளில் வேறுபாடு குறைவாகவே காணப்படும். ஆனால் பறத்தலுக்கான இறக்கைகளில் வெள்ளை புள்ளிகள் காணப்படுகின்றன. இது பெரிய புள்ளி கழுகு இளம் வயதினரிடமிருந்து வேறுபடுகிறது. இதில் இறக்கை மறைக்கப்பட்ட புள்ளிகளும் நுரை வண்ணக் கழுத்து இணைப்பும் உள்ளது.
இதனுடைய அழைப்பு நாயின் ஓலம் போன்று யிப் என உள்ளது.
வகைப்பாடும் பரிணாமமும்
தொகுமுன்பு இந்தியத் துணை இனமாக கருதப்பட்ட இப்பறவைகள் இப்போது ஒரு தனிச் சிற்றினமாகக் கருதப்படுகின்றன. இந்தியப் புள்ளி கழுகு (Clanga hastata) மிகவும் தனித்துவமானதும் உருவவியல், நடத்தை, சுற்றுச்சூழல் மற்றும் டி. என். ஏ. வரிசை தரவுகளால் வேறுபடுத்தக்கூடியதாக உள்ளது. ஐரோப்பிய வகைப்பாட்டின் படி பெரிய புள்ளி கழுகுடன் நெருக்கமாக உள்ளது. இவற்றின் பொதுவான மூதாதையர் மத்திய பிளோசீனைச் சார்ந்த, சுமார் 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,[4] இந்தியப் பறவைகளின் மூதாதையர்களிடமிருந்து பிரிந்ததாகத் தெரிகிறது. "முன்-புள்ளி கழுகு" அநேகமாக ஆப்கானித்தானின் பொதுப் பகுதியில் வாழ்ந்திருக்கலாம். கடைசி பனி யுகம் தொடங்கியபோது மத்திய ஆசியாவில் பனிப்பாறைகள் மற்றும் பாலைவனங்கள் இரண்டும் அதிகரித்தபோது வட தென் பரம்பரையாகப் பிரிக்கப்பட்டன. வட பரம்பரையானது பின்னர் கிழக்கு (பெரும்) மற்றும் இன்றைய மேற்கத்திய (சிறிய) சிற்றினங்களாகப் பிரிந்துள்ளன. அநேகமாக 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிளோசீன்-பிளீஸ்டோசீன் காலங்களில் இது நடைபெற்றிருக்கலாம்.[5][6][7]
தற்போதைய சிற்றினங்கள் எப்போதாவது பெரிய புள்ளி கழுகுடன் கலப்பினமாக்கப்படுகின்றன. கலப்பின பறவைகளை அடையாளம் காண்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.[8]
பரவலும் வாழிடமும்
தொகுசிறிய புள்ளி கழுகு மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்கில் துருக்கி மற்றும் ஆர்மீனியா[9] மற்றும் ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. இது திறந்த அல்லது குறைவான காடுகள் கொண்ட நாட்டின் மிகவும் எச்சரிக்கை உணர்வுள்ள சிற்றினமாகும். இது சிறிய பாலூட்டிகளை (குறிப்பாக வால்கள், அணில்கள், எலி மற்றும் சுண்டெலி) வேட்டையாடுகிறது. சிறிய பறவைகள், நீர்நில வாழ் உயிரினங்கள், ஊர்வன மற்றும் எப்போதாவது பூச்சிகள் (கறையான்கள் உட்பட) போன்ற ஒத்த நில இரையினையும் வேட்டையாடுகின்றன.[10][11][12]
நடத்தையும் சூழலியலும்
தொகுசிறிய புள்ளி கழுகு இதன் பரவலில் வடமேற்குப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு இடையில் தொடர்ந்து இடைவெளி நிலப்பரப்புகளைப் பயன்படுத்துகிறது. பிராந்தியங்களுக்கு இடையிலான தூரங்கள் இப்பகுதி முழுவதும் வேறுபடுகின்றன. இருப்பினும் இது இனப்பெருக்கச் சாத்தியக் கூறுடன் தொடர்புடையது என்று கண்டறியப்படவில்லை. இப்பகுதி முழுவதும் இனப்பெருக்கச் சாத்தியத்தில் ஒத்திசைவான மாறுபாடுகளுக்குப் பதிலாக, காலநிலை ஏற்ற இறக்கங்கள் அல்லது இரைகள் கிடைப்பது போன்ற பெரிய அளவிலான காரணிகளால் இக்கழுகுகள் பாதிக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது.[13] சிறிய புள்ளி கழுகு ஒன்று முதல் மூன்று வரையிலான, வெள்ளை நிறத்தில் மஞ்சள் புள்ளிகளுடன் கூடிய முட்டைகளை மரத்தில் உள்ள கூடுகளில் இடுகிறது. மிக அதிகமான இரை காணப்படும் இனப்பெருக்கப் பருவங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட இளம் குஞ்சுகள் காணப்படும். இருப்பினும் பெண் கழுகு முதல் முட்டை இடப்பட்டவுடனே அடைகாக்கத் தொடங்குகிறது. இதனால் முதலில் பொரிக்கும் குஞ்சு தனக்குப் பின்னர் பொரிக்கும் குஞ்சுகளைவிடப் பெரியதாக இருப்பதால், அவற்றைவிட வேகமாக வளர்வதுடன் இளம் குஞ்சுகளைக் கொன்று சாப்பிடவும் செய்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2021). "Clanga pomarina". IUCN Red List of Threatened Species 2021: e.T22696022A203665834. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T22696022A203665834.en. https://www.iucnredlist.org/species/22696022/203665834. பார்த்த நாள்: 14 February 2022.
- ↑ "Lesser spotted eagle; Birdwatching in Malta".
- ↑ "Lesser spotted eagle; ebird.org".
- ↑ The estimate in Väli 2006 is certainly incorrect; it uses a molecular clock that is appropriate for small passerines with half the generation times of eagles.
- ↑ Parry, S.J.; Clark, W.S.; Prakash, V. (2002). "On the taxonomic status of the Indian Spotted Eagle Aquila hastata". Ibis (journal) 144 (4): 665–675. doi:10.1046/j.1474-919X.2002.00109.x.
- ↑ Rasmussen, Pamela C.; Anderton, John C. (2005). Birds of South Asia - The Ripley Guide. Barcelona: Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-87334-67-2.
- ↑ Väli, Ülo (2006). "Mitochondrial DNA sequences support species status for the Indian Spotted Eagle Aquila hastata". Bulletin of the British Ornithologists' Club 126 (3): 238–242. https://www.researchgate.net/publication/235355525.
- ↑ Väli, Ülo; Lõhmus, Asko (2004). "Nestling characteristics and identification of the lesser spotted eagle Aquila pomarina, greater spotted eagle A. clanga, and their hybrids". Journal of Ornithology 145 (3): 256–263. doi:10.1007/s10336-004-0028-7.
- ↑ "Lesser Spotted Eagle Clanga pomarina in Armenia". Armenian Bird Census, TSE NGO].
- ↑ "Aquila pomarina (Lesser spotted eagle)". Animal Diversity Web.
- ↑ "Lesser Spotted Eagle | the Peregrine Fund".
- ↑ "Lesser Spotted Eagle | the Peregrine Fund".
- ↑ Treinys, R.; Bergmanis, U.; Väli, Ü. (2017). "Strong territoriality and weak density-dependent reproduction in Lesser Spotted Eagles Clanga pomarina". Ibis 159 (2): 343–351. doi:10.1111/ibi.12454.
மேலும் வாசிக்க
தொகு- Svensson, Lars(1–8 November 1986). "Underwing pattern of Steppe, Spotted and Lesser Spotted Eagles". {{{booktitle}}}, 12–14, Eilat:International Birdwatching Centre Eilat.
வெளி இணைப்புகள்
தொகு- தென்னாப்பிரிக்க பறவைகளின் அட்லஸ் இல் குறைவான புள்ளி கழுகு இன உரை
- BirdLife species factsheet for Clanga pomarina
- சிறிய புள்ளி கழுகு videos, photos, and sounds at the Internet Bird Collection
- சிறிய புள்ளி கழுகு photo gallery at VIREO (Drexel University)
- Audio recordings of Lesser Spotted Eagleமீதுசெனோ-கான்டோ.