சிறீபாதராஜர்
சிறீபாதராயர் (Sripadaraya) அல்லது இலட்சுமி நாராயண தீர்த்தர் (Lakshminarayana Tirtha) (அண். 1422 அண். 1480) இவர் ஓர் துவைத அறிஞரும், இசையமைப்பாளரும், முளுபாகிலுவிலுள்ள மத்வாச்சாரியரின் மடத்தின் தலைவருமாவார். இவர் நரஹரி தீர்த்தருடன் சேர்ந்து ஹரிதாச இயக்கத்தை நிறுவியவர் என்று பரவலாகக் கருதப்படுகிறார். ரங்க விட்டலர் என்றப் புனைப்பெயரில் இவர் எழுதிய பாடல்கள், ஆன்மீகவாதம் மற்றும் மனிதநேயத்தால் ஊடுருவியுள்ள துவைதக் கொள்கைகளின் வடிகட்டலைக் கொண்டுள்ளன. [1] சுலடி இசைக் கட்டமைப்பைக் கண்டுபிடித்த பெருமையும் இவருக்கு உண்டு. அவற்றில் 133 ஐ பல கீர்த்தனைகளுடன் இயற்றினார். [1] இவர் சாளுவ நரசிம்ம தேவ ராயனின் ஆலோசகராக இருந்தார். மேலும், இளம் வியாசதீர்த்தருக்கு வழிகாட்டினார். [2] ஜெயதீர்த்தரின் நியாய சுத்தம் குறித்து நியாசுதோபன்யாசா-வாக்வஜ்ரா என்ற வர்ணனையையும் எழுதியுள்ளார்.. [2]
இலட்சுமி நாராயண தீர்த்தர் | |
---|---|
பிறப்பு | அபூர், சென்னப் பட்டணம், கருநாடகம் |
சமயம் | இந்து சமயம் |
தலைப்புகள்/விருதுகள் | சிறீபாதராஜர் |
தத்துவம் | துவைதம், வைணவ சமயம் |
குரு | சிரவண தீர்த்தர் |
வாழ்க்கை
தொகுஇவர், கருநாடகாவில் சென்னப் பட்டணம் வட்டத்திலுள்ள அபூர் என்ற கிராமத்தில் ஒரு தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் [3] கணக்காளராக பணியாற்றி வந்த சேசகிரியப்பா என்பவருக்கும், கிரியாம்மா என்பவருக்கும் பிறந்தார். இவர் தனது இளம்வயதில் கால்நடைகளை கவனித்து வந்தார். ஓய்வு நேரத்தில் சமசுகிருத நூல்களைப் படித்தார். [4] இவர் அபூரில் உள்ள மத்துவரின் மடத்தின் தலைவராகவும், வியாசதீர்த்தரின் குருவாகவும் இருந்தார். [5] ராகவேந்திர மடத்தின் முன்னோடியான, உத்தராதி மடத்தின் இரகுநாத தீர்த்தர், இவருக்கு "சிறீபாதராஜர்" அல்லது "சிறீபாதராயர்" என்ற பட்டத்தை வழங்கினார். [6]
படைப்புகள்
தொகுவேதாந்தத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்த இவர், ஜெயதீர்த்தரின் 'நியாய சுத்தம்' குறித்து 'வாக்வஜ்ரம்' என்று ஒரு வர்ணனையை எழுதினார். இது வரலாற்றாசிரியர் சர்மா, "3500 கிரந்தங்களில் ஒரு தெளிவான மற்றும் கவர்ச்சிகரமான வர்ணனை" எனக் குறிப்பிடுகிறார். [7] முழுமையான வெளிப்பாடு மற்றும் அழகான பாணி இருந்தபோதிலும், ஹரிதாச பக்தி இயக்கத்தில் இவரது பங்கு இவரது அறிவார்ந்த பணியைக் கிரகித்தது என்றும் சர்மா கூறுகிறார். இசையுடன் ஒத்திசைக்கப்பட்ட அவரது எளிய சொல் மற்றும் ஆன்மீக பாடல்களால் இவர் பெரும்பாலும் தாச சாகித்யத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார். இவரது எளிய தொடக்கங்கள் இவரது வடமொழியுடன் நெருக்கமான தொடர்பும் இவரது கவிதைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஜாக்சன் கருதுகிறார். [8] இவர் 13,000 சுலடிகளை இயற்றினார். அவை வெவ்வேறு ராகங்களையும்தாளங்களையும் கொண்ட பாடல்கள். அவை பெரும்பாலும் கதைகளின் மனநிலையை அமைக்கப் பயன்படுகின்றன. [9] இவருக்குப் பின் மடத்தின் தலைவராக வந்த வியாசதீர்த்தர், ஹரிதாச இயக்கத்திற்கு மேலும் உத்வேகம் அளித்து, புரந்தரதாசர், கனகதாசர் போன்ற பலகைகளைத் தொடங்கி, பல கீர்த்தனங்களை இயற்றுவதன் மூலம் இவரது இசை மரபுகளை வளர்த்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Jackson 2000.
- ↑ 2.0 2.1 Sharma 2000.
- ↑ Hebbar 2005, ப. 205.
- ↑ Jackson 2016.
- ↑ Sharma 2000, ப. 461.
- ↑ Devadevan 2016.
- ↑ Sharma 2000, ப. 251.
- ↑ Jackson 2000, ப. 801.
- ↑ Sharma 1937, ப. 352.
நூலியல்
தொகு- Sharma, B.N.K (2000) [1961]. History of Dvaita school of Vedanta and its Literature, Vol 2 (3rd ed.). Bombay: Motilal Banarasidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1575-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Jackson, William (2000). Holy People of the World: A Cross-cultural Encyclopaedia. ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781576073551.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Jackson, William (2016). "5". Vijayanagara Voices: Exploring South Indian History and Hindu Literature. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317001928.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Sharma, B.N.K (1937). The Cultural Heritage Of Indian Vol 4. RK Institute of Culture. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8187332053.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Hebbar, B.N (2005). The Sri-Krsna Temple at Udupi: The History and Spiritual Center of the Madhvite Sect of Hinduism. Bharatiya Granth Nikethan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89211-04-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Devadevan, Manu V. (2016). A Prehistory of Hinduism. Walter de Gruyter GmbH & Co KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3110517378.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)