சிறீராஸ்மி சுவாதி

சிறீராஸ்மி சுவாதி (Srirasmi Suwadee) [2] (பிறப்பு 9 திசம்பர் 1971), இவர் தாய்லாந்தின் முன்னாள் இளவரசியான இவர் பட்டத்து இளவரசரின் மனையாவார். [3] தாய்லாந்தின் அரச குடும்பத்தின் முன்னாள் உறுப்பினரான இவர், பிப்ரவரி 2001 முதல் திசம்பர் 2014 வரை அப்போதைய பட்டத்து இளவரசர் மகா வச்சிரலோங்கோர்னின் (பத்தாம் ராமா ) மூன்றாவது மனைவியாக இருந்தார். [4]

தான் பூ யிங்
சிறீராஸ்மி சுவாதி
சுலா சோம் கிளாவின் ஆணை, வெள்ளை யானையின் ஆணை, தாய்லாந்தின் மகுடத்தின் ஆணை
2007இல் சிறீரஸ்மி
பிறப்பு9 திசம்பர் 1971 (1971-12-09) (அகவை 52)
சமுத் சாங்க்கிராம், தாய்லாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்சமுத் சாங்க்கிராம் திறந்த நிலைப் பல்கலைக்கழகம் (மேலாண்மை அறிவியலில் இளநிலைப் பட்டம், 2002)
கசெட்சார்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் பட்டம், 2007)
வாழ்க்கைத்
துணை
வச்சிரலோங்கோன் பத்தாம் ராமா)
(தி. 2001; ம.மு. 2014)
பிள்ளைகள்தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி
Military service
பற்றிணைப்பு தாய்லாந்து
கிளை/சேவை தாய் பேரரசின் இராணுவம்
தரம் தளபதி [1]
கட்டளைஅரசரது பாதுகவலர்கள்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர் சமுத் சாங்க்கிராம் மாகாணத்தில் [5] ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்தார். அபிருஜ், வாந்தனி சுவாதி ஆகியோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தையான [6] இவரது தாயின் பக்கத்திலிருந்து மோன் வம்சாவளியைச் சேர்ந்தவரவார். [7]

இவர் பாங்காக் வணிகக் கல்லூரியில் பயின்றார், 1993 இல், 22 வயதில், வச்ரலோங்கோர்னின் அலுவலகத்தில் " அந்தரங்க காரியதரியாக" நுழைந்தார். இவர் 1997 இல் சுகோதாய் தமதிராத் திறந்வெளி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மேலும், 2002 இல் மேலாண்மை அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். வச்ரலோங்கோர்ன் தனிப்பட்ட முறையில் இவரது சான்றிதழை இவருக்கு வழங்கினார். 2007 ஆம் ஆண்டில், கசெட்சார்ட் பல்கலைக்கழகத்தில் குடும்பமும், குழந்தை மேம்பாடும் என்ற பாடத்தில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார்.

திருமணமும் குடும்பமும் தொகு

தாய்லாந்தின் பட்டத்து இளவரசரை 10 பிப்ரவரி 2001 அன்று இளவரசரின் நொந்தபுரி அரண்மனையில் ஒரு தனிப்பட்ட விழாவில் மணந்தார்.[8] சிறிது காலம் கழித்து இந்த நிகழ்வு குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட இளவரசர் தனது முந்தைய மனைவிகளுடன் குழந்தைகளைப் பெற்றவராவார். தனது வாழ்க்கை முழுமையடைய வேண்டும் என்ற நோக்கத்தில் "எனக்கு இப்போது 50 வயது, எனக்கு ஒரு முழுமையான குடும்பம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று கூறினார். [5] திருமணத்திற்குப் பிறகு, இவர் அம்மா "சிறீராஸ்மி மகிதோல் நா ஆயுத்யா" (மகிதோல் என்பது மன்னர் பூமிபால் ஆதுல்யாதெச் மற்றும் மன்னர் ஆனந்த மகிதோல் ஆகியோரின் குடும்பப்பெயராகும். மேலும், நா ஆயுத்யா பதவி சக்ரி வம்சத்தின் பெயரிடப்படாத சந்ததியினரையும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களையும் குறிக்கிறது) என்ற பெயரில் அழைக்கப்பட்டார்..

பிப்ரவரி 14, 2005 அன்று, இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 29, 2005 அன்று, சிறீராஜ் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மகப்பேறு வழியாக இவருக்கு தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி என்ற மகன் பிறந்தார். பிறப்பு காரணமாக, இவருக்கு மன்னர் பூமிபால் அதுல்யாதெச்] "தாய்லாந்தின் இளவரசி" என்ற பட்டத்தை வழங்கினார். மேலும் "மாண்புமிகு" என்ற பெயரில் தனது அரச மனைவியாகவும் அங்கீகரிக்கப்பட்டார். குழந்தையின் முதல் மாதத்தை கொண்டாடும் விதமாக "பிரா ராட்சாபிதி சோம்போட் தியான் லா குயென் பிரா யு" என்ற அரச விழா 2005 சூன் 17 அன்று பாங்காக்கில் உள்ள அனந்தா சமகோம் சிம்மாசன மண்டபத்தில் நடைபெற்றது. [9]

இவர், தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கும் "சாய் யாய் ரக் சக் மே சு லுக்" (தாயிடமிருந்து குழந்தைகளுக்கு அன்பும் கவனிப்பும்) பிரச்சாரத்தைத் தொடங்கினார். [10] [11] பிரச்சாரத்தில் இவரது மகனின் படங்களும் இடம் பெற்றன.

நவம்பர் 2009 இல், இளவரசரின் செல்லப் பிராணியான பூபூ என்ற நாயின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஒரு நிகச்சியில் வச்ரலோங்கோர்னும், மேலாடை இல்லாத இவரும் இருக்கும் ஒரு காணொளி வெளியிடப்பட்டது. இது தம்பதியினரின் மோசமான வாழ்க்கை முறையை குறிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. [12]

விவாகரத்தும் தலைப்பு இழத்தலும் தொகு

இவரது குடும்பத்தினரின் அரச பெயரை நீக்குமாறு கேட்டு ஒரு கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு 2014 நவம்பரில் அனுப்பப்பட்டது. இவரது உறவினர்கள் ஏழு பேருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் இவரது கணவர் பட்டத்து இளவரசர் வச்ராலாங்கோர்ன் இந்த கடிதத்தை அனுப்பினார். 11திசம்பர் 2014 அன்று, தாய் பேரரசின் அரசாங்க வர்த்தமானி, மறைமுகமாக இவரது குடும்பத்துடன் தொடர்புடைய ஊழல் விவகாரங்கள் காரணமாக இவர் தனது அரச பட்டத்தை கைவிட்டதாக அறிவித்தது. இவருக்கு 200 மில்லியன் பாட் (6 மில்லியன் அமெரிக்க டாலர்) தொகையை இவரது கணவர் வச்ரலோங்கோர்ன் வழங்கினார். [13] நிதி அமைச்சகத்தால் உறுதிப்படுத்தப்பட்டபடி, அரசரின் சொத்து பணியகத்திலிருந்து பணம் செலுத்தப்பட்டது. [14]

விவாகரத்து செய்த பின்னர், இவரது தந்தை அபிருஜ் சுவாதியும், தாய் வாந்தனியும் அரசுக்கு எதிரான குற்றமச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டனர். 12 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் தங்கள் அரச தொடர்பை தவறாக பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டனர். மோசடி குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், இது இரண்டரை ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. [15] [16]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.ratchakitcha.soc.go.th/DATA/PDF/2556/B/025/1.PDF
  2. "ย้อนรำลึกภารกิจ 'ท่านผู้หญิงศรีรัศมิ์ สุวะดี'". 16 December 2014.
  3. "The Office of His Majesty's Principal Private Secretary, Thailand". The Thai Monarchy (in Thai). Archived from the original on 25 June 2014. பார்க்கப்பட்ட நாள் 14 December 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. มีพระบรมราชานุญาตให้ พระองค์เจ้าศรีรัศมิ์ฯ ลาออกจากฐานันดรศักดิ์ แห่งพระราชวงศ์. Thairath (in Thai). 13 December 2014. Archived from the original on 2 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  5. 5.0 5.1 "Simplicity, warmth win hearts". The Nation (Thailand). 30 April 2005. Archived from the original on 5 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 14 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Siam Thurakit newspaper, สายธารอันยิ่งใหญ่แห่งเจ้าชายน้อย, 16 สิงหาคม พ.ศ.2549 (in தாய் மொழி)
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Nation (Thailand). 19 December 2014 இம் மூலத்தில் இருந்து 7 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160407211644/http://www.nationweekend.com/home/article/1177/18367/%E0%B8%A3%E0%B8%AD%E0%B8%A2%E0%B8%97%E0%B8%B2%E0%B8%87-%E0%B8%AA%E0%B8%B8%E0%B8%A7%E0%B8%B0%E0%B8%94%E0%B8%B5-%E0%B9%81%E0%B8%AB%E0%B9%88%E0%B8%87%E0%B9%81%E0%B8%A1%E0%B9%88%E0%B8%81%E0%B8%A5%E0%B8%AD%E0%B8%87-%E0%B9%81%E0%B8%A5%E0%B8%B0-%E0%B9%80%E0%B8%81%E0%B8%B4%E0%B8%94%E0%B8%AD%E0%B8%B3%E0%B9%81%E0%B8%9E%E0%B8%87-%E0%B9%81%E0%B8%AB%E0%B9%88%E0%B8%87%E0%B8%97%E0%B9%88%E0%B8%B2%E0%B8%88%E0%B8%B5%E0%B8%99.html. பார்த்த நாள்: 30 December 2014. 
  8. Thailand's King Rama X - from pilot prince to powerful monarch
  9. "พระราชพิธีสมโภชเดือนและขึ้นพระอู่ พระเจ้าหลานเธอ พระองค์เจ้าทีปังกรรัศมีโชติ பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்" (in தாய் மொழி).
  10. "A chronicle of a Prince பரணிடப்பட்டது 29 செப்தெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்", The Nation
  11. "The Royal Family and people across the entire Kingdom yesterday celebrated the first birthday of HRH Prince Dipangkorn Rasmijoti, the son of Crown Prince Maha Vajiralongkorn பரணிடப்பட்டது 2018-12-15 at the வந்தவழி இயந்திரம்", The Nation via Thai Parliament web.
  12. Graham, Caroline. "How future queen of Thailand (wearing only a tiny G-string) let her poodle Foo Foo eat cake: As coup rocks Bangkok, video reveals royal couple's decadent lifestyle". Daily Mail. http://www.dailymail.co.uk/news/article-2638352/How-future-queen-Thailand-wearing-tiny-G-string-let-poodle-Foo-Foo-eat-cake-As-coup-rocks-Bangkok-video-reveals-royal-couples-decadent-lifestyle.html. பார்த்த நாள்: 4 April 2015. 
  13. พระมหากรุณาธิคุณ พระบาทสมเด็จพระเจ้าอยู่หัว. Thai Rath (in Thai). 14 December 2014. பார்க்கப்பட்ட நாள் 14 December 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  14. กระทรวงการคลัง (15 December 2014). "ข่าวที่ 106/2557 การชี้แจงของรัฐมนตรีว่าการกระทรวงการคลัง ในฐานะประธานกรรมการทรัพย์สินส่วนพระมหากษัตริย์ กรณีการพระราชทานเงินให้ท่านผู้หญิงศรีรัศม์ สุวะดี" (PDF). Archived from the original (PDF) on 16 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. "Parents of former Thai princess jailed for insulting monarchy". The Telegraph. ராய்ட்டர்ஸ். 11 March 2015. https://www.telegraph.co.uk/news/worldnews/asia/thailand/11464642/Parents-of-former-Thai-princess-jailed-for-insulting-monarchy.html. பார்த்த நாள்: 8 August 2017. 
  16. "Parents of Thai ex-princess given jail term for lese majeste". BBC News. 11 March 2015. https://www.bbc.com/news/world-asia-31828475. பார்த்த நாள்: 8 August 2017. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீராஸ்மி_சுவாதி&oldid=3717505" இலிருந்து மீள்விக்கப்பட்டது