சிறீலால் சுக்லா
சிறீலால் சுக்லா (Shrilal Shukla) என்பவர் (31 டிசம்பர் 1925 - 28 அக்டோபர் 2011 [1] ) ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவர் உத்தரபிரதேச மாநில அரசில் மாநிலத்திற்குரி குடிமைப் பணி அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் இந்திய குடிமைப் பணி அதிகாரியாக பதவி உயர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.[2]
சிறீலால் சுக்லா | |
---|---|
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இந்திய சமுதாயத்தில் வீழ்ச்சியடைந்த தார்மீக விழுமியங்களை சுக்லா தனது நாவல்கள் மூலம் எடுத்துரைத்துள்ளார். அவரது எழுத்துக்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் வாழ்க்கையின் எதிர்மறையான அம்சங்களை நையாண்டி முறையில் அம்பலப்படுத்துகின்றன. இவரது மிகச்சிறந்த படைப்பான ராக் தர்பாரி ஆங்கிலத்திலும் மற்றும் 15 இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொலைக்காட்சி தொடர் 1980 களில் தேசிய வலையமைப்பில் பல மாதங்கள் தொடர்ந்தது. ஆத்மி கா சஹார் என்ற தலைப்பில் ஒரு துப்பறியும் நாவலையும் இவர் எழுதியுள்ளார் என்பது குறைவாக அறியப்பட்ட உண்மை. இது 'இந்துஸ்தான்' வார இதழில் தொடராக வெளியிடப்பட்டது.
விருதுகள்
தொகுசுக்லா 2011 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த இந்திய இலக்கிய விருதான ஞானபீட விருதைப் பெற்றார். இவரது முதல் பெரிய விருது 1969 ஆம் ஆண்டில் இவரது ராக் தர்பாரி நாவலுக்காக கிடைத்த சாகித்ய அகாடமி விருது ஆகும். பிஸ்ராம்பூர் கா சாண்ட் நாவலுக்காக 1999 ஆம் ஆண்டில் வியாஸ் சம்மன் விருதைப் பெற்றார்.[2] 2008 ஆம் ஆண்டில், இந்திய இலக்கியம் மற்றும் கலாச்சாரத்திற்கு அவர் செய்த பங்களிப்புக்காக இந்தியக் குடியரசுத் தலைவரால் பத்ம பூசண் விருது [3] இவருக்கு வழங்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு டிசம்பரில் அவரது 80 ஆவது பிறந்தநாளில், அவரது நண்பர்கள், சகாக்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் புது தில்லியில் ஒரு இலக்கிய மற்றும் கலாச்சார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஸ்ரீலால் சுக்லா - ஜீவன் ஹை ஜீவன் என்ற தலைப்பில் ஒரு சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. அதில் முனைவர் நாம்வர் சிங், ராஜேந்திர யாதவ், அசோக் வாஜ்பாய், தூத்நாத் சிங், நிர்மலா ஜெயின், லீலாதர் ஜகுடி, கில்லியன் ரைட், குன்வர் நாராயண் மற்றும் ரகுவீர் சஹாய் போன்ற பிரபல இலக்கிய பிரமுகர்கள் சிறீலால் சுக்லாவைப் பற்றி எழுதிய கருத்துக்கள் இடம் பெற்று உள்ளன. அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களும் இந்தப் புத்தகத்திற்கு பங்களித்தனர்.
இலக்கியப் பயணங்கள்
தொகுயூகோஸ்லாவியா, ஜெர்மனி, இங்கிலாந்து, போலந்து, சுரினாம் ஆகிய நாடுகளுக்கு பல்வேறு இலக்கிய கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் விருதுகளைப் பெறுவதற்காக சென்றுள்ளார். இந்திய அரசு சீனாவிற்கு அனுப்பிய எழுத்தாளர்கள் குழுவிற்கும் தலைமை தாங்கினார்.
குடும்பம்
தொகுஇவரது மனைவி கிரிஜாவின் மரணத்திற்கு பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சுக்லா லக்னோவில் அக்டோபர் 28, 2011 அன்று காலை 11.45 மணியளவில், நீண்ட கால உடல்நலக்குறைவால் இறந்தார். கிரிஜா அம்மையார் சுக்லாவின் உண்மையான தோழராக இருந்தவர் ஆவார். பாரம்பரிய இசை மற்றும் இலக்கியத்தின் மீதான தனது அன்பை தனது கணவருடன் உணர்ச்சி நிரம்ப பகிர்ந்து கொண்டவர் ஆவார். ஸ்ரீ லால் சுக்லாவுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் - மகள்கள் ரேகா அவஸ்தி மற்றும் மதுலிகா மேத்தா ஆகியோர் இசைத் திறமையுள்ள இல்லத்தரசிகள் ஆவர்; மகன் அசுதோஷ் சுக்லா பெருநிறுவன கூட்டுறவு நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடைசியாக இளைய மகள் முனைவர் வினிதா மாத்தூர் டெல்லி பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியராக உள்ளனர். அவருக்கு எட்டு பேரக்குழந்தைகள் மற்றும் ஐந்து பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
குறிப்புகள்
தொகு- ↑ "Noted Hindi Novelist and Satirist Shrilal Shukla Passed Away". Jagranjosh.com. Archived from the original on 14 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 November 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 Vyas Samman 1999 பரணிடப்பட்டது 10 மார்ச்சு 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Padma Bhushan Official listings Govt. of India website.