சிறீ நாராயண ஜெயந்தி
சிறீ நாராயண ஜெயந்தி (Sri Narayana Jayanthi) என்பது கேரளாவின் அரசு விழா ஆகும். இது மலையாள நாட்காட்டியின் சிங்கம் மாதத்தில் ஓணம் காலத்தில் சதயம் நாளில் கொண்டாடப்படுகிறது. இது இந்து மதத்தின் சாதி அமைப்புக்கு எதிராகப் போராடிய இந்தியாவின் துறவியும் சமூக சீர்திருத்தவாதியுமான நாராயணகுருவின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
அரசு விழாவாக அன்றைய தினம் கேரளாவில் பள்ளிகள், வங்கிகள் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.[1]
மலையாள மாதமான சிங்கத்தின் (சிம்மம்) சதயம் நட்சத்திரத்தில் குருவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. சாதி வெறி, பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவற்றால் துண்டு துண்டாக உடைந்த சமூகத்தில், 'ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே கடவுள்' என்ற பொன்மொழியை நாராயண குரு வலியுறுத்தினார்.
மத நல்லிணக்க ஊர்வலங்கள், மாநாடுகள், மலர் அஞ்சலிகள், சமுதாய பிரார்த்தனைகள், ஏழைகளுக்கு உணவளித்தல், படகு போட்டி மற்றும் சமூக விருந்துகள் ஆகியவை நாராயண ஜெயந்தி கொண்டாட்டங்களைக் குறிக்கின்றன.[2]
நாராயண குரு ஜெயந்தி அண்டை மாநிலமான கருநாடகத்தில் மங்களூர் பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sree Narayana Guru Jayanti 2023". www.bankbazaar.com (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.
- ↑ "Sree Narayana Jayanthi boat race, Kumarakom, Kottayam, Kerala, India". Kerala Tourism - Kumarakom (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.
- ↑ "Narayana Guru Jayanti state event in Mangaluru". The Times of India. 2022-09-06. பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.
மேலும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- அமெரிக்காவில் ஜெயந்தி விழா பரணிடப்பட்டது 2007-08-16 at the வந்தவழி இயந்திரம்
- துபாயில் பில்லாவாஸ் ஜெயந்தி கொண்டாட்டம் பரணிடப்பட்டது 2016-10-26 at the வந்தவழி இயந்திரம்
- மும்பையில் கொண்டாட்டம் பரணிடப்பட்டது 2017-05-22 at the வந்தவழி இயந்திரம்