சிலக்கலூரிப்பேட்டை
சிலக்கலூரிப்பேட்டை (Chilakaluripet) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது நரசராபேட்டை வருவாய் பிரிவில் உள்ள சிலக்கலூரிபேட்டை மண்டலத்தின் வட்டத் தலைமையகமாகும். [1] இந்தப் பகுதியைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்கள் ஏஎம்ஜி இந்தியா சர்வதேச அமைப்பின் நிறுவனர் ஜான் டேவிட் என்பவராவார்.
நிலவியல்
தொகுஇது மாநிலத்தின் கடலோர ஆந்திர பிராந்தியத்தில் 16.10 ° வடக்கேயும், 80.16 ° கிழக்கிலும், கிழக்கு கடலோர சமவெளிகளில் அமைந்துள்ளது. மாவட்ட தலைமையகம் குண்டூருக்கு தென்மேற்கே 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், அமராவதிக்கு (மாநில தலைநகரம்) வடக்கே 75 கிலோமீட்டர் (46 மைல்) தொலைவிலும் சிலக்கலூரிபேட்டை அமைந்துள்ளது. [2] இந்தியாவின் நிலநடுக்க மண்டலங்களின்படி இந்த நகரம் மண்டலம் 3 இல் அமைந்துள்ளது. நாகார்ஜுனா சாகர் வலது கால்வாயிலிருந்து கிருட்டிணா ஆற்றின் தண்ணீர் இங்கு குடியிருப்பாளர்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
புள்ளிவிவரங்கள்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 101,550 என்ற அளவில் உள்ளது. மொத்த மக்கள் தொகையில், 50,201 ஆண்களும் 51,349 பெண்களும் உள்ளனர். சராசரி பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1023 பெண்களென்று இருக்கின்றனர். இது தேசிய சராசரியான 1000 க்கு 940 ஐ விட அதிகமாகும். [3] 9,525 குழந்தைகள் 0–6 வயதுக்குட்பட்டவர்கள், அவர்களில் 4,916 சிறுவர்கள் மற்றும் 4,609 பேர் பாலின விகிதத்தில் 1000 க்கு 938 என்ற விகிதத்தில் உள்ளனர். சராசரி கல்வியறிவு விகிதம் 72.08 சதவீதமாக உள்ளது. 52,106 கல்வியாளர்கள், தேசிய சராசரியான 73.00 சதவீதத்தை விட குறைவாக உள்ளனர். .[4]
குடிமை நிர்வாகம்
தொகுசிலக்கலூரிபேட்டை நகராட்சி 1964 ஆம் ஆண்டில் மூன்றாம் வகுப்பு நகராட்சியாக அமைக்கப்பட்டது. இது 1980 இல் இரண்டாம் தரமாகவும் 2001 ல் முதல் தரமாகவும் மேம்படுத்தப்பட்டது. நகராட்சியின் அதிகார வரம்பு 34 பகுதிகளுடன் 18.13 கிமீ (11.27 மைல்) பரப்பளவில் பரவியுள்ளது [2]
பொருளாதாரம்
தொகுசிலகலூரிபேட்டை என்பது விசயவாடா-சிலகலூரிபேட்டை வளர்ச்சி நடைபாதையின் ஒரு பகுதியாகும். [5] நகராட்சி, விசயவாடா மற்றும் குண்டூர் மாநகராட்சிகளுடன் இணைந்து 15 மெகாவாட் கழிவு-ஆற்றல் ஆலை திட்டத்தின் ஒரு பகுதியாகும். [6]
குறிப்புகள்
தொகு- ↑ "Adminsistrative divisions of Guntur district" (PDF). guntur.nic.in. Archived from the original (PDF) on 26 June 2014. பார்க்கப்பட்ட நாள் 16 January 2015.
- ↑ 2.0 2.1 "Chilakaluripet Municipality |". Chilakaluripet Municipality. Archived from the original on 8 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.
- ↑ "Sex Ratio". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
- ↑ "Chapter–3 (Literates and Literacy rate)" (PDF). Registrar General and Census Commissioner of India. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
- ↑ "Need to enforce building rules: VGTM-UDA vice-chief". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/need-to-enforce-building-rules-vgtmuda-vicechief/article3638675.ece. பார்த்த நாள்: 2016-04-05.
- ↑ "Waste-to-energy plant to be set up in Guntur". http://www.thehindu.com/news/national/andhra-pradesh/wastetoenergy-plant-to-be-set-up-in-guntur/article8205532.ece. பார்த்த நாள்: 18 February 2016.