சி. அப்துல் அக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
சி. அப்துல் ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (C. Abdul Hakeem College of Engineering & Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், வேலூரில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆகும். இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இதக்கல்லூரியானது பொறியியல் மற்றும் மேலாண்மைத் துறையில் 14 இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது. 1918 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மெல்விஷாரம் முஸ்லீம் கல்விச் சங்கத்தால் நடத்தப்படும் பல கல்வி நிறுவனங்களில் இந்த கல்லூரியும் ஒன்றாகும். [1]
CAHCET | |
கல்லூரியின் முதனமை கட்டிடம் | |
குறிக்கோளுரை | Enter To Learn. Leave To Serve. |
---|---|
வகை | தனியார் (சிறுபான்மையினர் கல்வி நிறுவனம்) |
உருவாக்கம் | 1998 |
தலைவர் | எஸ். ஜியதுன் அகமது |
Provost | வி. எம். அப்துல் லத்தீப் |
முதல்வர் | முனைவர் ஏ. இராஜேஷ் |
அமைவிடம் | , , 12°54′26″N 79°17′45″E / 12.907334°N 79.295814°E |
வளாகம் | நகரப்புறம் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | www.cahcet.in |
வரலாறு
தொகுஇந்தக் கல்லூரியானது 1998 ஆம் ஆண்டில் மெல்விஷாரம் முஸ்லீம் கல்விச் சங்கத்தால் (MMES) நிறுவப்பட்டது. இக்கல்விச் சங்கமானது 1918 ஆம் ஆண்டு நவாப் சி. அப்துல் ஹக்கீம் அவர்களால் நிறுவப்பட்டது. இச்சங்கமானது பள்ளிக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்தியது. இதன் முதல் கல்லூரிக்கு நவாப் பெயரிடப்பட்டது. தற்போது, இந்த கல்விச்சங்கமானது இந்தியாவில் உள்ள அனைத்து சமய பின்னணியினருக்குமான பல கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கிறது. அவை பின்வருமாறு
- சி. அப்துல் அக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- சி. அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- எம்.எம்.இ.எஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- இஸ்லாமிய ஆடவர் மேல்நிலைப்பள்ளி
- இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- இஸ்லாமிய ஆடவர் தொடக்கப்பள்ளி
- இஸ்லாமிய மகளிர் தொடக்கப்பள்ளி
- ஹக்கீம் மெட்ரிகுலேஷன் பள்ளி
- எஃப். எம் தொடக்கப்பள்ளி
- ஆர். ஏ. தொடக்கப்பள்ளி
வளாகம்
தொகுஇக்கல்லூரி வளாகமானது மேல்விஷாரத்தில் அமைந்துள்ளது. மேல்விஷாரமானது வேலூரின் புறநகரப்பகுதி ஆகும். இப்பகுதியானது சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கல்லூரி வளாகமானது நிர்வாக கட்டிடம், இயந்திரத் துறை, மின்னணுத் துறை, மானுட அறிவியல் துறை, எம்பிஏ துறை, நூலகம், ஆடிட்டோரியம், கருத்தரங்கு மண்டபம், விளையாட்டு மைதானம், சிற்றுண்டிச்சாலை, மாணவர் விடுதி, மாணவியர் விடுதி உள்ளிட்ட பல கட்டிடங்களைக் கொண்டுள்ளது. விளையாட்டு மைதானம், பள்ளிவாசல் போன்ற சில வசதிகள் அதன் சகோதர நிறுவனமான சி. அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
கல்லூரி வளாகத்தில் பசுமைக் கட்டிமாக கட்டப்பட்ட கட்டிடங்களில் மத்திய நூலக கட்டிடமும் ஒன்றாகும். வளாகமானது கம்பியில்லாத் தொடர்பகத்தால் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது.
கல்வி
தொகுஇக்கல்லூரிக்கு புது தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ) ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [2]
குறிப்புகள்
தொகு- ↑ "Management at CAHCET". CAHCET. Archived from the original on 19 February 2014. பார்க்கப்பட்ட நாள் 21 February 2014.
- ↑ "Courses offered at CAHCET". CAHCET. Archived from the original on 24 February 2014. பார்க்கப்பட்ட நாள் 21 February 2014.