சி. அருளம்பலம்
சின்னையா அருளம்பலம் (Chinnaiah Arulampalam, 18 பெப்ரவரி 1909 - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
சி. அருளம்பலம் C. Arulampalam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் நல்லூர் | |
பதவியில் 1970–1977 | |
முன்னையவர் | இ. மு. வி. நாகநாதன் |
பின்னவர் | மு. சிவசிதம்பரம் |
குழுக்களுக்கான பிரதித் தலைவர் | |
பதவியில் 23 சூலை 1976 – 18 மே 1977 | |
முன்னையவர் | சேனபால சமரசேகர |
பின்னவர் | சி. ஆர். பெலிகம்மன |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 பெப்ரவரி 1909 |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
இனம் | இலங்கைத் தமிழர் |
அரசியலில்
தொகுஅருளம்பலம் 1952 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 2ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் கு. வன்னியசிங்கத்திடம் தோற்றார்.[2] பின்னர் 1956 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோற்றார்.[3]
அருளம்பலம் நல்லூர் தொகுதியில் மார்ச் 1960,[4] சூலை 1960[5] மற்றும் 1965[6] தேர்தல்களில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் இ. மு. வி. நாகநாதனிடம் தோற்றார். அவர் பின்னர் 1970 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாகநாதனை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[7] அவர் பின்னர் ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சிக்கு கட்சி மாறினார். இதன் பயனாக அவருக்கு 1975 ஆம் ஆண்டில் குழுப் பிரதித் தலைவர் பதவி கிடைத்தது..[8]
1977 தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் நல்லூர்த் தொகுதியில் போட்டியிட்டு 1,042 வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arulampalam, Chinnaiah". இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Deputy Chairman of Committees". இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.