நல்லூர் தேர்தல் தொகுதி

நல்லூர் தேர்தல் தொகுதி (Nallur Electorate) என்பது மார்ச் 1960 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவை உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் நல்லூர் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

1960 (மார்ச்) தேர்தல்கள் தொகு

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  இ. மு. வி. நாகநாதன் இலங்கைத் தமிழரசுக் கட்சி[3] வீடு 9,651 49.24%
  சி. அருளம்பலம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சைக்கிள் 6,808 34.73%
  ஏ. துரைராஜசிங்கம் லங்கா சமசமாஜக் கட்சி திறப்பு 1,870 9.54%
  மு. கார்த்திகேசன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நட்சத்திரம் 757 3.86%
செல்வராயன் மன்மதராயன் சூரியன் 291 1.48%
சின்னப்பு சின்னத்துரை ஏணி 224 1.14%
தகுதியான வாக்குகள் 19,601 100.00%
நிராகரிக்கப்பட்டவை 166
மொத்த வாக்குகள் 19,767
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 26,966
வீதம் 73.30%

1960 (சூலை) தேர்தல்கள் தொகு

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  இ. மு. வி. நாகநாதன் இலங்கைத் தமிழரசுக் கட்சி[3] House 11,728 65.44%
  சி. அருளம்பலம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கதிரை 6,195 34.56%
தகுதியான வாக்குகள் 17,923 100.00%
நிராகரிக்கப்பட்டவை 142
மொத்த வாக்குகள் 18,065
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 26,966
வீதம் 66.99%

1965 தேர்தல்கள் தொகு

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  இ. மு. வி. நாகநாதன் இலங்கைத் தமிழரசுக் கட்சி[3] வீடு 10,301 45.04%
  சி. அருளம்பலம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சைக்கிள் 9,860 43.11%
  அருளம்பலம் விசுவநாதன் லங்கா சமசமாஜக் கட்சி திறப்பு 2,709 11.85%
தகுதியான வாக்குகள் 22,870 100.00%
நிராகரிக்கப்பட்டவை 86
மொத்த வாக்குகள் 22,956
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 31,864
வீதம் 72.04%

1970 தேர்தல்கள் தொகு

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  சி. அருளம்பலம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சைக்கிள் 13,116 46.78%
  இ. மு. வி. நாகநாதன் இலங்கைத் தமிழரசுக் கட்சி[3] வீடு 12,508 44.61%
ஏ. ரட்ணம் தராசு 1,593 5.68%
  வி. சச்சிதானந்தம் லங்கா சமசமாஜக் கட்சி திறப்பு 484 1.73%
சி. தனபாலசிங்கம் சேவல் 223 0.80%
எஸ். சிறிநிவாசன் சுயேட்சை குடை 114 0.41%
தகுதியான வாக்குகள் 28,038 100.00%
நிராகரிக்கப்பட்டவை 92
மொத்த வாக்குகள் 28,130
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 35,747
வீதம் 78.69%

சி. அருளம்பலம் இலங்கை சுதந்திரக் கட்சிக்குத் தாவினார்.

1977 தேர்தல்கள் தொகு

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  மு. சிவசிதம்பரம் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 29,858 89.42%
கே. இராமநாதன் சுயேட்சை ஓம்னிபஸ் 1,721 5.15%
  சி. அருளம்பலம் இலங்கை சுதந்திரக் கட்சி கை 1,042 3.12%
ராஜ ராஜேஸ்வரம் தங்கராஜா சுயேட்சை தராசு 667 2.00%
சிவக்கொழுந்து சுப்பிரமணியம் சுயேட்சை குடை 104 0.31%
தகுதியான வாக்குகள் 33,392 100.00%
நிராகரிக்கப்பட்டவை 137
மொத்த வாக்குகள் 33,529
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 40,205
வீதம் 83.40%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் எம். சிவசிதம்பரம் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்[8].

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு