சி. பாலகிருட்டிணன்

இந்தியாவைச் சேர்ந்த மலையேறி

சி. பாலகிருட்டிணன் (C. Balakrishnan) கேரளத்தைச் சேர்ந்த ஒரு மலையேறியாவார். இவர் 1965 ஆம் ஆண்டில் கேப்டன் மோகன் சிங் கோக்லி தலைமையிலான மூன்றாவது இந்திய எவரெசுட்டு பயணத்தில் ஓர் உறுப்பினராக இருந்தார். இக்குழுவே வெற்றிகரமாக எவரெசுட்டு சிகரத்தை எட்டிய முதல் இந்தியப்பயணக்குழுவாகும். குழுவில் 21 முக்கிய பயண உறுப்பினர்கள் மற்றும் 50 செர்பாக்கள் இடம்பெற்றிருந்தனர். இந்திய இராணுவம் 1960 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட எவரெசுட்டு சிகரம் ஏறும் முதல் இரண்டு பயணங்களில் பாலகிருட்டிணன் கம்பியிலி இயக்கியாகப் பங்கேற்று ஒரு பகுதியாக இருந்தார். [1][2][3][4][5][6] மலை ஏறுவதைத் தவிர, 1950 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் பங்கேற்று பதக்கம் வென்றார். 1951 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நான்காவது இடத்தைப் பிடித்தார். இரஞ்சி கோப்பை முதல் தர துடுப்பாட்ட சாம்பியன் போட்டியில் இவர் இரண்டு முறை இராணுவ அணிக்காக விளையாடினார். [7]

சி. பாலகிருட்டிணன்
C.Balakrishnan
{{{lived}}}
இறப்பு செப்டம்பர் 9, 2007
தரம் Company Quartermaster Havildar.gif படைத்துறை தலைவர்
விருதுகள்
1965 ஆம் ஆண்டு முதலாவது வெற்றிகரமான மலையேற்றத்திற்கான நினைவு அஞ்சல் வில்லை

விருதுகள்தொகு

பாலகிருட்டிணணின் செயல்களைப் பாராட்டி அருச்சுனா விருது வழங்கப்பட்டது. [8][9] இவ்விருதைப் பெற்ற முதலாவது தென்னிந்தியர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

இந்திய ராணுவத்தில் அவில்தார் எனப்படும் படைத்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 அன்று புனேவில் உள்ள தனது வாடகை வீட்டில் காலமானார். இவரது மரணத்திற்குப் பிறகு கேரள அரசு 2016 ஆம் ஆண்டில் திருச்சூர் அருகே பொங்கனக்கட்டு என்ற இடத்தில் பாலகிருட்டிணன் குடும்பத்திற்காக ஒரு வீட்டைக் கட்டிக்கொடுத்தது. [10]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._பாலகிருட்டிணன்&oldid=3058863" இருந்து மீள்விக்கப்பட்டது