சி. புல்லையா

செட்டிஜல்லு புல்லையா (Chittajallu Pullayya) (1898 - அக்டோபர் 6 1967) மேலும் சி புல்லையா என்றும் அறியப்படும் இவர், ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனராவார். தெலுங்குத் திரையுலகில் முக்கியமாகப் பணியாற்றினார். இவர் தெலுங்கு நாடக இயக்கத்தின் தந்தை என்றும் கருதப்படுகிறார். 1933ஆம் ஆண்டில், ஈஸ்ட் இந்தியா திரைப்பட நிறுவனத்தின் முதல் இந்தியத் திரைப்படமான சதி சாவித்ரி மூலம் வெனிசு திரைப்பட விழாவில் கௌரவ விருது பெற்ற திரைப்பட இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இவர், சதி அனுசுயா, முதல் குழந்தைகள் படமான லவகுசா (1934) ஆகியவற்றை இயக்கியுள்ளார். [1] [2]

சி. புல்லையா
பிறப்புசெட்டிஜல்லு புல்லையா
1898
காக்கிநாடா, இந்தியா
இறப்பு(1967-10-06)6 அக்டோபர் 1967
சென்னை, இந்தியா
பணிஇயக்குநர்

ஈஸ்ட் இந்தியா திரைப்பட நிறுவனத்தின் கீழ் பக்கிண்டி அம்மாயி, வர விக்ரயம், மாலதி மாதவம் ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். சென்னைக்கு தனது தளத்தை மாற்றிய பின்னர் ஜெமினி ஸ்டூடியோஸின் கீழ் பால நாகம்மா, அபூர்வ சகோதரர்கள், விந்தியா ராணி ஆகியவற்றை இயக்கியுள்ளார். தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற இந்து காவியமான இராமாயணத்தின் இலவன், குசன் ஆகியோரைப் பற்றிய லவகுசா இவரது குறிப்பிடத்தக்கப் பட்மாகும். [3]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._புல்லையா&oldid=3708899" இருந்து மீள்விக்கப்பட்டது