சி. ராமச்சந்திர ராவ்

இந்திய எழுத்தாளர்

சி. ராமச்சந்திர ராவ் (C. Ramachandra Rao) (பிறாப்பு; 1931 ) பிறந்தார்). ஓர் தெலுங்கு சிறுகதை எழுத்தாளரும், டென்னிசு வீரரும் மற்றும் நீலகிரியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தின் தலைமை நிர்வாகியாக இருந்து ஓய்வு பெற்றவருமாவார். 1956 வரை பல ஆண்டுகள் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற டென்னிசு வீரராகத் திகழ்ந்தார்.

சி. ராமச்சந்திர ராவ்
பிறப்பு1931
பெத்தாபுரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிRetired Chief Executive of a Tea Plantation in Nilgiri
அறியப்படுவதுதெலுங்குச் சிறுகதை எழுத்தாளர் & டென்னிசு வீரர்

சொந்த வாழ்க்கை

தொகு

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவிலுள்ள பெத்தாபுரம் நகரின் பிறந்த ராமச்சந்திர ராவ், சென்னை, மாநிலக் கல்லூரியில் (1950) அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பயின்றார். மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றவர்.

எழுத்தாளராக

தொகு

1960 களில் சி. ராமச்சந்திர ராவ் எழுதிய சிறுகதைகள் வேலு பிள்ளை என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பாக வெளியிடப்பட்டது [1] இந்த புத்தகம் இவருக்கு பரவலான பாராட்டைப் பெற்றுத் தந்தது. "வேலுப் பிள்ளை", "நல்ல தொழு", "எனகுலா ராய்", "கலி தேவரு", "டென்னிஸ் போட்டி" போன்றவை இவரது புகழ்பெற்ற சிறுகதைகள் ஆகும்.

இவரது கதைகள் தோட்ட வாழ்க்கையின் யதார்த்தமான மற்றும் உயிரோட்டமான சித்தரிப்புக்காக பாராட்டப்படுகின்றன. ஐம்பது ஆண்டுகளில் இவர் ஒன்பது சிறுகதைகளை மட்டுமே எழுதினார். ஆனால் இவை ஒவ்வொன்றும் சாசோ, பாபு, முல்லப்புடி வெங்கட ரமணா, [2] நந்தூரி ராம்மோகன ராவ் போன்ற பல பிரபல தெலுங்கு எழுத்தாளர்களால் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ராமச்சந்திர_ராவ்&oldid=3849713" இலிருந்து மீள்விக்கப்பட்டது