சீதாராம் சேக்சாரியா

சீதாராம் சேக்சாரியா (Sitaram Seksaria)(1892-1982) என்பவர் இந்திய விடுதலை ஆர்வலர், காந்தியவாதி, சமூக சீர்திருத்தவாதி மற்றும் மேற்கு வங்காள மார்வாரி சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இவர் செய்த பங்களிப்புகளுக்காக அறியப்பட்டவர். இவர் சுயமாகப் படித்தவர் முன்னேறியவர். இவர் ஸ்ரீ ஷிக்ஷாயதன், உயர் கல்வி நிறுவனம்,[1] மார்வாரி பாலிகா வித்யாலயா, ஒரு ஆரம்ப பள்ளி,[2] சமாஜ் சுதர் சமிதி, ஒரு சமூக அமைப்பு மற்றும் பாரதிய பாஷா பரிஷத் (அரசு சாரா அமைப்பு) உட்படப் பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் நிறுவனர் ஆவார்.[3] சில ஆண்டுகள் ஆசாத் ஹிந்த் பௌஜில் அமைச்சராகவும் பணியாற்றினார். சமூகத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1962ஆம் ஆண்டில் பத்மபூசண் என்ற மூன்றாவது உயரிய குடிமகன் விருதை இவருக்கு வழங்கியது.[4][5] இவரது வாழ்க்கை வரலாறு பத்மஸ்ரீ சீதாராம் சேக்ஸாரியா அபிநந்தன் கிரந்தம் என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இது சிங்கியால் தொகுக்கப்பட்டு 1974-ல் வெளியிடப்பட்டது. சேக்சாரியா 1982-ல் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "In Bapu's Footsteps" (PDF). Shree Shikshayatan College. 2016. Archived from the original (PDF) on 8 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 March 2016.
  2. "Growing Over the Years". The Telegraph. 28 December 2007. பார்க்கப்பட்ட நாள் 8 March 2016.
  3. "Brief History". Bharatiya Bhasha Parishad. 2016. Archived from the original on 24 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
  5. http://www.dashboard-padmaawards.gov.in/?Year=1962-1962&Award=Padma%20Bhushan&Name=Sitaram%20Seksaria[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதாராம்_சேக்சாரியா&oldid=3929986" இலிருந்து மீள்விக்கப்பட்டது