சீனாவில் போக்குவரத்து

சீனாவின் போக்குவரத்து, அண்மைய காலங்களில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. விமான நிலையங்கள், வீதிகள் மற்றும் புகையிரதப்பாதைகளின் வளர்ச்சியானது வருகின்ற ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சியிலும் முக்கியபங்காற்றும்.

The Transrapid Shanghai Maglev Train, with a top speed of 431 km/h (268 mph). It is the first and only commercial high-speed maglev line in the world.

சீனாவின் முக்கிய போக்குவரத்து ஊடகமான தொடர்வண்டி, இருபதாம் நூற்றாண்டுகளின் நடுப்பகுதிகளில் காணப்பட்ட அளவின் இரட்டிப்பளவு நீளம்கொண்டு தற்காலத்தில் இயங்குகின்றது. மிகப்பெரிய அளவிலான வலையமைப்பு என்பதால் நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் இதனுடைய சேவைகள் இருக்கின்றன. பெரிய நகரங்களிலே விரைவுப் போக்குவரத்தானது நடைமுறையில் உள்ளது. வேறு சில பெரிய நகரங்களிலே கட்டப்பட்டுக்கொண்டும் அல்லது திட்டமிடலிலும் உள்ளது. தானுந்து வாகனங்களின் பாவனையானது நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளின் வலையமைப்புக்களால் சீனா முழுவதும் வேகமாக விரிவடைந்துள்ளது.

நிலப்பரப்புக்களுக்கு ஏற்ப சீனாவின் போக்குவரத்தானது மாறுபட்டுக் காணப்படுகின்றது. சீனாவின் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தற்காலத்திலும் கூட இயந்திரமயப்படுத்தப்படாத போக்குவரத்து முறைகளிலேயே தங்கியிருக்க சீனாவின் சாங்காய் மற்றும் அதனது விமான நிலையத்தையும் இணைத்து நவீன மிதக்கும் தொடர்வண்டி முறையானது கட்டப்பட்டுள்ளது.

வரலாறு

தொகு

போக்குவரத்து உட்கமைப்பில் ஏற்படுத்தியிருக்கும் மாபெரும் வளர்ச்சியில் சீனா தனது நடுப்பகுதியைக் கடந்துள்ளது. அண்மைய காலங்களில் உட்கமைப்பில் இருந்த குறைபாடுகளைக் களைந்ததன்மூலம் தனது பொருளாதார வளர்ச்சியை தொடரமுடியுமாய் இருக்கின்றது. பொருளாதாரத்தை முன்னோக்கிச் செலுத்துவதற்கு பொருட்களையும் மக்களையும் நாடுபூராகவும் நகர்த்திப் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதில் உள்ள தேவையை சீனா உணர்ந்திருக்கிறது. உலக வங்கியின் புள்ளிவிபரங்களின் படி போக்குவரத்து உட்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் சீனாவின் மொத்த உற்பத்தியின் ஒரு சதவிகிதத்தைப் பாதித்திருக்கிறது (1990களில் நடாத்தப்பட்ட கணிப்பு).

சீனாவிலே பரந்தளவில் காணப்படுகின்ற நீர்வழிகளை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் வானூர்தி நிலையங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்வண்டி

தொகு
 
சீனாவின் தற்போதைய தொடருந்து வலையமைப்பு

சீனாவின் பலபாகங்களிலும் தொடர்வண்டியே அடிப்படையான மற்றும் முக்கியமான போக்குவரத்து முறையாக உள்ளது. 2011ஆம் ஆண்டில் சீனாவின் தொடர்வண்டிகள் 2,947 பில்லியன் டன்-கிலோமீட்டர் சரக்கை காவிச்சென்றுள்ளன. [1] மற்றும் 961.23 பில்லியன் பயணிகள்-கிலோமீட்டர்களைக் கடந்துள்ளன.[1] இவை இரண்டும் உலகிலேயே மிகப்பெரிய அளவிலான போக்குவரத்தாகக் கருதப்படுகிறது. சீனாவின் தொடர்வண்டிகள் காவும் அதிக கனவளவிலான போக்குவரத்தானது சீனாவின் பொருளாதாரத்துக்கு மாபெரும் பிரச்சினையாக உள்ளது. உலகின் 24% அளவிலான தொடர்வண்டி போக்குவரத்துக் கணவளவை, உலகின் 6% தொடர்வண்டிப் பாதைகளை கொண்டு நிறைவேற்றுவது சிக்கலானது. சீனாவின் தேசிய தொடர்வண்டி அமைப்பானது மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்தும் நாவீனமயப்படுத்தப்பட்டும் வருகின்றது. உலகின் மூன்றாவது மிகவும் பெரிய தொடர்வண்டி வலையமைப்பை சீனா கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின்படி 91,000 km (56,545 mi) நீளமான தொடர்வண்டிப் பாதைகளை சீனா தன்னகத்தே கொண்டுள்ளது. சில பாதைகள், 5,000 km (3,107 mi) 2009ஆம் ஆண்டிலிருந்து கட்டப்பட்டுள்ளது. 47% வலையமைப்பானது மின்மயப்படுத்தப்பட்டுள்ளது.[1]

அதிவேக தொடர்வண்டி

தொகு

அதிவேக சேவையானது முதன்மையாக சீனாவின் அதிவேக தொடர்வண்டி அமைப்பால் இயக்கப்படுகிறது. அக்டோபர் 2010 இன்படி 7,000+ கிமீ நீளமான பாதைகள் 250+ கிமீ/மணி வேகத்தில் பயணம் செய்ய உகந்தவை. 300+ கிமீ/மணி வேகத்தில் பயணம் செய்யக்கூடிய பாதைகளாவன:

  • பீய்யிங்–தியாஞ்சின் வழி 117 km (73 mi) நீளமானது
  • உவுகன்-குவங்குலௌ வழி 968 km (601 mi) நீளமானது
  • செங்குலௌ–சியன் வழி 457 km (284 mi) நீளமானது
  • சங்காய்-நாசிங் வழி 301 km (187 mi) நீளமானது
  • சங்காய்-கங்குலௌ வழி 160 km (99 mi) நீளமானது
  • குவாங்குலௌ-செஞ்சேன் வழி 160 km (99 mi) நீளமானது
  • பீய்யிங்-உவுகன் வழி 760 km (472 mi) நீளமானது
  • கார்பின்-டாலியன் வழி 924 km (574 mi) நீளமானது
  • சங்காய்-பீய்யிங் வழி 1,380 km (857 mi) நீளமானது

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Railway Statistical Bulletin for 2011". Ministry of Railway, People's Republic of China. Archived from the original on பிப்ரவரி 18, 2012. பார்க்கப்பட்ட நாள் February 15, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாவில்_போக்குவரத்து&oldid=3929998" இலிருந்து மீள்விக்கப்பட்டது