சுசீலா சரோஜ்
இந்திய அரசியல்வாதி
சுசீலா சரோஜ் (Sushila Saroj) இந்தியாவின் 15வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் மோகன்லால்கஞ்ச் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக சரோஜ் உள்ளார். மோகன்லால்கஞ்ச் தொகுதி பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.
Sushila Saroj | |
---|---|
பிறப்பு | 1 ஏப்ரல் 1951[1] கோரக்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா[1] |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
கல்வி | முதுகலை, இளங்கலை கல்வியியல் & இளங்கலைச் சட்டம்[1] |
பணி | அரசியல்வாதி, சமூக சேவகர் & விவசாயி |
செயற்பாட்டுக் காலம் | 1993–முதல் |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி (SP)[1] |
பெற்றோர் | மகாதேவ் பிரசாத் (தந்தை) & அனுராஜ் தேவி (தாய்)[1] |
வாழ்க்கைத் துணை | இராம் பிரகாசு சரோஜ்[1] |
பிள்ளைகள் | 3 மகள்கள் |
கல்வி
தொகுசரோஜ் முதுகலை, இளங்கலைச் சட்டம் பட்டத்தினை கோரக்பூர், ரோகில்கண்ட், கான்பூர் மற்றும் லக்னோவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் முடித்துள்ளார். இவர் 13வது மக்களவை உறுப்பினராகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும், உத்தரப் பிரதேச மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் விரங்கனா உதாதேவி பாசி ஸ்மாரக் சங்கதன் நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் பாசி அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.
வகித்த பதவிகள்
தொகு# | முதல் | வரை | பதவி |
---|---|---|---|
01 | 1993 | 1995 | உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்றம் (21 மாதங்கள்) |
02 | 1995 | 1999 | மாநில சமூக நலத்துறை அமைச்சர், உத்தரபிரதேசம் |
03 | 1999 | 2004 | 13வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் |
04 | 1999 | 2004 | உறுப்பினர், ரயில்வே குழு |
05 | 1999 | 2004 | உறுப்பினர், பெண்கள் அதிகாரமளித்தல் குழு |
06 | 1999 | 2004 | உறுப்பினர், ஆலோசனைக் குழு, தொழிலாளர் அமைச்சகம் |
07 | 2009 | 15வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2வது முறை) | |
08 | 31-ஆகத்து-2009 | உறுப்பினர், ரயில்வே குழு | |
09 | 04-செப்-2009 | உறுப்பினர், பாராளுமன்ற வளாக பாதுகாப்பு குழு | |
10 | 23-செப்-2009 | உறுப்பினர், பெண்கள் அதிகாரமளித்தல் குழு | |
11 | 23-செப்-2009 | உறுப்பினர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் | |
12 | 23-செப்-2009 | சுற்றுலா குழு உறுப்பினர் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Biography". Lok Sabha Website. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=402.