சுண்ணாம்புக் கோடிடும் கருவி
சுண்ணாம்புக் கோடிடும் கருவி (Chalk line அல்லது Chalk box) தட்டையான பரப்புகளில், நீளமான நேர்க்கோடுகளை வரையப் பயன்படுகிறது. இருப் புள்ளிகளுக்கிடையே நேர்க்கோடு வரைய இக் கருவி உதவுகிறது. தூக்குக்குண்டு செங்குத்துக் கோடுகளை வரைவதற்குப் பயன்படுகிறது.
தச்சு வேலையில் இக்கருவி மிகவும் பயன்படுகிறது. கரடு முரடான வெட்டு மரங்களைப் பயன்படுத்தும் முன்பாக நேராக்கவும், சதுர விளிம்புகளையும் ஏற்படுத்தவும் உதவுகிறது.
பயன்கள்
தொகுசுண்ணாம்புக் கோடிடும் கருவிகளில் நேர்க்கோடுகளை வரைய வண்ணச் சாயம் (பொதுவாக சுண்ணாம்புக் கோடு) ஏற்கனவேப் பூசப்பட்டு, இறுகக்கட்டிய நைலான் கயிறு அல்லது நூல் (இழை) பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோடிடப்பட வேண்டிய பரப்பில் கயிறு இறுக்கமாகப் பிடிக்கப்படுகிறது. கயிறு திடீரென இழுக்கப்பட்டு, பரப்பில் வண்ணம் விழுமாறு செய்யப்படுகிறது. கயிறு பரப்பில் விழும் போது நேர்க்கோடு வரையப்படுகிறது. சீரற்ற மற்றும் துளைகள் நிறைந்த பரப்பிலும் கோடுகள் வரைய உதவுகிறது. அதிகமாக இழுக்கப்படும் போதும், காற்றிலுள்ள ஈரப்பதம் காரணமாகவும் கயிறுகள் அடிக்கடி அறுந்து போகிறது.[1] சுண்ணாம்புக் கோடிடும் கருவி மற்றும் தூக்குக்குண்டும் ஒரே கருவியாக விற்பனை செய்யப்படுகிறது.[2]
வரலாறு
தொகுபண்டைய எகிப்திலேயே சுண்ணாம்புக் கோடுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.[3][4]
மைக்கோடுகள்
தொகுகிழக்காசியாவில் சுண்ணாம்புக் கோடுகளுக்குப் பதிலாக மையால் ஆன கோடுகள் வரையப்படுகிறது. சுமிட்சுபோ (sumitsubo) என்று சப்பானிய மொழியில் அழைக்கப்படும் அலங்காிக்கப்பட்ட மைப்புட்டிகளில், பஞ்சு நனைக்கப்பட்டு கோடுகள் வரையப்படுகிறது.[5] As with many such tools, they're often made by their users while apprentices.[6] கோயில் போன்ற பெரிய கட்டடங்களின் முகடு நாட்டல் என்ற விழாவின் போது தச்சரின் கருவிகளை வைப்பது வழக்கம். அதில் புதிதாக உருவாக்கப்பட்ட சுமிட்சுபோவும் (sumitsubo) ஒன்று.[7]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Fix-It Club (2007-03-14). "HowStuffWorks "Chalk Line"". Home.howstuffworks.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
- ↑ "(Fetched 2009-04-12)". Google.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
- ↑ "Water proof chalk line compositions for use with chalk line devices – US Patent 6203602". Patentstorm.us. Archived from the original on 2012-03-19. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
- ↑ "Chalk line dispenser holder system – US Patent 6044568". Patentstorm.us. 2000-04-04. Archived from the original on 2012-03-19. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
- ↑ "Gallery of Sumitsubo". Archived from the original on 2017-07-23. பார்க்கப்பட்ட நாள் 2017-12-02.
- ↑ Toshio Odate. Japanese Woodworking Tools. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85442-075-4.
- ↑ Azby Brown. The Genius of Japanese Carpentry. Kodansha America. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87011-897-8.
வெளியிணைப்புகள்
தொகு- Chalk line – One person operation (video)
- Chalk line – Two-person operation (video)
- Hand-made chalk-line (video)