சுதா சேஷய்யன்
சுதா சேஷய்யன், (பிறப்பு:25 செப்டம்பர் 1961) [1]சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் உடற்கூற்றியல் மருத்துவப் பேராசிரியாகவும், பதிவாளராகவும் பணியாற்றியவர். இவர் மருத்துவக் கல்வியாளரும், தமிழ் ஆன்மீக இலக்கியப் பேச்சாளரும் ஆவார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10-வது துணைவேந்தராக சுதா சேஷய்யன், 31 டிசம்பர் 2018 அன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் நியமிக்கப்பட்டார்.[2] 30 டிசம்பர் 2021 அன்று சுதா சேஷய்யன் பதவி ஓய்வு பெறும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஓராண்டுக்கு பதவி நீட்டித்து உத்தரவிட்டார்.[3] [4] சுதா சேஷய்யன் நான்கு ஆண்டுகள் துணைவேந்தராக பணியாற்றிய பின் 30 டிசம்பர் 2022 அன்று பணி ஓய்வு பெற்றார்.[5] இவருக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவராக பதவி வழங்கப்பட்டுள்ளது.[6]
சுதா சேஷய்யன் | |
---|---|
பிறப்பு | 25 செப்டம்பர் 1961 |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | மருத்துவர், பேச்சாளர் |
அறியப்படுவது | மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் |
சமயம் | இந்து |
இலக்கிய ஆர்வம்
தொகுஇவர் இலக்கியவாதியாகவும் ஆன்மீகப் பேச்சாளாராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் உள்ளார்.[7] தமிழ் ஆங்கிலம் மட்டுமல்லாமல் வடமொழியிலும் தேர்ச்சிபெற்றவர். ஆன்மீக நிகழ்வுகளுக்கு நேரடி வர்ணனை, வானொலி, தொலைக்காட்சிகளில் வர்ணனை, சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார்.[7] காசி சங்கமம், இந்திய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா போன்ற நிகழ்வுகளில் தமிழிலும் இந்தியிலும் தொகுத்து வழங்கியுள்ளார்.[8] விகடன் குழுமத்தின் தகவல் கலைஞ்சியத்தின் பதிப்பாசிரியராகவும், ஆன்மீகம், இலக்கியம் மருத்துவம் தொடர்பாகப் பல்வேறு நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார்.
எழுதிய நூல்கள்
தொகு- லெமுரியா குமரிக்கண்டம் (தொலைந்த கண்டத்தின் தொன்மைக் கதை)
- பஞ்ச சபைகள்
- ஸகல ஸௌபாக்யங்களும் அருளும் ஶ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் - விளக்கவுரை)
- குடும்பமும் தேசமும்
- தேவாரத் திருவுலா (பாகம் 3)
- அந்தக் கால மருத்துவர்கள்
- படிவங்கள் எப்படியோ?
- ஸ்ரீ லலிதா
- பேசும் பரம்பொருள் (வானதி பதிப்பகம்)
- நல்லன எல்லாம் தரும் (வானதி பதிப்பகம்)
- தேவாரத் திருவுலா (பாகம் 1)
- தேவாரத் திருவுலா (பாகம் - 2)
- உயிரற்ற உயிர்
விருதுகள்
தொகு'ஞானத்தமிழ் வாணி', 'அருள்மொழி அரசி' போன்ற பல பட்டங்களையும், 'பாரதி இலக்கியச் செல்வர்', 'கேப்டன் சேஷாத்ரி நாதன் விருது', 'சுதாசார வர்ஷிணி' எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[7] தமிழக அரசின் 2005-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதையும் 2024 எஸ்.ஆர்.எம்மின் தமிழ்ப்பேராய விருதையும் பெற்றுள்ளார்.[9] ஹம்சத்வானியின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த குடிமகன் விருது பெற்றவர்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ முன்னாள் துணைவேந்தர்கள்,தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
- ↑ எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார்
- ↑ சுதா சேஷய்யன் பதவி நீட்டிப்பு
- ↑ எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் பதவிக்காலம் நீட்டிப்பு
- ↑ எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஓய்வு
- ↑ "செம்மொழி நிறுவனத்தில் சுதா சேஷய்யனுக்கு பதவி". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-sudha-seshaiyan-appointed-in-classical-institute--/3729493. பார்த்த நாள்: 12 September 2024.
- ↑ 7.0 7.1 7.2 "இலக்கியம் வேறு ஆன்மீகம் வேறு அல்ல டாக்டர் கதா சேஷய்யன்". தென்றல். http://tamilonline.com/thendral/article.aspx?aid=4450. பார்த்த நாள்: 12 September 2024.
- ↑ "யார் இந்த சுதா சேஷய்யன்? நாடாளுமன்ற திறப்பு விழாவை தமிழ், இந்தியில் தொகுத்து வழங்கி அசத்தல்". நியூஸ்18 தமிழ். https://tamil.news18.com/national/doctor-sudha-seshayan-host-new-parliament-inaugration-function-994861.html. பார்த்த நாள்: 12 September 2024.
- ↑ "டாக்டா் சுதா சேஷய்யனுக்கு தமிழ்ப் பேராய விருது". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2024/Aug/13/sudha-seshayan-awarded-tamil-archbishop. பார்த்த நாள்: 12 September 2024.
- ↑ "Distinguished Citizen of the Year Award". பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.