சுதிர் முங்கதிவார்

இந்திய அரசியல்வாதி

சுதிர் முங்கதிவார், மகாராட்டிரம் மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், மகாராட்டிர சட்டமன்றம் மற்றும் சட்ட மேலளவை உறுப்பினராக பணியாற்றி வருபவர். இவர் தற்போது முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தலைமையிலான அமைச்சரவையில் மீன் வளத் துறை அமைச்சராக உள்ளார். முன்னர் இவர் தேவேந்திர பட்நவீஸ் தலைமையிலான அமைச்சரவையில் வனத்துறை மற்றும் நிதி & திட்டமிடல் துறைகளின் அமைச்சராக இருந்தவர். மேலும் முன்னாள் முதலமைச்சர்களான மனோகர் ஜோஷி மற்றும் நாராயண் ரானே ஆகியோரின் அமைச்சரவையில் சுற்றுலா, நுகர்வோர் நலன் & பாதுகாப்பு துறைகளின் அமைச்சராக இருந்தார்.[1][2][3]

சுதிர் முங்கதிவார்
Sudhir Mungantiwar1
அமைச்சர், வனத்துறை, மகாராஷ்டிர அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
9 ஆகஸ்டு 2022
முன்னையவர்ஏக்நாத் சிண்டே
அமைச்சர், மீன் வளத்துறை, மகாராஷ்டிர அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
9 ஆகஸ்டு 2022
அமைச்சர், பண்பாட்டுத் துறை
பதவியில் உள்ளார்
பதவியில்
9 ஆகஸ்டு 2022
அமைச்சர், நிதி மற்றும் திட்டமிடல் துறைகள்
பதவியில்
31அக்டோபர் 2014 – 12 நவம்பர் 2019
அமைச்சர், வனத்துறை
பதவியில்
31 அக்டோபர் 2014 – 12 நவம்பர் 2019
தலைவர், பாரதிய ஜனதா கட்சி மகாராட்டிரம்
பதவியில்
3 ஏப்ரல் 2010 – 11 ஏப்ரல் 2013
முன்னையவர்நிதின் கட்காரி
பின்னவர்தேவேந்திர பட்நவீஸ்
துணை அமைச்சர்
பதவியில்
1995–1999
அமைச்சர்சுற்றுலா, நுகர்வோர் நலன் & பாதுகாப்பு துறைகள்
உறுப்பினர், சட்ட மேலளவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
தொகுதிபல்லார்பூர் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1995–2009
தொகுதிசந்திரபூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சூலை 1962 (1962-07-30) (அகவை 62)
சந்திரபூர், மகாராட்டிரம், இந்தியா
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சப்னா முங்கதிவார்
உறவுகள்மணமானவர்
பிள்ளைகள்1
முன்னாள் கல்லூரிஎம். பில்
தொழில்அரசியல்வாதி

விதர்பா பகுதியைச் சேர்ந்த இவர் 1995–1999 முதல் 2014–2019 முடிய காலகட்டத்தில் பல்லார்பூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் சந்திரபூர் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Maharashtra Government Ministers List with Portfolios 2017". newincept.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-31.
  2. "Sudhir Mungantiwar new Maharashtra BJP chief" (in en-IN). The Hindu. 2010-04-04. http://www.thehindu.com/news/national/Sudhir-Mungantiwar-new-Maharashtra-BJP-chief/article16363824.ece. 
  3. "Sudhir Mungantiwar to be second in command in new Maharashtra government". mid-day. http://www.mid-day.com/articles/sudhir-mungantiwar-to-be-second-in-command-in-new-maharashtra-government/15722189. 

[[Category:வாழும் நபர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதிர்_முங்கதிவார்&oldid=4163189" இலிருந்து மீள்விக்கப்பட்டது