சுனிதா கோதாரா

சுனிதா கோதாரா (Sunita Godara) இந்தியாவின் உத்தரப் பிரதேசமாநிலத்தின் புலந்த்சாகர் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமமான நவுசானாவைச் சேர்ந்த முன்னாள் இந்திய மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஆவார். 1984 ஆம் ஆண்டு தில்லி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மராத்தான் வீரர் ஆனார். மலேசியா, தாய்லாந்து, இந்தியா, சிங்கப்பூர், பிலிப்பீன்சு, இந்தோனேசியா, ஆலந்து, எகிப்து, சப்பான், பாரிஸ், ஆத்திரேலியா, இத்தாலி, இசுதான்புல், துருக்கி, பினாங்கு , கடாரம் (நான்கு முறை) போன்ற இடங்களில் நடந்த மராத்தான்களில் போட்டியிட்டு முதல் இடங்களை வென்றார். 1992 ஆம் ஆண்டு பண்டுங்கில் நடைபெற்ற ஆசிய மராத்தான் போட்டியில் தங்கம் வென்றார். இவர் 1985 பாஸ்டன் மராத்தான் & 1990-1991 இலண்டன் மராத்தான் போட்டிகளில் பங்கேற்றார்.[1] இவர் ராஜஸ்தானின் பனஸ்தலி வித்யாபீடத்தில் தனது கல்லூரியை முடித்தார்.

பின்தங்கிய மக்களின் ஒட்டுமொத்த அதிகாரமளிப்புக்கான தகவல் மற்றும் வசதி மையத்தை வழங்குவதே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கும் சுனிதாவின் அறக்கட்டளை

மாரத்தான்

தொகு

ஒரு இந்தியர் சுனிதா கோதாரா நடைபெற்ற மராத்தான்களில் அதிகபட்ச மராத்தான்களில் ஓடி சாதனை படைத்துள்ளார். இவர் 1987இல் ரத் மராத்தானில் தொடங்கி 76 முழு மராத்தான்களில் ஓடியுள்ளார். 25 முறை முதலிடத்தையும், 12 முறை இரண்டாவது இடத்தையும், 14 முறை மூன்றாவது இடத்தையும் அடைந்தார். அதைத் தவிர, இவர் 123 அரை மராத்தான்களை வென்றுள்ளார். மேலும் அனைத்து கண்டங்களிலும் நடந்த 200 சர்வதேச பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். 1990 ஆம் ஆண்டில் இவர் 2 மணிநேரம் 49.21 நிமிடங்கள் கடந்து உலகத்தரம் வாய்ந்த போட்டியில் வென்ற முதல் இந்தியர் ஆனார். இவர் பினாங்கு, கடாரம் ஆகிய இடங்களில் நடந்த மராத்தான்களில் பதக்கங்களை வென்றார். 1989 இல், சிங்கப்பூரில் நடந்த மொபில் சர்வதேச மராத்தான் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். [2] 1996இல் அட்லான்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களின் தொடக்க விழாவில் இவர் ஒலிம்பிக் தீச்சுடர் ஏந்தி வந்தார். இவர் கல்லூரி விளையாட்டுத் திட்டமான இந்திய கல்லூரி தடகளத் திட்டத்தின் (ICAP) வழிகாட்டியாகவும் இருக்கிறார். [3]

பதக்கங்கள்

தொகு

டாக்டர். சுனிதா கோதாரா புகழ்பெற்ற சர்வதேச மராத்தான் வீரர் ஆவார். இவர் இன்றுவரை 76 முழு மராத்தான்களை (42.2 கிமீ) நிறைவு செய்துள்ளார். மேலும், 26 நாடுகளில் உலகம் முழுவதும் 25 தங்கம், 12 வெள்ளி , 13 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் 130,000 கிமீ ஓட்டப்பந்தயத்திலும் பங்கேற்றுள்ளார். 200 க்கும் மேற்பட்ட உள்நாட்டு பந்தயங்களின் பதிவுகளில் 2010 வரை மராத்தான் வாழ்ககியில் 123 அரை மராத்தானும் (21 கிமீ) அடங்கும்.

சர்வதேச மாரத்தான்

தொகு

இவர் பாங்காக், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், எகிப்து மற்றும் அலந்து ஆகிய நாடுகளில் மராத்தான்களை வென்றார். இவர் பாரிஸ், மெல்போர்ன் - ஆஸ்திரேலியா, [[மக்காவ், போலந்து, இத்தாலி, இஸ்தான்புல், பெல்கிரேட் & லாஸ் வேகாஸ் ஆகிய இடங்களில் முதல் பத்து இடங்களில் இருந்தார். இவர் உலகப் புகழ்பெற்ற பாஸ்டன், பெர்லின் & இலண்டன் மராத்தான்களிலும் ஓடியுள்ளார். 60 முழு மராத்தான்கள் மற்றும் 120 அரை மராத்தான்கள் - அதிகபட்ச நாடுகளில் எந்த இந்தியரும் வெல்லாத அதிகபட்சமாக சர்வதேச மராத்தான்களை வென்றார். 2006ஆம் ஆண்டு முதல், டாக்டர் சுனிதா தொழில் ரீதியாக சிறந்த இந்திய மராத்தான் நிறுவனமான "எலைட் ரன்னர்ஸ்" ஒருங்கிணைப்பாளராக ஒருங்கிணைத்து வருகிறார்.

சான்றுகள்

தொகு
  1. "Meet Champion Turned Coach Dr. Sunita Godara". Archived from the original on 2021-09-28. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  2. "Karunanidhi marries off his daughter Kanimozhi to millionaire Adipan Bose".
  3. "Meet Dr. Sunita Godara, The Marathon Queen Of India". பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_கோதாரா&oldid=3577276" இலிருந்து மீள்விக்கப்பட்டது