சுபதவர்மன்
சுபதவர்மன் (Subhatavarman) (ஆட்சிக் காலம். கி.பி. 1194-1209 ), சோஹதன் என்றும் அழைக்கப்படும் இவர், மத்திய இந்தியாவின் மால்வா பகுதியில் ஆட்சி செய்த பரமார வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார்.
சுபதவர்மன் | |
---|---|
மால்வாவின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | அண். 1194 – அண். 1209 CE |
முன்னையவர் | விந்தியவர்மன் |
பின்னையவர் | முதலாம் அர்ச்சுனவர்மன் |
அரசமரபு | பரமார வம்சம் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசுபதவர்மன் தனது தந்தை விந்தியவர்மனுக்குப் பிறகு பரமார மன்னரானார். [1] குசராத்தின் சோலாங்கியர்களின் இரண்டு தசாப்த கால ஆட்சிக்குப் பிறகு, இவரது தந்தை விந்தியவர்மன் மால்வாவில் பரமார இறையாண்மையை மீண்டும் நிறுவினார். இவருடைய ஆட்சியின் முற்பகுதியில் முஸ்லிம் படையெடுப்புகளால் சோலங்கியர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, சுபதவர்மன் லதா பகுதியை (தெற்கு குசராத்) வெற்றிகரமாக ஆக்கிரமித்தார். [2]
குசராத் படையெடுப்பு
தொகு14 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர் மெருதுங்காவின் கூற்றுப்படி , சோலங்கிய மன்னன் இரண்டாம் பீமனின் எதிப்பை அடுத்து, சுபதவர்மன் குசராத் எல்லையில் இருந்து பின்வாங்கினார். ஆனால் இது வரலாற்று சான்றுகளால் ஆதரிக்கப்படவில்லை.[3] சுபதவர்மன் பொ.ச. 1204இல் சோலங்கிய பகுதிகளின் மீது படையெடுத்தார், மேலும் அவர்களின் தலைநகரான பதானைத் (அல்லது அன்ஹிலபடகா) தாக்கியதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.[2] குசராத்தி நாளேடுகளின்படி, இவர் தர்பாவதியை (இன்றைய தபோய் ) சில காலம் ஆக்கிரமித்திருந்தார். மாளவ மன்னன் தர்பாவதி வைத்தியநாதர் கோயிலில் இருந்த தங்கக் குடங்களை கொள்ளையடித்தாகக் கவிஞர் அரிசிம்மர் குறிப்பிடுகிறார்; இவை பின்னர் சைன வணிகரும் வகேலா மந்திரியுமான வாஸ்துபாலனால் மீட்டெடுக்கப்பட்டன. [3] நரேந்திரபிரபாவின் வாஸ்துபால-பிரஷஸ்தி இந்த மாளவ மன்னனுக்கு சுபதவர்மன் என்று பெயரிட்டுள்ளது.[4] ஈரானிய வரலாற்றாசிரியர் முஹம்மது ஆஃபி, தனது ஜவாமி உல்-ஹிகாயத் என்ற நூலில், ஒரு பரமார அரசன் குசராத்தின் நகரங்களை கொள்ளையடித்ததாகவும், இந்து கோவில்களையும் பள்ளிவாசல்களையும் அழித்ததாகவும் குறிப்பிடுகிறார்.[5] இது அநேகமாக சுபதவர்மனின் படையெடுப்பைக் குறிக்கிறது.[3] அரபு வணிகர்களுக்காக சோலங்கியர்களால் காம்பத்தில் கட்டப்பட்ட ஒரு பள்ளிவாசலை பரமார மன்னன் அழித்ததாக நம்பப்படுகிறது. [6]
சுபதவர்மன் ஒரு விஷ்ணு கோவிலுக்கு இரண்டு தோட்டங்களை தானமாக வழங்கியதாகத் தெரிகிறது.[7] இவருக்குப் பிறகு இவரது மகன் முதலாம் அர்ச்சுனவர்மன் பதவிக்கு வந்தான்.[8]
சான்றுகள்
தொகு- ↑ Trivedi 1991, ப. 162.
- ↑ 2.0 2.1 Majumdar 1956, ப. 146.
- ↑ 3.0 3.1 3.2 Majumdar 1956, ப. 147.
- ↑ Laughlin 2003, ப. 308.
- ↑ Siddiqi 2010, ப. 91.
- ↑ Thapar 2008, ப. 225.
- ↑ Jain 1972, ப. 416.
- ↑ Trivedi 1991, ப. 163.
உசாத்துணை
தொகு- A. S. Altekar (1960). Ghulam Yazdani (ed.). The Early History of the Deccan Parts. Vol. VIII: Yādavas of Seuṇadeśa. Oxford University Press. இணையக் கணினி நூலக மைய எண் 59001459. Archived from the original on 28 August 2016. பார்க்கப்பட்ட நாள் 23 ஜனவரி 2022.
{{cite book}}
: Check date values in:|access-date=
(help); More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) - Jain, Kailash Chand (1972). Malwa Through the Ages, from the Earliest Times to 1305 A.D. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0824-9.
- Laughlin, Jack C. (2003). Phyllis Granoff and Koichi Shinohara (ed.). Pilgrims, Patrons, and Place: Localizing Sanctity in Asian Religions. UBC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7748-1039-5.
- Majumdar, Asoke Kumar (1956). Chaulukyas of Gujarat. Bharatiya Vidya Bhavan.
- Siddiqi, Iqtidar Husain (2010). Indo-Persian Historiography Up to the Thirteenth Century. Primus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-908918-0-6.
- Harihar Vitthal Trivedi (1991). Inscriptions of the Paramāras (Part 2). Corpus Inscriptionum Indicarum Volume VII: Inscriptions of the Paramāras, Chandēllas, Kachchapaghātas, and two minor dynasties. Archaeological Survey of India.
- Thapar, Romila (2008). Somanatha. Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-306468-8.