சுபாட்டிபை

சுபாட்டிபை ( ஆங்கில மொழி: Spotify / ˈspɒtɪfaɪ / ; சுவீடிய மொழி: [ˈspɔ̂tːɪfaj] ) ஒரு ஊடக ஓடை மற்றும் ஊடக சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இது 23 ஏப்ரல் 2006 இல் டேனியல் ஏக் மற்றும் மார்ட்டின் லோரென்ட்ஸனால் நிறுவப்பட்டது.[3] இது உலகின் மிகப்பெரிய இசை ஓடை சேவை வழங்குநர்களில் ஒன்றாகும். ஜூன் 2021 நிலவரப்படி 165 மில்லியன் பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் உட்பட 365 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்கள் உள்ளனர்.[4]

சுபாட்டிபை
The Spotify logo
நிறுவன வகைபொது
வலைத்தள வகைஒலி ஊடக ஓடை வழங்குநர்
வணிகப்பெயர்
தலைமையகம்ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்[1][2]
நாடுஸ்வீடன்
தளங்கள்16 அலுவலகங்கள் [2]
தோற்றுவித்தவர்
துறை
  • இசையோடை வழங்குநர்
  • வலையொலி வழங்குநர்
வருவாய் US$9 பில்லியன் (2021)
பதிவு செய்தல்அவசியம்
பயனர்கள்
  • 'இலவச பயனர்கள் : 210 மில்லியன்
  • பணம் செலுத்தும் பயனர்கள் : 165 மில்லியன்
  • மொத்தம் : 365 மில்லியன்
(June 2021)
துவங்கியது7 அக்டோபர் 2008; 14 ஆண்டுகள் முன்னர் (2008-10-07)
உரலிspotify.com

சுபாட்டிபை 70 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் மற்றும் வலையொளிகளை வழங்குகிறது.[4] இதன் அடிப்படை அம்சங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன . அதே நேரத்தில் இணைய இணைப்பு இல்லாமல் கேட்பது மற்றும் விளம்பரம் இல்லாமல் கேட்பது போன்ற கூடுதல் அம்சங்கள் கட்டணச் சந்தாக்கள் மூலம் வழங்கப்படுகின்றன. பயனர்கள் கலைஞர், ஆல்பம் அல்லது வகையின் அடிப்படையில் இசையைத் தேடலாம், மேலும் ஓடைப் பட்டியல்களை உருவாக்கலாம், திருத்தலாம் மற்றும் பகிரலாம்.

டேனியல் ஏக் 2010 இல் Spotify ஊழியர்களிடம் உரையாற்றுகிறார்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாட்டிபை&oldid=3623955" இருந்து மீள்விக்கப்பட்டது