சுமைரா அப்துலாலி

சுமைரா அப்துலாலி (Sumaira Abdulali) என்பவர் மும்பையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் அவாஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கலுக்கு எதிராக பாதுகாக்கும் அமைப்பின் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். ஒலி மாசுபாடு மற்றும் மணல் வெடிப்பு போன்ற பிரச்சினைகளுக்காக சட்டரீதியாக அணுகுவதும், அதற்காக வாதாடுவதும் இவரது செயல்பாடுகள் ஆகும். மற்றும் பொதுப் பிரச்சாரங்கள், ஆவண ஆவணங்களுக்கு பங்களிப்பு, தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் பத்திரிக்கை கட்டுரைகள் போன்றவற்றில் ஈடுபடுகிறார்.[1][2][3][4]

சுமைரா அப்துலாலி
Sumaira Abdulali in 2012.jpg
பிறப்புமும்பை

சமூகசெயல்பாடுகள்தொகு

இவர் பல்வேறு சமூக செயல்களில் ஈடுபட்டுள்ளார்.அவை பின்வருமாறு,

ஒலி மாசுபாடுதொகு

 
கோயிலில் உள்ள ஒலியின் அளவைப்பதிவு செய்யும் சுமைரா அப்துலாலி

அதிகாரிகள் மற்றும் பத்திரிகைகளால் இந்திய ஒலி மாசுபாட்டின் அமைச்சர் என அழைக்கப்படுகிறார்.[5] இவர் 2003 ஆம் ஆண்டில் மும்பை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுமத்துடன் இணைந்து அமைதி மண்டலங்களை (silence zone) வரையறை செய்வது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கினை தொடர்ந்தார்.[6].பின் ஏழு ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டில் மும்பை மாநகரட்சிக்கு 2,237 அமைதிமண்டலங்களில் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், கோவில்கள் போன்றவற்றை100 மீட்டர் அதிகப்படுத்துமாறு அறிவுறுத்தியது.[7]

மணல் கொள்ளைகளை தடுத்தல்தொகு

 
மணல் கொள்ளை போராட்டத்தின்போது

சுமைரா அப்துலாலி 2003 ஆம் ஆண்டிலிருந்து ஊடகங்களின் உதவியுடன் மணல் கொள்ளைகளுக்கு எதிராக மிகத்தீவிரமாக போராடி வருகிறார்.[8] இவருடைய அவாஸ் தொண்டு நிறுவனம் தான் நாட்டிலேயே மணல் கொள்ளைக்கு எதிராக முதல் பொதுநல வழக்கை 2006 -ல் தாக்கல் செய்தனர். பல விசாரணைகளுக்கு பிறகு அளவிற்கு அதிகமாக மணல் எடுப்பது என்பது சட்டவிரோதம் என அரசு தீர்ப்பளித்தது.[9][10]

திறந்த குழி சுரங்கப்பணிதொகு

2011 ஆம் ஆண்டில் திறந்த குழி சுரங்கப்பணி ஏலம் விடுதல் தொடர்பாக ஒரு பொதுநல வழக்கினை தாக்கல் செய்தார்.அதில் இந்த வளங்கள் அழிக்கப்படுவதினால் சிறுத்தை, புலி போன்ற விலங்கினங்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படுவதாக வாதாடினர்[11]. பின்பு அந்த பகுதிகளை தோன்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என மற்றொரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.[12][13][14] .2013 ஆம் ஆண்டு அதனை தோண்டுவதற்கு மகாராட்டிரம் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[15][16][17]

ஆவண படங்கள்தொகு

இவர் பல ஆவண படங்களிலும் பங்காற்றியுள்ளார்.

 1. 2017 -ல் மணல் வழித்தடம் [18]
 2. 2013-ல் மணல் போர் [19]
 3. 2004-ல் கடவுள் செவிடா? (ஒலி மாசுபாடு பற்றியது) [20]

சான்றுகள்தொகு

 1. Lakshmi, Rama (3 October 2013). "Sumaira Abdulali fights to lower noise levels in Mumbai, India’s capital of noise". Washington post. https://www.washingtonpost.com/world/sumaira-abdulali-fights-to-lower-noise-levels-in-mumbai-indias-capital-of-noise/2013/10/02/bf9e2c8c-26b5-11e3-9372-92606241ae9c_story.html. பார்த்த நாள்: 18 July 2015. 
 2. http://www.frontline.in/the-nation/dredging-up-trouble/article7438098.ece
 3. and is a Governing Council
 4. http://timesofindia.indiatimes.com/city/mumbai/And-now-a-mitra-for-whistle-blowers/articleshow/785159.cms
 5. http://www.citylab.com/navigator/2016/09/the-fight-to-shush-indias-booming-festival-season/499013/
 6. http://www.livemint.com/Leisure/C8vEzTDvefJLOSXFxKc9KK/Freedom-from-noise--Sumaira-Abdulali.html
 7. Mansi, Choksi; Sukhada, Tatke (8 January 2009). "2009 ushers in sound future for Mumbai". TNN. Times of India. http://timesofindia.indiatimes.com/city/mumbai/2009-ushers-in-sound-future-for-Mumbai/articleshow/3953821.cms. பார்த்த நாள்: 30 July 2015. 
 8. BEISER, VINCE (26 March 2015). "The Deadly Global War for Sand". WIRED MAGAZINE. https://www.wired.com/2015/03/illegal-sand-mining/. பார்த்த நாள்: 7 August 2015. 
 9. "Court Commissioner". பார்த்த நாள் 3 August 2015.
 10. Pillay, Amritha (18 March 2010). "Bombay High Court slams police in Abdulali attack case". Sucheta Dalal.. http://www.suchetadalal.com/?id=cf00fa41-5153-e2c0-4ba232f95eee&base=sections&f. பார்த்த நாள்: 3 August 2015. 
 11. Angre, Ketki (22 December 2010). "Sindhudurg: Mining at the cost of tigers?". NDTV. http://www.ndtv.com/india-news/sindhudurg-mining-at-the-cost-of-tigers-442631. பார்த்த நாள்: 4 August 2015. 
 12. "Declare Sawantwadi-Dodamarg 'eco-sensitive', government urged". IANS. sify news. 19 January 2011. http://www.sify.com/news/declare-sawantwadi-dodamarg-eco-sensitive-government-urged-news-national-lbtxkeijehd.html. பார்த்த நாள்: 4 August 2015. 
 13. Lewis, Clara (1 November 2013). "Panel to seek feedback on green tag for wildlife corridor". TNN. Times of India. http://timesofindia.indiatimes.com/home/environment/developmental-issues/Panel-to-seek-feedback-on-green-tag-for-wildlife-corridor/articleshow/25023246.cms. பார்த்த நாள்: 27 July 2015. 
 14. "Make Gadgil report public: Sumaira Abdulali". TNN. Times of India. 18 January 2012. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Make-Gadgil-report-public-Sumaira-Abdulali/articleshow/11530433.cms. பார்த்த நாள்: 1 August 2015. 
 15. "Mining corridor in state gets eco-sensitive tag". Awaaz Foundation. பார்த்த நாள் 18 August 2015.
 16. "Office memorandum 17 October 2013". THE MINISTRY OF ENVIRONMENT & FORESTS, Government of India. பார்த்த நாள் 6 August 2015.
 17. "Sumaira Abdulali writes to PM, CM". Sakal Media Group. 31 July 2014. http://www.sakaaltimes.com/NewsDetails.aspx?NewsId=5137389379795777187&SectionId=5351696313519115080&SectionName=State&NewsDate=20140731&NewsTitle=Sumaira%20Abdulali%20writes%20to%20PM,%20CM. பார்த்த நாள்: 23 July 2015. 
 18. http://www.hindustantimes.com/mumbai-news/illegal-sand-miners-in-india-make-1-611-cr-profit-every-year-australian-film/story-o0wzzmQhL3ON42JlkeBM9H.html
 19. "Sand Wars - Kanopy". Kanopy. பார்த்த நாள் 23 July 2015.
 20. Zara Suniye to(Part 2)

நேர்காணல்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமைரா_அப்துலாலி&oldid=2734788" இருந்து மீள்விக்கப்பட்டது