சுரேகா யாதவ்
சுரேகா யாதவ் (Surekha Yadav) சுரேகா சங்கர் யாதவ் (பிறப்பு 2 செப்டம்பர் 1965) இந்தியாவில் உள்ள இந்திய இரயில்வேயின் ஒரு பெண் லோகோபைலட் (இரயில் ஓட்டுநர்) ஆவார்.[1][2] 1988-ல் இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனரானார். ஏப்ரல் 2000-ல் அப்போதைய இரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜியால் நான்கு பெருநகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட போது மத்திய ரயில்வேக்கான முதல் "பெண்கள் சிறப்பு" உள்ளூர் ரயிலை இவர் ஓட்டினார்.[3] [4] 8 மார்ச் 2011 அன்று, அனைத்துலக பெண்கள் நாள் அன்று, புனேவிலிருந்து சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் வரை " தக்காண ராணி" என்ற வண்டியை ஓட்டிச் சென்ற ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார். [3] [5][6] மத்திய ரயில்வே மண்டலத்தின் தலைமையகமான மும்பையின் அப்போதைய நகரத்தந்தை சிரத்தா ஜாதவ் இவரை வரவேற்றார்.[6] மும்பை-புனே ரயில்வே பிரவாசி சங்கம் இந்த ரயிலை இயக்குவதற்கு இவருக்கு வலுவாக ஆதரவளித்தது.[7] பத்து வருடங்கள் கழித்து மும்பையில் இருந்து இலக்னோவிற்கு அனைத்து பெண் குழுவினரையும் ஓட்டிச் சென்று சாதனையை இவர் மீண்டும் செய்தார்.
சுரேகா யாதவ் | |
---|---|
பிறப்பு | சுரேகா ஆர். போஸ்லே 2 செப்டம்பர் 1965 சாத்தாரா, மகாராட்டிரம், இந்தியா |
அறியப்படுவது | இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர் |
பெற்றோர் | சோனாபாய் & இராமச்சந்திர போஸ்லே |
வாழ்க்கைத் துணை | சங்கர் யாதவ் |
பிள்ளைகள் | 2 |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசுரேகா மகாராட்டிராவில் உள்ள சாத்தாராவில் 2 செப்டம்பர் 1965 அன்று சோனாபாய் மற்றும் விவசாயியான இராம்சந்திர போசலேவுக்கு ஐந்து குழந்தைகளில் மூத்த மகளாகப் பிறந்தார்.[8] சாத்தாராவில் உள்ள புனித பால் கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பப் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, தொழில் பயிற்சியில் சேர்ந்தார் பின்னர் மேற்கு மகாராட்டிராவின் சத்தாரா மாவட்டத்தில் உள்ள கராத்திலுள்ள அரசு பாலிடெக்னிக்கில் மின்னியல் பொறியியல் பட்டம் முடித்தார் [9] [10] முதுகலை பட்டம் பெற கல்லூரி படிப்பைத் தொடர விரும்பினார். ஆனால் இந்திய இரயில்வேயில் பெற்ற ஒரு வேலை வாய்ப்பு இவரது மேற்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. [8]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் 1990 இல் மகாராட்டிரா அரசில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஜிங்க்யா மற்றும் அஜிதேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் மும்பை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கின்றனர். [11]
சான்றுகள்
தொகு- ↑ & Rights 2001, ப. 185.
- ↑ Hanshaw 2003, ப. 96.
- ↑ 3.0 3.1 "Bold, Bindaas And Successful". Cityplus. 10 March 2011.
- ↑ "Indian Female Engine Loco Drivers". scientificindians.com. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
- ↑ "Realigning the tracks". The Hindu. 8 January 2013.
- ↑ 6.0 6.1 "Mumbai Western Railway believes in woman-power". DNAIndia. 9 March 2011.
- ↑ Costa, Roana Maria (8 March 2011). "Asia's first motor woman to pilot Deccan Queen". The Times of India.
- ↑ 8.0 8.1 Nair, Sulekha (31 May 2000). "The woman in the engine". The Indian Express.
- ↑ Hanshaw 2003.
- ↑ "Railwaywomen Around The World - A selection of press cuttings - India: Surekha Yadav (source: The Financial Express)". Hastings Press. 2001.
- ↑ "Railwaywomen Around The World - A selection of press cuttings - India: Surekha Yadav (source: The Financial Express)". Hastings Press. 2001."Railwaywomen Around The World - A selection of press cuttings - India: Surekha Yadav (source: The Financial Express)". Hastings Press. 2001.
- http://epaper.eprahaar.in/detail.php?cords=22,136,1472,2268&id=story2&pageno=http://epaper.eprahaar.in/08032015/Mumbai/Suppl/Page8.jpg பரணிடப்பட்டது 2016-03-12 at the வந்தவழி இயந்திரம்
- http://epaper.loksatta.com/451544/indian-express/04-03-2015?show=touch#page/28/3 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
உசாத்துணை
தொகு- Book (2006). Limca Book of Records. Bisleri Beverages Limited.
- Hanshaw, Brigitta Natasha (1 September 2003). The World Through Our Eyes: A Collaboration of Essays by International Students. iUniverse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-595-28831-1.
- Rights (2001). Documentation on Women, Children & Human Rights. Sandarbhini, Library and Documentation Centre, All India Association for Christian Higher Education.