சுலு இருவாய்ச்சி
சுலு இருவாச்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | புசோரிடிபார்மிசு
|
குடும்பம்: | பூசோரிடிடே
|
பேரினம்: | |
இனம்: | ஆ. மொன்டானி
|
இருசொற் பெயரீடு | |
ஆந்தரகோசெரசு மொன்டானி அவுசாடாலெட், 1880 | |
வேறு பெயர்கள் | |
|
சுலு இருவாய்ச்சி (Sulu hornbill)(ஆந்தரகோசெரசு மொன்டானி), அல்லது மொன்டானோ இருவாய்ச்சி என்பது புசெரோடிடே குடும்பத்தில் உள்ள ஒரு இருவாய்ச்சி சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் உள்ள சுலு தீவுக்கூட்டத்தில் காணப்படும்அகணிய உயிரி. தற்பொழுது காணப்படும் சுலு இருவாட்சி பில்பீன்சின் தாவி-தாவியில் மட்டுமே வாழ்கின்றன. ஜோலோவில் வேட்டை காரணமாக இருக்கக்கூடிய பறவைகள் அழிந்துபோகலாம் என நம்பப்படுகிறது.[1][1][3][3][4][4] இதன் இயற்கை வாழ்விடம் வெப்பமண்டல ஈரமான காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பு மற்றும் உணவுக்கான வேட்டையாடப்படுவதால் அச்சுறுத்தப்படுகிறது.[1] இதன் உணவில் பழங்கள், பூச்சிகள் மற்றும் சிறிய பல்லிகள் அடங்கும்.[3]
2019ஆம் ஆண்டில், 27 முதிர்ந்த இருவாய்ச்சிகள் மட்டுமே காடுகளில் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்டது. இது உலகின் மிகவும் ஆபத்தான விலங்குகளில் ஒன்றாகும்.[5]
விளக்கம்
தொகுஈபேர்டு சுலு இருவாய்ச்சியினை "சுலு தீவுகளில் தாழ்நில மற்றும் மலைக் காடுகளின் பெரிய பறவை, இவை தாவி-தாவியில் மட்டுமே உள்ளது. குறிப்பாக அத்தியினை உணவாக உண்ணுகிறது. உலகின் மிக அரிதான பறவைகளில் இதுவும் ஒன்று. வெள்ளை வால் தவிர முற்றிலும் கருப்பு நிறமானது. நீளமான, தடித்த கறுப்பு அலகு, கருப்பு தலைக்கவசம் மற்றும் கண்ணைச் சுற்றி கருப்பு தோல் கொண்டுள்ளது. ஆண்களின் கண்கள் வெளிறியன. பெண்களின் கண்கள் பழுப்பு நிறமுடைய கண்கள் மற்றும் சிறிய தலைக்கவசம் உள்ளது. இதன் வரம்பில் உள்ள ஒரே இருவாச்சி ஆகும். இதனுடைய குரல் நாசி கூக்குரல் ஆகும்."[6] விவரிக்கின்றது.
வாழ்விடமும் பாதுகாப்பு நிலையும்
தொகுசுலு இருவாய்ச்சி முதன்மையாக தாழ் நில மழைக் காடுகளான திப்டெரோகார்ப் காடுகளில் வசிக்கிறது. பொதுவாக மலைச் சரிவுகளில், இது வாழும் காணப்படும் காட்டிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள தனியாகக் காணப்படும் பழம்தரும் மரங்களைத் தேடி வருகின்றது. கூடு கட்ட பெரிய மரங்கள் தேவை. இந்தச் சிற்றினத்தின் உணவில் முக்கியமாகப் பழங்கள் உள்ளன, சிறிய பல்லிகள் மற்றும் சில பூச்சிகள் உள்ளன.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், சுலு இருவாச்சியினை மிக அருகிய இனமாக மதிப்பிட்டுள்ளது. 2019-ல் 27 முதிர்ச்சியடைந்த இருவாச்சிப் பறவைகள் மட்டுமே இயற்வாழிடத்தில் வாழ்வதாக அறியப்பட்டது.[5] வாழிட இழப்பு, விளை நிலக் கழிவுகளை எறிப்பது இதன் அழிவிற்கான காரணங்களாக உள்ளன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 BirdLife International (2020). "Anthracoceros montani". IUCN Red List of Threatened Species 2020: e.T22682447A178062684. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22682447A178062684.en. https://www.iucnredlist.org/species/22682447/178062684. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ 3.0 3.1 3.2 Anthracoceros montani factsheet பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் at BirdBase பரணிடப்பட்டது 2014-12-26 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 4.0 4.1 சுலு இருவாய்ச்சி videos, photos, and sounds at the Internet Bird Collection
- ↑ 5.0 5.1 Sarmiento, Bong (3 October 2019). "Race to conserve few remaining Sulu hornbills on". MindaNews. https://www.mindanews.com/top-stories/2019/10/race-to-conserve-few-remaining-sulu-hornbills-on/.
- ↑ "Sulu Hornbill". Ebird.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Allen, Desmond (2020). Birds of the Philippines. Barcelona: Lynx and Birdlife International Field Guides. pp. 200–201.