சுவாதி பீஸ்
சுவாதி பீஸ் (Swati Bhise) ( பிறப்பு: 1959 அக்டோபர் 2) ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞரும், நடன இயக்குநரும், கல்வியாளரும், தயாரிப்பாளாரும்,[1] மற்றும் கலைகளை மேம்படுத்துபவராவும் அறியப்படுகிறார்.[2]
சுவாதி பீஸ் | |
---|---|
பிறப்பு | 21 அக்டோபர் 1959 (அகவை 65) மும்பை |
பணி | Television actor, திரைப்பட நடிகர், இயக்குநர், film screenwriter, திரைப்படத் தயாரிப்பாளர் |
நடன வாழ்க்கை
தொகுசுவாதி பத்ம விபூசண் விருது பெற்ற சோனல் மான்சிங்கின் முதல் சீடர் ஆவார்.[3] புதுதில்லியில் உள்ள இந்திய செம்மொழி நடன மையத்தில் அறிமுகமானதிலிருந்து, இவர் தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான இந்திய மையமான "லிங்கன் மையம்",[4] ஆசியா சங்கம், சிம்பொனி ஸ்பேஸ், பெருநகரக் கலை அருங்காட்சியகம், இளைஞர்களிடையே இந்திய செம்மொழி இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சமூகம் மற்றும் சோவியத் கலாச்சார அவை போன்றவை உள்ளிட்ட இடங்களில் உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை விரிவாக நிகழ்த்தியுள்ளார்.[5] ஐக்கிய நாடுகள் சபையின் 40 வது ஆண்டுவிழாவில் இவரது குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகள் இருந்தன.[6] அவற்றில், எல்சா பெரெட்டி மற்றும் பாலோமா பிக்காசோவின் புதிய கண்ணி வடிவமைப்புகளை திப்பனி அண்ட் கோ, மற்றும் தெற்காசிய சிற்பக் கலை பிரிவின் திறப்பிற்காக பெருநகரக் கலை அருங்காட்சியகம் ஆகியவற்றின் திறப்பு விழாக்கள் போன்றவை அடங்கும். சிட்னி கோல்ட்ஃபார்ப் மற்றும் ஜூலி டெய்மோர் ஆகியோரால் மேடைக்கு ஏற்றவாரு தழுவி எழுதப்பட்ட தாமசு மாணின் தி டிரான்ஸ்போஸ் ஹெட் என்ற நிகழ்ச்சிக்காக இந்திய நடனக் கலையில் [7] சுவாதி பணியாற்றினார்.[8] கொலம்பியா ஒளிபரப்பு அமைப்பின் 'சேக்ரட் ஆர்ட்ஸ்' என்ற ஆவணப்படத்தில் நடித்தவர்களில் ஒருவராக சுவாதி இடம் பெற்றார்.[9]
கல்வியாளர்
தொகுசுவாதி, 1991-2006 வரை நியூயார்க் நகரத்தின் பிரெர்லி பள்ளியில் ஒரு கலைஞராக பணியாற்றினார்.[10] மேலும், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான கல்வியில் இந்திய கலைகளுக்கான இலாப நோக்கற்ற சமசுகிருத மையத்தை நிறுவினார்.[11] சிம்பொனி ஸ்பேஸில் கலை பாடத்திட்டத்தை தொடர்ந்து கற்பிக்கிறார்.[12] 1996 முதல் லிங்கன் மையம் என்ற நிறுவனத்தில் ரெபர்ட்டரி கலைஞராக இருந்து வருகிறார்.[5] அமெரிக்காவில் உள்ள நூற்றுக்கணக்கான பொது மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இவர் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். அவற்றுள் கொலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம், செயின்ட் மார்க்ஸ் ஸ்கூல் ஆஃப் டெக்சாஸ், தி தால்டன் பள்ளி, தி பிரெர்லி பள்ளி, தி சாபின் பள்ளி, புரூக்ளின் கல்லூரி மற்றும் வெஸ்லியன் பல்கலைக்கழகம் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.
திரை அரங்கு மற்றும் திரைப்பட தயாரிப்பு
தொகுசுவாதி, 2012 ஆம் ஆண்டில், 'தி சதீர் நாடக விழா'வை நிறுவினார், இது இந்தியாவின் கோவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் மூன்று நாள் விழாவாகும்.[13] விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நாடக நட்சத்திரங்கள் லிலெட் துபே, கிரிஷ் கர்னாட், இரஜத் கபூர், முகமது அலி பேக், மற்றும் விக்ரம் கபாடியா ஆகியோர் பல ஆண்டுகளாக இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர். மேலும் இவர் இன்றும் விழாவின் கலை இயக்குநராக உள்ளார்.[14]
சுவாதி முதன்முறையாக, சீன நாடகத்தின் மிகப் பழமையான பாணிகளில் ஒன்றான யுனெஸ்கோ பாரம்பரிய கலை வடிவமான குன்க் ஓபராவை மும்பையின் தேசிய கலை மையம், மும்பை மற்றும் புதுதில்லியில் உள்ள சிரி கோட்டை மண்டபத்தில் நிகழ்ச்சிகளுடன் இந்தியாவுக்குக் கொண்டுவந்தார்.[15] தேவ் படேல் மற்றும் ஜெர்மி அயர்ன்ஸ் நடித்த எட்வர்ட் ஆர் பிரஸ்மேன் என்பவரின் தி மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி என்ற திரைப்படத்தில் நிர்வாக தயாரிப்பாளராகவும், இந்திய கலாச்சார ஆலோசகராகவும் [16] பணியாற்றிய பின்னர், 2014 ஆம் ஆண்டில், சுவாதி கெய்ன் பெப்பர் தயாரிப்பு நிறுவனத்தை [1] நிறுவினார். இந்த படம் 2015 செப்டம்பர் அன்று டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது .[17]
சுவாதி சமீபத்தில், 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் காணப்பட்ட நிலை குறித்து, பிரித்தானிய / இந்திய அரசு பற்றிய ஒரு நாடகத்தை இயக்கி முடித்தார். இது, சுயமாக எழுதப்பட்ட இவரின் படைப்பாகும். தி வாரியர் குயின் ஜான்சி என்கிற இத்திரைப்படம் 2019 இல் வெளியிடப்பட்டது.
சபனா ஆஸ்மி, சுஷ்மா சேத், குல்பூசன் கர்பண்டா, மற்றும் உத்கர்ஷ் மஜும்தார் ஆகியோருடன் 9 வது ஆண்டு மகிந்திரா எக்ஸலன்ஸின் அரங்க விருதுகளில் (மெட்டா) ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பல நடுவர் மன்றம் உட்பட பல குழுக்களில் இவர் அமர்ந்திருக்கிறார்.[18]
அறப்பணி
தொகுதென்கிழக்கு ஆசியாவை மையமாகக் கொண்டு, பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக வெளிப்படையாக வாதிடுபவராக சுவாதி இருக்கிறார்.[19] ஆசியா அறக்கட்டளையின் தாமரை வட்டம் என்பதன் [20] ஆலோசகராக உள்ளார். இது "ஒரு மாறும் மற்றும் வளர்ந்து வரும் ஒரு அமைப்பாகும்". இது, ஆசியா முழுவதும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ள இலாப நோக்கற்ற சர்வதேச மேம்பாட்டு அமைப்பு ஆகும்.[21]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "'The Man Who Knew Infinity' to open Zurich". Screendaily.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ "Mother's recipes for you". Indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ "Archived copy". Archived from the original on 2016-05-18. பார்க்கப்பட்ட நாள் 2016-09-20.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Swati G. Bhise in East Indian Classical Dance". Backstage.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ 5.0 5.1 "Interview - Swati Bhise, an ambassador of Bharatanatyam in NYC by Lalitha Venkat". Narthaki.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ Makhijani, Vishnu. "Indian American danseuse brings Chinese opera to India - Diaspora". Thesouthasiantimes.info. Archived from the original on 31 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Theater, Lincoln Center. "The Transposed Heads - Who's Who - Lincoln Center Theater". Lincoln Center Theater. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ Gussow, Mel. "STAGE: 'TRANSPOSED HEADS'". nytimes.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ "TV Special Showcases Arts Within Religion". cbsnews.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ Heyman, Marshall (14 December 2015). "Dancing to a Traditional Indian Beat". Wsj.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ "Out & About". The New York Sun. Archived from the original on 2018-03-31. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ "Symphony Space - Asian Studies". Symphonyspace.org. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ "Return of the Sadir Theatre Festival - The Navhind Times". Navhindtimes.in. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ "Sadir Theatre Fest to kick off on March 18". Indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ Sandhu, Veenu (29 November 2014). "The Peony Pavilion: With (ancient) love from China". பிசினஸ் ஸ்டாண்டர்ட். பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ "Interview with The Man Who Knew Infinity's executive producer Swati Bhise". Msn.com. பார்க்கப்பட்ட நாள் 1 September 2018.
- ↑ "TIFF: 'Man Who Knew Infinity' Director Says Film Was "10 Years in the Making"". Hollywoodreporter.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ "9th Annual Mahindra Excellence in Theatre Awards Announced - Manoj Omen, MD Pallavi & More!". Broadwayworld.com. பார்க்கப்பட்ட நாள் 1 September 2018.
- ↑ "Archived copy". Archived from the original on 2016-08-20. பார்க்கப்பட்ட நாள் 2016-09-20.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Swati Bhisé - The Asia Foundation". Asiafoundation.org. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
- ↑ "About the Asia Foundation - The Asia Foundation". Asiafoundation.org. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.