சுஷ்மா வர்மா
சுஷ்மா வர்மா (Sushma Verma) இந்திய பெண்கள் மட்டைப்பந்து விளையாட்டு வீரர்.[1] இவர் இந்திய பெண்கள் தேசிய மட்டைப்பந்து குழுவில் இலக்குமுனைக்காப்பாளராகவும், வலது கை மட்டைப்பந்து துடுப்பாட்டக்காரராகவும் தனது பணியை ஆரம்பித்தார். இதுவரை 30 ஒரு நாள் போட்டிகளிலும், 19 டி.20 போட்டிகளிலும், ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2017 உலகக் கோப்பையில் சுஷ்மா வர்மாவின் புகைப்படம் | |||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சுஷ்மா வர்மா | ||||||||||||||||||||||||||||
பிறப்பு | 5 நவம்பர் 1992 சிம்லா, இமாச்சலப் பிரதேசம் | ||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை மட்டைப்பந்து துடுப்பாட்டக்காரர் | ||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | - | ||||||||||||||||||||||||||||
பங்கு | இலக்குமுனைக்காப்பாளர் | ||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் | 16 நவம்பர் 2014 எ. தென்னாப்பிரிக்கா | ||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் | 24 நவம்பர் 2014 எ. தென்னாப்பிரிக்கா | ||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 12 ஏப்ரல் 2018 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 5 | ||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் | 5 ஏப்ரல் 2013 எ. வங்காளதேசம் | ||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 4 திசம்பர் 2016 எ. பாக்கித்தான் | ||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||
2011– | இமாச்சல பிரதேசம் (squad no. 5) | ||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 24 சூலை 2017 |
2017இல் நடந்த பெண்கள் மட்டைப்பந்து உலகக்கோப்பை ஆட்டத்திற்குப் பிறகு, இமாச்சலபிரதேச முதல் அமைச்சர் வீரபத்ர சிங் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பணியை இவருக்கு வழங்கினார்.[2][3]
இளமைப் பருவம்
தொகுசுஷ்மா வர்மா இமாச்சலப்பிரதேசம், சிம்லாவில் நவம்பர் 3, 1992 இல் பிறந்தார். அவரது தந்தை "போபால் சிங் வர்மா" வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் படிக்க வைக்க விரும்பினார். ஆனால் சுஷ்மா சிம்லாவில் உள்ள "போர்ட்மோர் அரசு மாதிரி" பள்ளியில் சேர்ந்து படித்தார். கூடைப்பந்து, கைப்பந்து, பாட்மின்டன் போன்ற விளையாட்டுகளில் மாநில அளவிலான விளையாட்டு வீரராக இருந்தார்.
உள்ளூர்ப் போட்டிகள்
தொகுஇவர் இமாச்சல பிரதேச மட்டைப்பந்து சங்கத்திற்காக விளையாடியுள்ளார். 2011 இல் அனைத்து இந்திய பெண்கள் போட்டிகள் நடைபெற்றது. அதில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் இவரது தலைமையிலான இமாச்சல அணி தோல்வியுற்றது. இவர் இமாச்சல பிரதேச மாநிலத்திலிருந்து வந்த முதல் பெண் மட்டைப்பந்து விளையாட்டு வீரராக உள்ளார்.[4][5][6][7] இந்திய ரயில்வே அணிக்காக விளையாடியுள்ளார். இவர் மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீட் கௌர்,மற்றும் பூனம் ராட் ஆகியோருடன் இணைந்து விளையாடியுள்ளார்.[8]
சர்வதேச போட்டிகள்
தொகுவர்மா 2017 பெண்கள் உலகக்கோப்பை இறுதிச்சுற்று போட்டியில் பங்கேற்றார். இந்திய அணி, இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பையைத் தவறவிட்டது.[9][10][11]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sushma Verma. ESPN Cricinfo
- ↑ "HP CM Virbhadra Singh honours cricketer Sushma Verma – Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/sports/cricket/news/hp-cm-virbhadra-singh-honours-cricketer-sushma-verma/articleshow/59974700.cms.
- ↑ Rajta, Subhash (22 July 2017). "Contrasting tales of two talented Himachali girls". tribuneindia.com. http://www.tribuneindia.com/news/sport/contrasting-tales-of-two-talented-himachali-girls/456201.html.
- ↑ Himachal cricket, a new dawn and hope
- ↑ She shunned volleyball shorts for white flannels, is first HP woman in Indian squad. Indianexpress.com (16 April 2014). Retrieved on 2018-12-14.
- ↑ Malhotra, Purnima (3 June 2017) 'Accidental wicketkeeper' Sushma Verma braces for Dharamsala homecoming. cricbuzz.com
- ↑ This one's for the girls. Espncricinfo.com (21 June 2015). Retrieved on 2018-12-14.
- ↑ "Was waiting for this opportunity – Sushma Verma". Cricinfo. 3 July 2017. http://www.espncricinfo.com/icc-womens-world-cup-2017/content/story/1108233.html.
- ↑ Live commentary: Final, ICC Women's World Cup at London, Jul 23, ESPNcricinfo, 23 July 2017.
- ↑ World Cup Final, BBC Sport, 23 July 2017.
- ↑ England v India: Women's World Cup final – live!, The Guardian, 23 July 2017.