செட்டிகுளங்கரா தேவி கோயில்
செட்டிகுளங்கர ஸ்ரீ பகவதி கோயில் (Chettikulangara Devi Temple) என்பது கேரளத்தின் புகழ்பெற்ற இந்து கோவில்களில் ஒன்றாகும். இதன் பிரதான தெய்வம் பத்ரகாளி ஆவார். இந்தக் கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் மவேலிகாரா தாலுகாவில் செட்டிகுளங்கராவில் அமைந்துள்ளது. இந்த கோயில் மாவேலிக்கராவிற்கு மேற்கே 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவிலும், காயம்குளத்திற்கு வடக்கே 7 கி.மீ தொலைவில் மாநில நெடுஞ்சாலை எண் 6 (கயம்குளம் - திருவல்லா நெடுஞ்சாலை) இல் உள்ளது.
செட்டிகுளங்கர ஸ்ரீ பகவதி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | ஆலப்புழை |
அமைவு: | செட்டிக்குளக்கரா, மாவேலிக்கரா |
ஆள்கூறுகள்: | 9°13′37″N 76°31′01″E / 9.227°N 76.517°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரள பாரம்பரிய பாணி |
மீள்பார்வை
தொகுஇக்கோயிலின் தாந்த்ரீக உரிமையானது அம்புலபுழாவில் உள்ள தாராவாடு மற்றும் பிளாக்குடி இல்லத்துக்கு சேர்ந்தது. கேரளாவின் பண்டைய தாந்திரிக குடும்பங்களில் பிளாக்குடியும் ஒன்றாகும். தற்போதைய கோயில் தாந்த்ரிக் பொறுப்பாளராக பிளக்குடி உன்னிகிருஷ்ணன் நம்பூரி உள்ளார்.
அண்மையில் யுனெஸ்கோ இக்கோயிலையும், இதன் சடங்கு வழக்கங்கள் (குத்தியோட்டம், கும்பபாரணி) பற்றிய விவரங்களை சேகரித்தது. இந்த கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க தகுதியுள்ளதா என்பதை ஆராயும்.
திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வருவாய் அடிப்படையில் இது இரண்டாவது பெரிய கோயிலாகும். இது சபரிமலைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. [1] இந்த கோயிலுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் இக்கோயிலானது "சாந்தத்தம்" என்ற ஒற்றை வகை பிரசாதத்திலிருந்து மட்டும் சுமார் 1.7 கோடி ரூபாய் ஈட்டியது. பகவதிக்கு வழங்கப்படும் நெல்லில் ஒரு முக்கிய பகுதியானது சபரிமலையில் அப்பம் மற்றும் அரவண பிரசாதம் தயாரிக்க பயன்படுகிறது. இந்தக் கோவிலில் இருந்து கிடைக்கும் வருமானமானது திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள பல்வேறு கோவில்களில் தினசரி சடங்குகள் மற்றும் பூஜைகளை நடத்துவதற்கு உதவியாக உள்ளது.
செட்டிகுளங்கர தேவி கோவிலில் முக்கிய பிரசாதங்களான குத்திராமூட்டில் கஞ்சி மற்றும் தெரம்மூட்டில் கஞ்சி ஆகியவை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. கோயிலுடன் தொடர்புடைய மற்ற பத்து பெயர்கள் வர்த்தக முத்திரை மற்றும் காப்புரிமையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் செட்டிகுளங்கர அம்மா, செட்டிகுளங்கரா கும்ப பாரணி, செட்டிகுளங்கர கெட்டுகழசா, குத்தியோட்டம், மற்றும் சூரல்முரியல் ஆகியவை அடங்கும்.[2]
ஆரம்பகால வரலாறு
தொகுசெட்டிகுளங்கர கோயில் தோற்றம் குறித்து பிரபலமாக பல நம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமான ஒன்று பின்வருமாறு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சில உள்ளூர் தலைவர்கள் செட்டிகுளங்கராவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோய்பள்ளிகழமா பகவதி கோவிலில் ஆண்டு விழாவினைக் காணச் சென்றனர். கோயிலுக்கு வந்த இவர்களை கோய்பல்லிகழாமா கோயில் அதிகாரிகளும், அங்குள்ள கிராமத் தலைவர்களும் அவமானப்படுத்தி, கேலி செய்தனர். இந்த அவமானத்தால் ஏற்பட்ட தூண்டுதலில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், செட்டிகுளங்கராவில் பகவதிக்கு ஒரு கோயில் கட்ட முடிவு செய்தனர். இதற்காக செட்டிகுளங்கர மக்கள் ஒன்றுபட்டு, அப்பகுதியின் நான்கு முதல் ஐந்து முன்னணி குடும்பங்களின் கரணவர்கள் (குடும்பத் தலைவர்கள்) தலைமையில் இந்த பணியின் பொருட்டு கொடுங்கல்லூர் பகவதியின் ஆசீயைப் பெற முடிவு செய்தனர். இதற்காக புறப்பட்ட இவர்கள் வழியில் பல்வேறு கோயில்களையும் தரிசித்துவிட்டு கொடுங்கல்லூரை அடைந்து, தேவியை மகிழ்விக்க 12 நாட்கள் பஜனம் செய்தனர். தான் விரைவில் செட்டிகுளங்கராவுக்கு வருவேன் என்று தேவி அவர்களின் கனவில் வந்தது கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்த நாள், இவர்கள் கொடுங்கல்லூர் கோயிலின் வேலிச்சப்பாடு கொடுத்த புனித வாளுடன் சந்திக்குளங்கராவுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பி கோயிலின் கட்டிடப் பணிகளைத் தொடங்கினர்.
சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் அருகிலுள்ள கரிப்புழா சிற்றாரின் கடத்துக்காரன் (உள்ளூர் படகோட்டி) மாலை நேரத்தில் தனது வேலையை முடித்துக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு முதிய பெண்மணி தன்னை மறு கரைக்கு அழைத்துச் செல்ல உதவுமாறு கேட்டுக்கொண்டார். துணையின்றி வந்துள்ள இந்த பெண்ணுக்கு உதவுவது தனது கடமை என்று அவர் உணர்ந்தார், எனவே அந்த பெண் செல்ல வேண்டிய இடமான செட்டிகுளங்கராவுக்கு அவருடன் செல்ல முடிவு செய்து புறப்பட்டார். செல்லும் வழியில், அவர்கள் ஒரு மரத்தின் அடியில் ஓய்வெடுத்தனர் (அந்த இடத்தில் இப்போது புத்துசெரியம்பலம் கோயில் உள்ளது), கடதுகரன் அருகிலுள்ள வண்ணான் வீட்டிலிருந்து அவர்களுக்கு உணவைக் கொண்டு வந்தார். சற்று நேரத்தில் அவர் தூங்கிவிட்டார், அதிகாலையில் அவர் எழுந்து பார்த்தபோது, அந்த பெண் மறைந்துவிட்டார். (இந்த படகோட்டி ஒரு கிறிஸ்தவர் என்றும், தேவிக்கு கரிப்புழ தோடு வழியாக செல்ல உதவியதற்காக, இவரது சந்ததியினருக்கு வெடி (கோவிலின் பட்டாசு வைக்கும் சடங்கு ) வைக்கும் வேலை ஒப்படைக்கப்பட்டது. இந்த மர்மமான நிகழ்வு குறித்து அவர் செட்டிகுலங்கரா மக்களிடம் கூறினார், தேவி செட்டிகுளங்கராவை அடைந்துவிட்டதாக மக்கள் உணர்ந்தனர்.
அடுத்த நாள், தற்போதைய கோயிலுக்கு அருகிலுள்ள இல்லம் (மத்திய கேரளாத்தில் பிராமணர்களில் ஒரு சமூகம் வசிக்கும் ஒரு பாரம்பரிய வீடு) என்ற வீட்டின் கூரையின் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன. வீட்டுப் பராமரிப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு வீட்டைச் சேர்ந்த அந்தர்ஜனம் என்னும் பெண்மணி தொழிலாளர்களுக்கு காஞ்சி (அரிசி கஞ்சி) முத்திராபுழுக்கு (வேகவைத்த கொள்ளு மற்றும் துருவிய தேங்காய் போன்றவை கொண்ட ஒரு உள்ளூர் சிறப்பு உணவு) மற்றும் ஆஸ்திராம் ( வெவ்வேறு உள்ளூர் காய்கறிகளின் கலவையால் செய்யப்பட்ட ஒரு துணை உணவு) ஆகியவற்றை தொழிலாளர்கள் உண்டனர். அவர்கள் உண்ணும்போது ஒரு வித்தியாசமான ஒரு வயதான பெண் உணவு உண்ணும்போது அவர்களுடன் சேர்ந்து கொண்டார். உண்டு முடிந்தவுடன், வயதான பெண்மணி வீட்டின் மேற்குப் பகுதிக்குச் சென்று, மெல்லிய காற்றில் பிரகாசமான ஒளியுடன் மறைந்தார். இதைக் கண்ட, அந்தர்ஜனம் மயக்கமடைந்தார். பின்னர் அவர் பார்த்ததை அங்குள்ளவர்களிடம் கூறினார்.
அதே நாளில், தேவி தான் வந்திருப்பதை கிராமத் தலைவர்களுக்கு காட்டினார். அவர்கள் பிரபல சோதிடர்களை அணுகினர், பாகவதி செட்டிகுளங்கராவை அடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஒரு பதிப்பின் படி, இந்த கோயில் பொ.ஊ. 823 இல் மகர மாதத்தின் உத்திரிததி (உத்தரா பத்ரபாதா) நாளில் பத்மபாதாச்சார் (ஆதிசங்கராவின் முன்னணி சீடர்) என்பவரால் புனிதப்படுத்தப்பட்டது. இங்குள்ள தெய்வம் ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான தெய்வம் என்று ஒரு உறுதியான வாதம் உள்ளது, பின்னர் இது கிராமமத்தின் தெய்வமாகவும், பிராந்திய தெய்வமாகவும் உருவெடுத்தது. 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உன்னுனீலி சந்தேசத்தில் இக்கோயில் குறிப்பிடப்படாததால் இந்த கோயில் அருகிலுள்ள காண்டியூர் மகாதேவர் கோயில் அல்லது மாவேலிகர கிருஷ்ண சுவாமி கோயில் போன்ற கோயிகளைப் போன்று பழமையானது அல்ல என்ற வாதத்தை உள்ளூர் வரலாற்றாசிரியர்கள் எதிர்க்கின்றனர். மறைந்த கண்டியூர் மகாதேவ சாஸ்திரி கருத்துப்படி, வேணாட்டின் பண்டைய மன்னர் ரவி வர்மனின் அரசவையைச் சேர்ந்தவரான சாமுத்ரா பந்தன், இந்த கோயிலுக்கு வருகை தந்து பகவதி குறித்து கவிதைகளை எழுதினார். இதேபோல், வேணாட்டு மன்னர் ஆதித்ய குலசேகரனும் (பொ.ஊ. 1374 முதல் பொ.ஊ. 1389 வரை) சேட்ட்குளங்கர கோயிலுக்கு வந்ததாக செய்ததாக அவர்கள் வாதிடுகின்றனர். இருப்பினும், தற்போதைய ஸ்ரீகோவில் 450-480 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்றும், சுட்டம்பலம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையானது இல்லை என்றும் கூற வேண்டும். உள்ளூர் வரலாற்றாசிரியர்கள் கோவில் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுப்புறங்களை அவ்வப்போது பல்வேறு உள்ளூர் அரசர்கள் உருவாக்கினர் என்று கூறுகிறார்கள். தற்போதைய ஸ்ரீகோயில் பொ.ஊ. 1540 காலக்கட்டத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோயிலில் ஒரு சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதால், 1002 மலையாள ஆண்டில் சுட்டம்பலம் சற்று மாற்றப்பட்டது.
சேட்டிகுளங்கர அம்மன் (பிரதான தெய்வம்) கொடுங்கல்லூர் அம்மனின் தங்கை என்பதும் நம்பப்படுகிறது. இத்தெய்வமானது ஒனட்டுகார (மாவேலிகரா) இல் உள்ள அனைத்து மக்களின் நலனுக்காக இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில செட்டியார் குடும்பங்கள் செட்டிகுளங்கரா என்ற பெயருடன் தொடர்புடையவை என்றும் அது கூறுகிறது.
பரிவார தெய்வங்கள்
தொகுகோயிலுக்கு அருகில் பல உபதேவதைகள் உள்ளனர். மேலும் ஜோதிடர்களின் தேவ பிரஷ்ணத்தின் படி ஒரு சில பிரதிட்டைகளானது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன அல்லது சேர்க்கப்பட்டன.
கோவில் வளாகத்தில் உள்ள முக்கிய உபதேவதைகள்
திருவிழாக்கள்
தொகுகோவிலில் ஏராளமான திருவிழாக்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை பல இருந்தாலும் குறிப்பிடத்தக்கது கெட்டுக் கழிஞ்சா என்னும் திருவிழா ஆகும். இந்த திருவிழாவுக்கு ஏராளமான பக்தர் திரளுகின்றனர். இத்திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட குதிரை, காளை போன்ற வாகனங்களின் இரத ஊர்வலம் நடக்கும். இந்த ஊர்வலத்தில் மற்ற கலாச்சார நிகழ்ச்சிகளும் சேர்ந்த்து விழாவை வண்ணமயமாக ஆக்கும்.
குறிப்புகள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 13 November 2010. பார்க்கப்பட்ட நாள் 13 August 2010.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Now-GI-tag-for-Chettikulangara-temple-offerings/article17072211.ece