செண்டு வாத்து
செண்டு வாத்து | |
---|---|
எத்தியோப்பியாவின் சிவே ஏரியில் ஆண் | |
இந்தியாவில் பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Anatidae
|
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | Sarkidiornis Eyton, 1838
|
இனம்: | S. melanotos
|
இருசொற் பெயரீடு | |
Sarkidiornis melanotos (Pennant, 1769) | |
துணையினம் | |
S. m. melanotos (Pennant, 1769) | |
Global range | |
வேறு பெயர்கள் | |
Anser melanotos Pennant, 1769 |
செண்டு வாத்து (Comb Duck; Sarkidiornis melanotos) இப்பறவை வாத்து இனத்தைச் சேர்ந்த நீர்வாழ் பறவையாகும். வெப்ப மண்டலப் பகுதிகளான சகாரா ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், லாவோஸ், சீனாவின் வெப்பப்பகுதி, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் ஈர நிலத்தில் வாழுகிறது. மேலும் தென் அமெரிக்கா, கிழக்கு பராகுவே, தென்கிழக்கு பிரேசில், அர்சென்டினாவின்[3] ஒரு சில பகுதிகளில் காணப்படுகிறது. டிரினிடாட் பகுதிகளில் சில காலங்களுக்கு காணமுடிகிறது.
விளக்கம்
தொகுஇது மிகப்பெரிய வாத்து வகைகளில் ஒன்றாகும். நீளம் 56 முதல் 76 செமீ (22 முதல் 30 அங்குலம்), இறக்கைகள் விரித்த நிலையில் 116 முதல் 145 செமீ (46 முதல் 57 அங்குலம்) அகலம் இருக்கும். மேலும் எடை 1.03 முதல் 2.9 கிலோ (2.3 முதல் 6.4 பவுண்டு) வரை இருக்கும்.[4][5][6] இதன் அலகு கருப்பு நிறமாகும். இனப்பெருக்க காலத்தில் அலகின்மேல் ஆணுக்கு உருண்டையான கருப்பு நிற செண்டு வளரும். விழிப்படலம் கருப்பு. கால்கள் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் தலையும் கழுத்தும் கரும் புள்ளிகள் கொண்டதாக இருக்கும். மூதுகு நீலம் தோய்ந்த கருப்பாகவும், மார்பும் வயிறும் வெண்மையாகவும் இருக்கும். பெண் பறவை ஆணை விட சிறியதாக முதுகின் நிறம் சற்று மங்கி அலகில் செண்டின்றி காணப்படும்.
நடத்தை
தொகுஇவை தாமரை, அல்லி முதலான கொடிகள் அடர்ந்த பெரிய குளங்களிலும், நாணற் புதர் நிறைந்த நீர் நிலைகளிலும் காணலாம். இவை நன்றாக நீரில் மூழ்கி நீந்துவதோடு நடக்கவும் கூடியன. சிலசமயங்களில் மரக் கிளைகளிலும் அமர்ந்திருக்கும். வயல்களில் விளைந்த நெல், செடி கொடிகளின் தளிர், தானியங்கள் போன்றவற்றை உண்பதோடு, நீரில் தவளை, புழு பூச்சிகளையும் உணவாக கொள்ளும். இனப்பெருக்க காலத்தில் ஆண் வாத்துகள் 'ஹேங்' என்று ஒலி எழுப்பும்.
இனப் பெருக்கம்
தொகுஇவற்றின் இனப்பெருக்க காலம் சனவரி முதல்செப்டம்பர் வரை ஆகும். குச்சிகள், சருகுகளை, புற்கள், இறகுகள் போன்றவற்றைக் கொண்டு மரப் பொந்துகளிலும், மரக் கிளைகளிலும் கூடு கட்டும். எட்டு முதல் 12 வரை தந்த நிற முட்டைகள் இடும். பெரும்பாலும் பெண் வாத்தே அடை காக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Sarkidiornis melanotos". IUCN Red List of Threatened Species 2016: e.T45953631A95159254. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T45953631A95159254.en. https://www.iucnredlist.org/species/45953631/95159254. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ http://www.ufrgs.br/alpp/Resumos_Quaternario_RS.pdf
- ↑ Ogilvie & Young, Wildfowl of the World. New Holland Publishers (2004), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84330-328-2
- ↑ Hilty, Steven L. (2002). Birds of Venezuela. Princeton University Press. pp. 197–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-3409-9.
- ↑ Sarkidiornis melanotos (Comb duck, Knob-billed duck) பரணிடப்பட்டது 2012-04-14 at the வந்தவழி இயந்திரம். biodiversityexplorer.org