செதன் சண்டை (1940)
செதன் சண்டை (Battle of Sedan) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். மே 12-14, 1940ல் நடந்த இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பிரெஞ்சுப் படைகளை முறியடித்து மியூசே ஆற்றைக் கடக்க செடான் நகரின் பாலங்களைக் கைப்பற்றின. இது இரண்டாம் செதன் சண்டை என்றும் அழைக்கப்படுகிறது. 1870ல் இதே இடத்தில் பிரான்சு-பிரஷ்யா போரின் போது நடந்த இன்னொரு சண்டையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இவ்வாறு அழைக்கப்படுகிறது.
செதன் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
பிரான்சு சண்டையின் (இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின்) பகுதி | |||||||
மே 15, 1940ல் மியூசே ஆற்றைக் கடக்கும் ஜெர்மானிய படைகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பிரான்சு பிரித்தானிய விமானப்படை | நாசி ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
மாரீஸ் காமெலின் சார்லஸ் ஹண்ட்சிகர் ஆன்ரி கிராட் ஆன்ரி-ஜான் லாஃபோண்டேன் மார்சல் டேட்டு பாட்ரிக் பிளேஃபேர் | கெர்டு வான் ரண்ட்ஸ்டட் ஹெயின்ஸ் குடேரியன் வொல்ஃப்ராம் வான் ரிக்தோஃபன் புரூனோ லோர்செர் ஹெயின்ரிக் கிராம்ஃப் கார்ல் வெய்சன்பெர்கர் |
||||||
பலம் | |||||||
துவக்கத்தில் ~10,000 பேர் டாங்குகள் ஏதுமில்லை 174 பீரங்கிகள் 152 குண்டுவீசி விமானங்கள் | 60,000 பேர் 22,000 வண்டிகள் |
||||||
இழப்புகள் | |||||||
தெரியவில்லை | 120 (மாண்டவர்) 400 காயமடைந்தவர் (12–14 மே) 81 ரப்பர் படகுகள் |
மே 10, 1940ல் ஜெர்மானியப் படைகள் பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீது தங்களது தாக்குதலைத் தொடங்கின. பெல்ஜியத்தின் மீதான தாக்குதல் திசைதிருப்பும் தாக்குதலாகும். பெல்ஜியப் படைகளின் உதவிக்கு விரையும் நேச நாட்டுப் படைகளைப் பொறி வைத்துப் பிடிக்க ஜெர்மானிய தளபதிகள் திட்டமிட்டனர். நேச நாட்டுப் படைகள் பெல்ஜியத்துக்குச் சென்றவுடன், அவற்றின் பின்பகுதியில் ஆர்டென் காடு வழியாக ஜெர்மனியின் ஆர்மி குரூப் ஏ விரைந்து சென்று ஆங்கிலக் கால்வாய் கடற்கரையை அடைந்து விட வேண்டுமென்பது ஜெர்மானியர்களின் திட்டம். அதற்கு மியூசே ஆற்றைக் கடக்க வேண்டும். இத்திட்டம் நிறைவேற செடான் நகரின் அருகில் மியூசே ஆற்றின் மீதமைந்துள்ள பாலங்களைக் கைப்பற்றுவது அவசியமானது. மே 12ல் ஜெர்மானியப் படைகள் செடானைத் தாக்கின. ஜெர்மானிய வான்படையான லுஃப்ட்வாஃபே செடான் பாதுகாப்பு நிலைகளின் மீது விடாது குண்டு வீசித் தாக்கியது. இந்த குண்டுவீச்சு பிரெஞ்சுப் படைகளின் மன உறுதியைக் குலைத்தது. இதனால் அவர்களால் ஜெர்மானிய கவசப் படைகளின் அதிரடித் தாக்குதலை (பிளிட்ஸ்கிரெய்க்) சமாளிக்க முடியவில்லை. இரு நாட்கள் சண்டைக்குப் பிறகு செடான் நகரப் பாலங்கள் ஜெர்மானியர் வசமாகின. அவை வழியாக ஆற்றைக் கடந்து கடற்கரை நோக்கி ஜெர்மானிய படைப்பிரிவுகள் வேகமாக முன்னேறத் தொடங்கின. இந்தப் பாலங்களை குண்டு வீசி அழிக்க பிரித்தானிய வான்படையும் பிரெஞ்சு வான்படையும் பல முறை முயன்று தோற்றன. அதேபோல பாலங்களை மீண்டும் கைப்பற்ற பிரெஞ்சு தரைப்படைகள் மேற்கொண்ட பல எதிர்த்தாக்குதல்கள் வெற்றி பெறவில்லை. பாலங்கள் ஜெர்மானியர் வசமே இருந்தன.
மே 20ல் ஜெர்மானியப் படைகள் கடற்கரையை அடைந்தன. பெல்ஜியத்துக்கு சென்ற நேச நாட்டுப் படைகள் முழுதும் சுற்றி வளைக்கப்பட்டன. அவற்றில் பல டன்கிர்க் துறைமுகத்திலிருந்து தப்பிச் சென்றாலும் பிரான்சின் வீழ்ச்சி உறுதியானது.
அடிக்குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ed. Blatt, Joel. (1998). The French Defeat of 1940: Reassessments. Breghahn Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57181-109-5
- Bond, Brian & Taylor, Michael. The Battle of France and Flanders, 1940. Leo Cooper, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85052-811-9
- Bond, Brian. (1990) Britain, France and Belgium, 1939–1940. Brassy's, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-037700-9
- Brian Bond. France and Belgium, 1939–1940. London : Davis-Poynter. 1975. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0706701682
- Dunstan, Simon (2005). Fort Eben Emael. The key to Hitler's victory in the West. Osprey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84176-821-9.
- Ellis, John (1993). The World War II Data Book. Aurum Press Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-185410-254-6.
- Ellis, Major L.F. (2004) [1st. pub. HMSO 1954]. Butler, J.R.M (ed.). The War in France and Flanders 1939-1940. History of the Second World War United Kingdom Military Series. Naval & Military Press Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-184574-056-6.
- Evens, Martin Marix. The Fall of France. Osprey Publishing, Oxford. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85532969-7
- Frieser, Karl-Heinz. The Blitzkrieg Legende. Naval Institute Press. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59114-294-2
- Healy, Mark, Ed. Prigent, John &. Panzerwaffe: The Campaigns in the West 1940. Vol. 1. London. Ian Allan Publishing. 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-071103-240-8
- Hooton, E.R. (2007). Luftwaffe at War; Blitzkrieg in the West. London: Chervron/Ian Allen. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85780-272-6.
- Keegan, John. The Oxford Companion to World War II. Oxford University Press. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280666-1
- Krause, M. and Cody, P. (2006) Historical Perspectives of the Operational Art. Center of Military History Publication. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-16072-564-7
- Mitcham, Samuel. German Order of Battle, Volume Two: 291st 999th Infantry Divisions, Named Infantry Divisions, and Special Divisions in WWII. Stackpole Books. 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0811734370
- Monsoor, Peter. Schwerpunkt, the second battle of Sedan, 10–15 May 1940. Command and Staff Dept., U.S. Army Armor School 1986. ASIN: B00072V186.