செதில் சிரிப்பான்

செதில் சிரிப்பான்
சிக்கிம் இந்தியாவில் (பங்கோலகா வனவிலங்கு சரணாலயம்)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. சப்யூனிகலர்
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் சப்யூனிகலர்
(எட்வர்ட் பிளைத், 1843)
வேறு பெயர்கள்

கருலாக்சு சப்யூனிகலர்

செதில் சிரிப்பான் (துரோகலோப்டெரான் சப்யூனிகலர்) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும் .

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் கழுகுகூடு வனவிலங்கு காப்பகத்தில்

விளக்கம்

தொகு

அடர் தங்க-பழுப்பு நிறத்தில் இதன் உடல் முழுவதும் கறுப்பு ஓரத்துடன் கூடிய செதில்கள் காணப்படும். இறக்கைகள் வெளிர், பிரகாசமான மஞ்சள், நுனியை நோக்கி நீல-சாம்பலுடன் கூடியது. இது நீலச் சிறகு சிரிப்பான் போன்றது. ஆனால் இதன் பழுப்பு நிறம் அதிகமாகக் காணப்படும். குறுகிய கருப்பு புருவம் கொண்டது. செதில் சிரிப்பான் தரையிலும் மற்றும் கீழ்க்காடுகளில், இணையாக உணவு தேடுகிறது.[2]

வாழ்விடம்

தொகு

செதில் சிரிப்பான் பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Trochalopteron subunicolor". IUCN Red List of Threatened Species 2016: e.T22715735A94466457. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715735A94466457.en. https://www.iucnredlist.org/species/22715735/94466457. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. "Scaly Laughingthrush - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செதில்_சிரிப்பான்&oldid=3764363" இலிருந்து மீள்விக்கப்பட்டது