செந்தலைக்கழுகு
செந்தலை பிணந்தின்னிக் கழுகு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Sarcogyps Lesson, 1842
|
இனம்: | S. calvus
|
இருசொற் பெயரீடு | |
Sarcogyps calvus (Scopoli, 1786) | |
செந்தலைக்கழுகுகளின் வாழ்விடத்தைக் காட்டும் படம். | |
வேறு பெயர்கள் | |
|
செந்தலை பிணந்தின்னிக் கழுகு அல்லது செந்தலைப் பாறுக் கழுகு[2] (Red-headed Vulture) என்பது இந்தியப்பகுதிகளிலும் தென்கிழக்காசியப் பகுதிகளிலும் ஒன்றிரண்டுமாகக் காணப்படும் ஊன் உண்ணிப் பறவையாகும். இதனைப் பாண்டிச்சேரி கழுகு[3] என்றும் அழைக்கிறார்கள்.
விளக்கம்
தொகுஇப்பறவை நடுத்தர வளர்ச்சியுடைய பறவையாகும். இதன் நீளம் சிறகு விரிந்த நிலையில் 76 முதல் 86 செமீ வரை உள்ளது. இதன் எடை 3.5 கிலோ முதல் 6.3 கிலோ வரை உள்ளது.[4][5] இவ்வகைப் பறவைகளில் வயது முதிர்ந்த கழுகுகளுக்கு முடியே இல்லாமல் வெளியில் தெரியும் சிவந்த தோல் தலையுடன் காணப்படும். இவற்றில் ஆண் பெண் பறவைகளை கண்களில் உள்ள கருவிழிகொண்டே பிரித்துப் பார்க்க முடியும். பெண் பறவையின் கருவிழி பழுப்பு கலந்த இருட்டாகவும், ஆண்களில் கருவிழி மங்கலான வெண்ணிறத்திலும் காணப்படுகிறது.[6]
வகைப்பாடு மற்றும் தொகுப்பியல்
தொகுஇந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் பழைய காலத்தைச் சார்ந்த கழுகு இதுதான். இப்பறவையின் துணையினங்கள் எதுவும் அறியப்படவில்லை.
பரவல் மற்றும் உறைவிடம்
தொகுசெந்தலைக்கழுகுகள் அபரிமிதமாக இந்தியத்துணைக்கண்டப் பகுதிகளில் தென் கிழக்குப்பகுதிகளிலும், தென் மேற்கில் அமைந்துள்ள மலைப்பகுதிகளிலும், சிங்கப்பூர் போன்றவற்றிலும் மட்டுமே காணப்படுகின்றன. தற்போதைய காலங்களில் வட இந்தியப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இவற்றின் இனப்பெருக்கம் பொதுவாக கைவிடப்பட்ட நிலப்பகுதி, விவசாய நிலப்பகுதி போன்றவற்றிலேயே அமைந்திருக்கிறது. பொதுவாக இப்பறவை கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர்கள் உயரம் உள்ள பகுதிகளிலேயே காணப்படுகிறது.[7]
பாதுகாப்பு நிலை
தொகுஇப்பறவை 2004 ஆம் ஆண்டு உலக உயிர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் கணக்குப்படி அழிவு நிலையிலிருந்து கணக்கெடுத்து பாதுகாக்கும் நிலைக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா போன்ற நாடுகளில் கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் மருந்தான டைக்ளோஃபீனாக் என்ற ஒரு மருந்தின் காரணமாக இவைகள் விரைவாக அழிந்து வருகிறது. இவ்வகையான கழுகுகள் 1990 ஆம் ஆண்டுகளுக்கு பிற்பகுதியில் இருபது ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிட்ட நிலைக்கு உட்பட்டுவிட்டது. 2007 ஆம் ஆண்டு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிட்ட பட்டியலில் இப்பறவை அழிந்து விட்டதாக வெளியிட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 பன்னாட்டு பறவை வாழ்க்கை (2013). "Sarcogyps calvus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ ம்சா, (1 செப்டம்பர் 2018). "கீழிறங்கும் கழுகுகள்!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)CS1 maint: extra punctuation (link) - ↑ Ali, S. (1993). The Book of Indian Birds. Bombay: Bombay Natural History Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563731-3.
- ↑ WWF- Red-headed Vulture (2011).
- ↑ Raptors of the World by Ferguson-Lees, Christie, Franklin, Mead & Burton. Houghton Mifflin (2001), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-12762-3
- ↑ Naoroji, Rishad (2006). Birds of Prey of the Indian subcontinent. pp. 282–287.
- ↑ Ferguson-Lees, James; David A. Christie (2001-09-17). Raptors of the world. Houghton Mifflin Harcourt. pp. 443–444. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-12762-7.