செந்தொண்டை குக்குறுவான்
செந்தொண்டை குக்குறுவான் | |
---|---|
செந்தொண்டை குக்குறுவான் தைபிங், மலேசியாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | சைலோபோகன்
|
இனம்: | சை. மிசுடாகோபானோசு
|
இருசொற் பெயரீடு | |
சைலோபோகன் மிசுடாகோபானோசு (தெம்மினிக், 1824) | |
வேறு பெயர்கள் | |
மெகாலைமா மிசுடாகோபானோசு |
செந்தொண்டை குக்குறுவான் (Red-throated barbet)(சைலோபோகன் மிசுடாகோபானோசு) என்பது மெகாலைமிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலங்கள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
விளக்கம்
தொகுசெந்தொண்டை குக்குறுவானின் ஆண், முக்கியமாகச் சிவப்பு கிரீடம், தொண்டை மற்றும் தொண்டைக்குக் கீழே ஒரு புள்ளியுடன் பச்சை நிறத்தில் காணப்படும். ஒவ்வொரு கண்ணுக்கும் மேலே ஒரு கருப்பு புள்ளி மற்றும் மஞ்சள் கிரீடம் இணைப்பு உள்ளது. கண்களுக்கு அருகில் மற்றும் தொண்டையின் கீழ்ப் பகுதியிலும் நீல நிறத்தில் உள்ளன. பெண் பறவையில் ஆணின் முக நிறம் போல இல்லை. இந்தப் பறவை 22.7–24.2 செ.மீ. நீளமும் 60–95 கி. எடையுடையது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Psilopogon mystacophanos". IUCN Red List of Threatened Species 2016: e.T22681619A92914267. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681619A92914267.en. https://www.iucnredlist.org/species/22681619/92914267. பார்த்த நாள்: 17 November 2021.