செனாய், ஜொகூர்
செனாய் (ஆங்கிலம்: Senai; மலாய்: Senai; சீனம்: 士乃) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், கூலாய் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்பகுதி. கூலாய் நகரிலிருந்து 4 கி.மீ. தெற்கிலும், ஸ்கூடாய் நகருக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
செனாய் | |
---|---|
Senai | |
ஜொகூர் | |
ஆள்கூறுகள்: 1°35′N 103°38′E / 1.583°N 103.633°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | கூலாய் மாவட்டம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 67,440 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 81000 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +07-5 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | J |
இந்த நகரம் இசுகந்தர் மலேசியாவின் (Iskandar Malaysia) முதன்மை மண்டலங்களில் ஒன்றாகும். இங்கு பல பெரிய பன்னாட்டு மின்னணு உற்பத்தியாளர்களின் தொழிற்சாலைகள் உள்ளன. அதன்வழி உள்ளூர் மக்கள் பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன.
பொது
தொகுசெனாய் எனும் பெயர், 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தப் பகுதியில் செழித்து வளர்ந்த செனாய் எனும் உள்ளூர் மரத்திலிருந்து பெறப்பட்டது.
இந்த நகரத்தில் மொத்தம் 67,440 மக்கள் வசிக்கின்றனர்.[1] சீனர், மலாய்க்காரர் மற்றும் தமிழ் இந்தியர் முக்கிய இனக் குழுக்கள். செனாயில் உள்ள பெரும்பான்மையான சீனர்கள் ஹக்கா பேச்சுவழக்குக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
வரலாறு
தொகுசெனாய் நகரின் பிரதான சாலையில், இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கடைவீதிகள் உள்ளன. அவற்றில் ஒரு தெருவை 'மேல் தெரு' (Upper Street) என்று அழைக்கிறார்கள். ஆற்றின் நடுவில் உள்ள தெருவை 'கீழ் தெரு' (Lower Street) என்று அழைக்கிறார்கள்.
1940-களின் பிற்பகுதியில் இருந்து 1950-களின் முற்பகுதி வரையில்; இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில்; மலாயா அவசரகாலத்தின் போது, செனாய் கிராமப் பகுதியிலும் மீள்குடியேற்றங்கள் நடந்தன.
மலாயா அவசரகாலம்
தொகுமலாயா அவசரகாலம் என்பது 1948-ஆம் ஆண்டில் இருந்து 1960-ஆம் ஆண்டு வரை மலாயாவில் அமல் படுத்தபட்ட ஓர் ஒழுங்கு நடவடிக்கை காலம் ஆகும். மலாயா அவசரகாலத்தில் (Malayan National Liberation Army (MNLA) எனும் மலாயா தேசிய விடுதலை படையினருக்கும்; பொதுநலவாயப் படை எனும் காமன்வெல்த் படையினருக்கும் (Commonwealth Forces) இடையே நடைபெற்ற போரை மலாயா அவசரக் காலப் போர் (Malayan Emergency War) என்றும் அழைக்கிறார்கள்.
அக்காலக் கட்டத்தில் பிரித்தானிய மலாயா அரசாங்கம் சில முக்கியத் திட்டங்களை மேற்கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது பிரிக்ஸ் திட்டம் (Briggs Plan).[2] காடுகள் சார்ந்த இடங்களில் வாழ்ந்த பொதுமக்களை வேறு குடியிருப்பு பகுதிகளுக்கு மறுக் குடியேற்றம் செய்வதுதான் பிரிக்ஸ் திட்டமாகும். அந்த வகையில் செனாய் கிராமப் புறங்களிலும் மறுக் குடியேற்றங்கள் நடைபெற்றன.
செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
தொகு1970-ஆம் ஆண்டுகளில் குறைந்த விலை வீடுகள் திட்டம் இங்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது மூன்றாம் கட்ட குடியேற்றம் நடைபெற்றது.
1980-களில் செனாய் நகருக்கு மற்றும் ஓர் அதிரடியான வாய்ப்பு. செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் கட்டப்பட்டது. செனாய் சுற்றுப்புறங்களில் பொருளாதார வளப்பம் ஏற்பட்டது. அதன் விளைவாக, செனாய் பகுதியில் கூடுதலாக வீடமைப்புத் திட்டங்களு உருவாகின. மக்கள் தொகையும் பெருகியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Profil%20.pdf. "Dokumen/Kulaijaya" (PDF). apps.water.gov.my. Archived from the original (PDF) on 2020-03-31. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Whither the new village: 60-year legacy of the Briggs Plan.
வெளி இணைப்புகள்
தொகு