சென்னிக்கரை பிரான்சிசு தாமசு

சென்னிக்கரை பிரான்சிசு தாமசு என்பவர் சி. எப். தாமசு (C. F. Thomas) என அறியப்படுகிறார்.[1] இவர் இந்திய அரசியல்வாதியும் கேரள சட்டப் பேரவையின் மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கேரள அரசாங்கத்தில் கிராம அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்துள்ளார்.[2][3] இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், 1962 முதல் 1980 வரை சங்கனாச்சேரியில் உள்ள தூய பெர்ச்மன்சு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.[4][5]

சென்னிக்கரை பிரான்சிசு தாமசு
கேரள அரசின் பதிவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கதர் கிராமத் தொழில் துறை அமைச்சர்
பதவியில்
17 மே 2001 (2001-05-17) – 12 மே 2006 (2006-05-12)
முன்னையவர்ஜோசப் சாக்கோ
பின்னவர்ஜோப் மைக்கேல்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிசங்கனாசேரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-07-30)30 சூலை 1939
சென்னிக்கரை, திருவிதாங்கூர், இந்திய ஒன்றியம்
(தற்போதைய கோட்டயம், கேரளம், இந்தியா)
இறப்பு27 செப்டம்பர் 2020(2020-09-27) (அகவை 81)
திருவல்லா, பத்தனம்திட்டா, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்குஞ்சம்மா
பிள்ளைகள்3

அரசியல் வாழ்வு

தொகு

தாமசு 1956-ல் இந்தியத் தேசிய காங்கிரசின் மாணவர் பிரிவான கேரள மாணவர் சங்கத்தின் செயல்பாட்டாளராக அரசியலில் நுழைந்தார். 1964ல் கேரள காங்கிரசில் சேர்ந்தார். இவர் 1980 முதல் தொடர்ந்து 9 முறை கேரள சட்டமன்றத்திற்கு சங்கனாச்சேரி தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாமசு 1956ல் அரசியலில் நுழைந்தார். 1980, 1982, 1987, 1991, 1996, 2001, 2006, 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] கேரள அரசாங்கத்தில் பத்திரப்பதிவு, கிராம அபிவிருத்தி அமைச்சராகவும் காதி மற்றும் குறுந்தொழில் அமைச்சராகவும் இருந்தார்.

இறப்பு

தொகு

தாமசு, திருவல்லா பிலிவர்சு தேவாலய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27 செப்டம்பர் 2020 அன்று, தனது 81 வயதில், நீண்ட கால நோய்க்குப் பிறகு இறந்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. ലേഖകൻ, മാധ്യമം (2021-05-03). "സി.എഫിന് കൊടുത്ത എം.എല്‍.എ സ്ഥാനം തിരികെപ്പിടിച്ച് എല്‍.ഡി.എഫ് | Madhyamam". www.madhyamam.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-03.
  2. "Tight fight in Kottayam district". Hinduonnet.com. 2001-05-06 இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606103601/http://www.hinduonnet.com/2001/05/06/stories/1506211s.htm. பார்த்த நாள்: 2010-01-24. 
  3. "Installation of Corepiscopoi held". The Hindu. 2007-01-14 இம் மூலத்தில் இருந்து 2007-11-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071127015606/http://www.hindu.com/2007/01/14/stories/2007011411290300.htm. பார்த்த நாள்: 2010-01-24. 
  4. "Tight fight in Kottayam district". Hinduonnet.com. 2001-05-06 இம் மூலத்தில் இருந்து 6 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606103601/http://www.hinduonnet.com/2001/05/06/stories/1506211s.htm. பார்த்த நாள்: 2010-01-24. 
  5. "Installation of Corepiscopoi held". தி இந்து. 2007-01-14 இம் மூலத்தில் இருந்து 2007-11-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071127015606/http://www.hindu.com/2007/01/14/stories/2007011411290300.htm. பார்த்த நாள்: 2010-01-24. 
  6. Panda, Sushmita (2020-09-27). "CF Thomas, veteran Kerala Congress leader and Changanassery MLA, dies". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.
  7. "Kerala Congress veteran CF Thomas MLA passes away". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 27 September 2020. https://www.newindianexpress.com/states/kerala/2020/sep/27/kerala-congress-veteran-cf-thomas-mla-passes-away-2202541.html. பார்த்த நாள்: 27 September 2020.