சென்னை குயர் இலக்கிய விழா

சென்னை குயர் இலக்கிய விழா, குயர் லிட்ஃபெஸ்ட், சென்னை (கியூஎல்எஃப்) என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் இந்திய நகரமான, சென்னையில் 2018 ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் வருடாந்திர இலக்கிய விழாவாகும். சென்னை குயர் இலக்கிய விழாவின் முதல் பதிப்பு 2018 இல் நடைபெற்றது. குயர் இலக்கியத் திருவிழா, பொதுப்பங்களிப்பில், நண்பர்கள், ஆதரவாளர்கள், மற்றும் பெயர் வெளியிடாமல்  பணமளித்தவர்களின் ஆதரவிலேயே ஒருங்கிணைக்கப்பட்டு கவிக்கோ மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. [1][2]

சென்னை குயர் இலக்கிய விழா (கியூஎல்எஃப்)
சென்னை குயர் இலக்கிய விழா
நிகழ்நிலைசெயலில் உள்ளது
வகைந.ந.ஈ.தி இலக்கியம்
இலக்கிய விழா
நாட்கள்7 ஜூலை 2018
14 செப்டம்பர் 2019
19, 20, 26 மற்றும் 27 செப்டம்பர் 2020
18 முதல் 24 வரை செப்டம்பர் 2021
காலப்பகுதிஆண்டுதோறும்
நிகழ்விடம்கவிக்கோ மாநாட்டு மையம் மற்றும் இணையவழி
அமைவிடம்(கள்)சென்னை
நாடுஇந்தியா
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்2018ம் ஆண்டு முதல்
துவக்கம்7 ஜூலை 2018
நிறுவனர்மௌலி
அமைப்பாளர்குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்
வலைத்தளம்
www.queerlitfest.com
இந்தியாவின் முதல் குயர் இலக்கிய விழா

இந்த இலக்கிய நிகழ்வானது குயர் சென்னை குரோனிகல்ஸ், சென்னையை மையமாக கொண்டு இயங்கி வரும் சுயாதீன வெளியீட்டு மற்றும் இலக்கிய மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இவ்வகையான விழாக்களில் இந்திய அளவில் இதுவே முதலாவதும் முதன்மையானதுமாகும்.[3]

வரலாறு தொகு

வருடாந்திர குயர் இலக்கிய விழா, இந்திய நகரமான சென்னையில், நடைபெறுகிறது. சென்னை குயர் லிட்ஃபெஸ்டின் முதல் பதிப்பு 2018 இல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய பால்புதுமையினர் இலக்கியங்கள், பால்புதுமையினர் வாழ்வில் முக்கியப் பங்காற்றும் இலக்கியங்களின் அரசியல் மற்றும் இலக்கிய முக்கியத்துவங்களைக் குறித்து ஒரு உரையாடலை தோற்றுவித்து, அதன்மூலம் பால்புதுமை எழுத்தாளர்கள் போன்று மற்ற பெரும்பான்மை இலக்கிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட அடையாளம் மறுக்கப்பட்ட கலைஞர்களுக்கு ஊக்கமும் வாய்ப்புகளும் உருவாவதோடு, பொதுவெளியில் பால்புதுமை இலக்கியங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலும் உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு இந்த இலக்கிய விழா தொடங்கப்பட்டு வருடாவருடம் நடைபெற்று வருகிறது.[4][5] ஒருநாள் நடைபெறும் இவ்விழாவில் பால்புதுமையினர் எழுதிய மற்றும் அவர்களைப்பற்றிய இலக்கிய கலந்துரையாடல்கள், புத்தக வாசிப்பு, உரைகள் என தொடர் நிகழ்வுகளைக் கொண்டிருக்கும்.[5][6][6][6][7][8] விழாவின் இயக்குநராகவும் பொறுப்பாளராகவும் குயர் சென்னை குரோனிகல்ஸ் அமைப்பின் இணைஇயக்குனரான மௌலி உள்ளார். 2018 பதிப்பில் மௌலியுடன் இணைந்து எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எல்.ஜே. வயலட்டால் ஒருங்கிணைத்தார். தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் ந.ந.ஈ.தி+ இலக்கியங்களில் கவனம் செலுத்தவும், பால்புதுமை எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் கலைஞர்களை முன்னிலைப்படுத்தவும் நடத்தப்படும் இந்த இளகிய விழாவில் தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் மட்டுமல்லாது டெல்லி, கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மும்பை மற்றும் லண்டனில் இருந்தும் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.[9][10] கியூஎல்எஃப் ஆனது இந்தியாவில் பால்புதுமை அடையாளங்கள், பால்புதுமை  உள்ளடக்கிய குழந்தைகள் இலக்கியம், பால்புதுமை  இலக்கியத்தில் கலை, மொழிபெயர்ப்புகள் மற்றும் வெளியீட்டில் பால்புதுமை  இலக்கியம் போன்ற கருப்பொருள்களை உள்ளடக்கியுள்ளது. திருவிழா முழுக்க முழுக்க பொதுப்பங்களிப்பின் மூலமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[6][11]

2018 தொகு

7 ஜூலை 2018 அன்று நடைபெற்ற 2018 சென்னை குயர் இலக்கிய விழா, இந்தியாவின் இத்தகைய அமைப்பில் நடத்தப்படும் முதல் இலக்கிய விழாவாகும், இது பால்புதுமை இலக்கியம், எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களை முழுமையாக மையப்படுத்தி நடத்தப்பட்டுள்ளது. சமூக நீதி பெருமித கொடி 2018 கியூஎல்எஃப் இல் வெளியிடப்பட்டது.

சென்னை குயர் இலக்கிய விழாவில் கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

  • சிறப்புரை: லிவிங் ஸ்மைல் வித்யாவின் "மெல்ல விலகும் பனித்திரை" புத்தகத்திலிருந்து அவருடைய முன்னுரை.
    • வாசித்தவர்: ஷில்பா.
  • அமர்வு 1: பால்புதுமையினர் குறித்த ஊடக சித்தரிப்புகளும், எழுத்துகளும் - இந்தியாவில் பால்புதுமையினர் ஊடகங்களில் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் சித்தரிக்கப்படுவது பற்றிய கலந்துரையாடல்
    • பேச்சாளர்கள்: துருபோ ஜோதி (உரை), ராகமாலிகா, பனிமலர் பன்னீர்செல்வம், மண்குதிரை.
  • அமர்வு 2: பதிப்புத் துறையின் பார்வையில் பால்புதுமை இலக்கியம் - நீண்ட வரலாறும், பன்முகத் தன்மையும்கொண்ட தமிழ் இலக்கியத்தில் பால்புதுமை இலக்கியத்தை பதிப்பாளர்கள் பார்வையில் ஆராயும் அமர்வு
    • பேச்சாளர்கள்: பிரியாபாபு, அமுதா, ப்ரேமா ரேவதி. வழிநடத்துநர்: செந்தில்.
  • அமர்வு 3: இந்தியாவில் பால்புதுமையினரைப் பேசும் இலக்கியங்கள் - பால்புதுமை அடையாளங்களை வரையறுப்பதிலும், பால்புதுமையினர் அல்லாதோருக்கு புரிதலை ஏற்படுத்துவதிலும் முக்கியப்பங்காற்றியுள்ள இலக்கியங்கள்
    • பேச்சாளர்கள்: தமயந்தி, நாடிகா.
  • உரைகள்:
    • கன்னடத்தில் பால்புதுமை இலக்கியம் - வசுதேந்திரா.
    • சின்க்கி ஹோமோ ப்ரோஜெக்ட்​ - புதுடில்லியில் வசிக்கும் இரு வடகிழக்கிந்திய ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களால் துவங்கப்பட்ட இணைய ஊடக முயற்சியே சின்க்கி ஹோமோ ப்ராஜெக்ட். வடகிழக்கிந்தியப் பகுதிகளைச் சேர்ந்த பால்புதுமையினரின் கதைகளை, உடலிலும் மனதிலும் பதிந்திருக்கும் அனுபவங்களை, இணைய அச்சு ஊடகங்களில் பதிவுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட பால்புதுமையினர் படைப்புகள் வாசிப்பு
      • அறிமுகம்: ஷீஜி, குயர் சென்னை தொகுப்பு பங்களிப்பாளர்

விவாத தலைப்புகளின் முதல் பதிப்பில், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான கிரீஷால் நடத்தப்படும் ஊடகத்தில் LGBT பிரதிநிதித்துவம், வெளியீட்டில் க்வீர் இலக்கியம்; மோகனசாமி புகழ் வசுதேந்திரா கன்னடத்தில் வினோத இலக்கியம் பற்றி பேசினார். வினோதமான வாழ்க்கையின் பன்முகத்தன்மை மற்றும் விளிம்புநிலை மற்றும் அவற்றின் கண்ணுக்கு தெரியாத விவரிப்புகளின் வழிகளில், தி சிங்கி ஹோமோ திட்டம் முறையாக லிட்ஃபெஸ்டில் தொடங்கப்பட்டது.

[12][13][14]

2019 தொகு

2019ம் ஆண்டின் சென்னை குயர் இலக்கிய விழா, 14 செப்டம்பர் 2019 அன்று சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஓவியங்கள் என புதிய உரையாடல்களுடன் இரண்டாம் பதிப்பு நடைபெற்றது.

  • அமர்வு 1: அனைவருக்குமான சிறார் இலக்கியம் - எழுத்தாளர் ஷல்ஸ் மகாஜன் மற்றும் கல்வியாளர் சாலை செல்வம் ஆகியோரின் உள்ளடக்கிய குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் விவாதம்
  • அமர்வு 2: பால்புது இலக்கியத்தில் ஓவியங்கள் - சமூக வரலாற்றாசிரியர் மாரி மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் வை ஆகியோருக்கு இடையில் கலைஞரான செந்தில் அவர்களால் பால்புது  இலக்கியத்தில் கலை (கலையில் விந்தை) என்ற தலைப்பில் கலந்துரையாடல்
  • அமர்வு 3: மலையாளத்தில் பால்புது இலக்கியம் - சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி தற்போது வரையான மலையாள பால்புது இலக்கியம் குறித்து விவாதமும் “ரண்டு புருஷன்மார் சும்பிக்கும்போள்” எனும் தனது மலையாள சுயசரிதையின் ஒரு பகுதியை அதன் எழுத்தாளர் வாசித்ததுமான நிகழ்ச்சி [15]
  • அமர்வு 4: மொழிபெயர்ப்பு - ஒரு உரையாடல் - மொழிபெயர்ப்பாளர் வி. கீதாவுடன் எழுத்தாளர் நடிகா நடத்திய உரையாடல்கள்.
  • இலக்கிய வாசிப்பு - லண்டனைச் சேர்ந்த எழுத்தாளரும் கலைஞருமான ஹரி ராஜலெட்சுமி தனது தனிப்பட்ட பால்புது இலக்கியம் மற்றும் பொதுவாக தமிழ் பால்புது இலக்கியம் பற்றிய பேச்சு

தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்புரையாற்றினார். எல்லாருக்கம் பேசுவதற்கான வாய்ப்புடன் நிகழ்வு நிறைவுற்றது.[6][16]

2020 தொகு

2020ம் ஆண்டின் சென்னை குயர் இலக்கிய விழா செப்டம்பர் 19, 20, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.[17] அந்த வருடம் தீவிரமாக காணப்பட்ட கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்த இலக்கிய விழாவானது இணைய வழியிலே நடத்தப்பட்டது.[18] ‘பால்புதுமையினர் மற்றும் மாற்றுத்தள செயல்பாட்டாளர்களின் அனைவரையும் உள்ளடக்கிய கதையாடல்’ எனும் கருப்பொருளை மையமாக கொண்டு, இந்த இலக்கிய விழாவின் ஆண்டு பதிப்பு,  கதைசொல்லலில் கவனம் செலுத்தியது மற்றும் உலகெங்கிலும் உள்ள பேச்சாளர்களை ஒன்றிணைத்தது.[19]

2021 தொகு

2021ம் ஆண்டின் சென்னை குயர் இலக்கிய விழா 2021 செப்டம்பர் 18 முதல் 24 வரையிலான தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது ஆண்டாக, கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, டுவிட்டர் ஸ்பேஸில் இந்த விழா ஒலி வழியாக மட்டுமேயான நிகழ்வாக நடத்தப்பட்டது..[20][21] இவ்விழா, தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நர்த்தகி நடராஜ் தலைமையில் நடைபெற்றது.[22] “ஓங்கி ஒலிக்கும் குரல்கள்” என்பதே 2021 ம் ஆண்டு குயர் இலக்கிய விழாவின் கருப்பொருளாக வைக்கப்பட்டு, அதனடிப்படையில் எழுத்தாளர் ஏ ரேவதி மற்றும் எழுத்தாளர் தனுஜா சிங்கம் முன்னிலையில் நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டது.[23] திரைப்படத் தயாரிப்பாளர் திவ்ய பாரதி மற்றும் எழுத்தாளர் சிந்து ராஜசேகரன் ஆகியோர் பால்புதுமையினரின் ஆவணங்களின் அவசியத்தை பற்றிய உரையாடல்களை எழுத்தாளர் மற்றும் கலைஞரான பிரின்சியை நடுவராகக் கொண்டு நிகழ்த்தினர்.[24][25] எழுத்தாளரும் நடிகருமான ஷோபா சக்தி தனது எழுத்துக்களில் உள்ள பால்புதுமையைப் பற்றியும், பல ஆண்டுகளாக தமிழ் இலக்கிய வெளிகள் எவ்வாறு பால்புதுமையை கண்டது என்றும் பேசினார். இவ்விழாவின் இயக்குநர் மௌலி மற்றும் லண்டனைச் சேர்ந்த எழுத்தாளர் ஹரி ராஜலெட்சுமி ஆகியோருக்கு இடையேயான உரையாடல் தமிழில் பால்புதுமையையும் பால்புதுமையை குறிக்கும் சொற்களை தொகுப்பதில் உள்ள முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இறுதி அமர்வு பொறுப்பான ஊடக அறிக்கையிடல் மற்றும் ஊடகங்களில் பால்புதுமை நபர்களின் பிரதிநிதித்துவத்திற்கான முன்னோக்கி வழி குறித்து கவனம் செலுத்தியது.[26]

மேற்கோள்கள் தொகு

  1. "Spotlight on queer literature". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  2. "Queer lit fest in city to promote Tamil writing". dtNext.in (in ஆங்கிலம்). 2018-07-02. Archived from the original on 20 June 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  3. மௌலி,பணியாளர் நலன் ஆலோசகர் | ஃ பீனிக்ஸ் மனிதர்கள் (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-12-30
  4. Queer LitFest (2018) | Moulee, Gireesh LS speech (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-12-29
  5. 5.0 5.1 [Intro] | வரவேற்புரை, மௌலி & கிரீஷ் - சென்னை குயர் இலக்கிய விழா 2019 | QLF 2019 (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-12-29
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "Chennai Queer LitFest to spur conversations on inclusive literature". dtNext.in (in ஆங்கிலம்). 2019-09-11. Archived from the original on 28 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  7. "Chennai's 1st queer lit fest to focus on Tamil writing". The Times of India (in ஆங்கிலம்). June 28, 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  8. Queer LitFest (2018) | Moulee, Gireesh LS speech (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-12-29
  9. "QCC Queer LitFest 2018 | Speakers". Queer LitFest (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  10. "QLF 2019 Speakers | Queer LitFest, Chennai by QCC". Queer LitFest (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  11. "India's First Queer LitFest in Chennai Provided a Platform to Queer Writers and Artists in the Margins". Gaylaxy Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-11-12. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  12. "Inclusive kids' literature to open mic: 2nd Chennai Queer LitFest has a lot in store". www.thenewsminute.com. 3 September 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29."Inclusive kids' literature to open mic: 2nd Chennai Queer LitFest has a lot in store". www.thenewsminute.com. 3 September 2019. Retrieved 29 December 2019.
  13. "QCC Queer LitFest 2018". Queer LitFest (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  14. Queer Lit Fest (2018) | Keynote : Living Smile Vidya | Read by Shilpa (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-12-29
  15. "Spotlight on queer literature". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29."Spotlight on queer literature". The New Indian Express. Retrieved 29 December 2019.
  16. "இந்தியாவின் முதல் பால்புதுமையினர் இலக்கியவிழா". கருப்பு. 2019-09-27. Archived from the original on 2019-12-29. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  17. "Announcement: Chennai Queer LitFest 2020 Live". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
  18. "Announcing Chennai Queer LitFest 2020 - QCC". பால்புது பக்கங்கள் (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-01. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
  19. "Pitching Queer stories to the world". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
  20. "Tune into this audio-only LitFest". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.
  21. Kamini Mathai (Sep 22, 2021). "twitter spaces: Chennai Queer LitFest comes to Twitter Spaces | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.
  22. "Steeping into the queer life of Bakthi era". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.
  23. "A debt to oral history". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.
  24. "Writing wronged realities". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.
  25. "Claim, carve and create". www.indulgexpress.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.
  26. "The responsibility of representation". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.