நர்த்தகி நடராஜ்
நர்த்தகி நடராஜ் (Narthaki Nataraj), தமிழ்நாட்டின் மதுரை மாநகரில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே அமைந்த அனுப்பானடி பகுதியில், பெருமாள் பிள்ளை - சந்திராம்மாள் இணையரின் பத்து குழந்தைகளில், ஐந்தாம் குழந்தையாக நடராஜ் எனும் பெயரில் பிறந்தவர். சிறு வயதில் தன்னில் பெண்மை இருப்பதை உணர்ந்த நடராஜ், பெண்களின் உடைகளை அணியத்துவங்கினார்.
நர்த்தகி நடராஜ் | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | நடனக் கலைஞர் |
விருதுகள் | கலைகளுக்கான பத்மசிறீ |
இணையம் | http://www.narthakinataraj.com |
இதனால் நடராஜ் தன்னை ஒத்த திருநங்கைத் தோழியான சக்தியுடன் இணைந்து, பத்மினி, வைஜெயந்திமாலா போன்றோரின் திரைப்படங்களை பார்த்து, தாங்களே நடனப் பயிற்சிகளை மேற்கொண்டனர். +2 வரை பள்ளிக் கல்வியை முடித்த நடராஜ், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக உதவி நடனப் பேரராசிரியராக பணி செய்தார். குருகுல முறையில் பரதநாட்டியம் கற்றுத் தேறினர்.[1] தஞ்சை நால்வர் வழிவந்த கே. பி. கிட்டா பிள்ளையிடம் நேரடியாக நடனம் கற்றவர்களில் இவரும் ஒருவர்.[2]
பின்னர் நர்த்தகி நடராஜ் எனும் பெயரில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தமிழசைக் கலைஞர் என அறியப்பட்டார். இவர் தற்போது சென்னையில் வாழ்கிறார்.[3]
கடந்த 30 ஆண்டுகளாகளுக்கும் மேலாக பரதநாட்டியத்திற்கு தமது வாழ்வை அர்ப்பணித்துள்ள இவரது திறமையைப் பாராட்டி, இந்திய அரசு 2019-இல் பத்மஸ்ரீ விருந்து வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.[4][5]
சிறப்புகள்
தொகு- தமிழ்நாட்டில் திருநங்கை என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர்.
- கடவுச் சீட்டு பெற்ற முதல் திருநங்கை.
- தமிழ்நாடு அரசின் பதினொன்றாம் வகுப்பு தமிழ் பாடநூலில் நர்த்தகி நடராஜ் வாழ்க்கை பாடமாக உள்ளது.
- முதன் முதலில் மதிப்புறு முனைவர் மற்றும் கலைமாமணி விருது பெற்ற திருநங்கை.
- பல வெளிநாட்டுப் பல்கலைகழகங்களில் வருகை தரு பேராரசிரியராக பணி செய்கிறார்.
- தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். [6]
விருதுகள்
தொகு- பத்மஸ்ரீ - (2019) - இந்திய அரசு [5][7]
- மதிப்புறு முனைவர் - (2016) - தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்[8]
- கலைமாமணி - தமிழ்நாடு அரசு
- மியூசிக் அகாதெமியின் நிருத்திய கலாநிதி விருது 2021
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ நர்த்தகி நடராஜ்: தடைகளைத் தகர்த்த நாட்டிய கலைஞர் - சாதித்த கதை
- ↑ "மியூசிக் அகாடமி நாட்டிய விழா: நிருத்திய கலாநிதிகளும் சிலரின் நிருத்தங்களும்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
- ↑ "என்னைத் திருநங்கை என்று பெருமையுடன் முன்னிலைப்படுத்திக் கொள்கிறேன்! நர்த்தகி நட்ராஜின் வாழ்க்கைப் பயணம்!". Dinamani.
- ↑ "இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்". Hindu Tamil Thisai.
- ↑ 5.0 5.1 மாற்றுப் பாலினத்தவர் என்பதற்காக விருது வழங்கப்படவில்லை - நர்த்தகி நடராஜ்
- ↑ தமிழ்நாடு அரசு இணையதளத்தில் மாநிலத் திட்டக்குழு பக்கம்
- ↑ வரிசை எண் 73 - Padma Awards
- ↑ "தமிழகத்தின் முதல் 'மதிப்புறு முனைவர்' திருநங்கை... நர்த்தகி! (நடன வீடியோ)". https://www.vikatan.com/.
{{cite web}}
: External link in
(help)|work=