அனுப்பானடி

மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

அனுப்பானடி (Anuppanadi) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த மாநகரப் பகுதி ஆகும். [1][2] இது, 9°54′17.3″N 78°08′24.4″E / 9.904806°N 78.140111°E / 9.904806; 78.140111 (அதாவது, 9.904800°N, 78.140100°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 152 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அனுப்பானடி பகுதி, மதுரை மாநகராட்சியின் மண்டலம் எண் 3 - பழைய வார்டு எண் 57ல் அமைந்துள்ளது. இதனருகில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அமையப் பெற்றுள்ளது. அண்ணா நகர், சிம்மக்கல், யானைக்கல், கோரிப்பாளையம், செல்லூர், கருப்பாயூரணி ஊராட்சி, கே. கே. நகர், கீழ வாசல், நெல்பேட்டை, தெற்கு வாசல் ஆகியவை அனுப்பானடி பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். 1887 ஆம் ஆண்டு அனுப்பானடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், ஈமத்தாழிகள் கண்டெடுக்கப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[3]

அனுப்பானடி
Anuppanadi
அனுப்பானடி
அனுப்பானடி Anuppanadi is located in தமிழ் நாடு
அனுப்பானடி Anuppanadi
அனுப்பானடி
Anuppanadi
அனுப்பானடி, மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°54′17.3″N 78°08′24.4″E / 9.904806°N 78.140111°E / 9.904806; 78.140111
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
152 m (499 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்கள்
625009
தொலைபேசி குறியீடு0452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, வண்டியூர், அண்ணா நகர், சிம்மக்கல், யானைக்கல், கோரிப்பாளையம், செல்லூர், கருப்பாயூரணி ஊராட்சி, கே. கே. நகர், கீழ வாசல், நெல்பேட்டை, தெற்கு வாசல்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்மு. பூமிநாதன்
இணையதளம்https://madurai.nic.in

போக்குவரத்து

தொகு

அனுப்பானடி பகுதியிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சுமார் 7 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து சுமார் 4.5 கி.மீ. தூரத்தில் பெரியார் பேருந்து நிலையம் உள்ளது. அருகாமையில், சுமார் 2.5 கி.மீ. தூரத்தில் மதுரை கிழக்கு தொடருந்து நிலையம் உள்ளது. மற்றும் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்று, வெளியூர் பயணத் தொடர்புக்கு ஏற்றவாறு, மாநகரப் பேருந்துகள் மூலம் சென்று வர சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. அனுப்பானடியிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் அவனியாபுரம் பகுதியில் மதுரை வானூர்தி நிலையம் சிறப்புற அமைந்துள்ளது.

கல்வி

தொகு

அனுப்பானடியில் அரசுப் பள்ளியான மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி[4] மற்றும் அனுப்பானடி செங்குந்தர் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலியவை அமைந்துள்ளன.[5] வேலம்மாள் கல்விக் குழுமத்தின் வேலம்மாள் வித்யாலயா, வேலம்மாள் போதி வளாகம் ஆகியவை அனுப்பானடியில் நிறுவப்பட்டுள்ளன.[6]

மருத்துவம்

தொகு

அனுப்பானடி பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.[7] மேலும், ஆல்ஃபா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மூலமாகவும் இங்குள்ள மக்கள் பலனடைகின்றனர்.

ஆன்மீகம்

தொகு

அனுப்பானடியிலுள்ள சர்வ சிவசக்தி கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[8] மேலும் இங்குள்ள அனுப்பானடி நடேஸ்வரர் கோயில் ஒரு சிவன் கோயிலாகும்.

தொழில்

தொகு

அனுப்பானடி மற்றும் அப்பகுதியைச் சுற்றியுள்ள மதுரை மாவட்டத்திலுள்ள 400-க்கும் மேற்பட்ட அப்பளத் தயாரிப்பு நிறுவனங்களில் சுமார் 15,000 ஆண், பெண் தொழிலாளர்கள் மூலம் தினமும் 5,000 கிலோகிராம் அப்பளங்கள் தயாராகின்றன.[9] மேலும், கற்பூரம் தயாரிப்பு, நெசவுத் தொழில், நெகிழி மூலம் பொருட்கள் தயார் செய்தல் ஆகியவை அனுப்பானடியில் அதிகமாகும்.

அரசியல்

தொகு

அனுப்பானடி பகுதியானது, மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் மு. பூமிநாதன் ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Dube, Kamala Kant (1988). Urban Environment in India: Problems and Prospects : Essays in Honour of Prof. Ujagir Singh (in ஆங்கிலம்). Inter-India Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-210-0205-9.
  2. Tamil Nadu (India) Public Elections Dept (1971). Handbook of Electoral Areas: Madurai District (in ஆங்கிலம்). Director of Stationery and Print., Tamil Nadu.
  3. அ.முத்துக்கிருஷ்ணன். "தூங்காநகர நினைவுகள் - 3". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-01-01.
  4. "A corporation high school in Anuppanadi is crying for attention as its infrastructure is on the verge of collapse" (in en). https://www.edexlive.com/news/2021/dec/07/a-corporation-high-school-in-anuppanadi-is-crying-for-attention-as-its-infrastructure-is-on-the-verg-26075.html. 
  5. "SOURASHTRA G HSS, ANUPANADI - Madurai Cor. Ward54, District Madurai (Tamil Nadu)". schools.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-03.
  6. Vinothkumar. "வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் அதிரடி சோதனை... முக்கிய ஆவணங்கள் சிக்கியது..!". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2023-01-01.
  7. "மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை தலைவர் முத்துராமலிங்கம் தகவல் - Dinamalar Tamil News". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2023-01-01.
  8. "Arulmigu Sarva Sivasakthi Temple, Mela Anuppanadi, Madurai - 625009, Madurai District [TM032057].,vinayagar,vinayagar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-01.
  9. "Seven years on, appalam industry workers await a wage hike in Tamil Nadu". https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/dec/28/seven-years-on-appalam-industry-workers-await-a-wage-hike-in-tamil-nadu-2532353.html. 

வெளி இணைப்புகள்

தொகு

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுப்பானடி&oldid=3708387" இலிருந்து மீள்விக்கப்பட்டது