அண்ணா நகர், மதுரை
அண்ணா நகர் (Anna Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில், 9°55′17.8″N 78°08′39.5″E / 9.921611°N 78.144306°E (அதாவது, 9.921600°N, 78.144300°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 153 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். மதுரை, செல்லூர் தல்லாகுளம், கோரிப்பாளையம், வண்டியூர், கருப்பாயூரணி ஊராட்சி, கே. கே. நகர், செனாய் நகர் மற்றும் சின்ன சொக்கிகுளம் ஆகியவை அண்ணா நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.
அண்ணா நகர், மதுரை
Anna Nagar, Madurai அறிஞர் அண்ணா நகர் | |
---|---|
ஆள்கூறுகள்: 9°55′17.8″N 78°08′39.5″E / 9.921611°N 78.144306°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 158 m (518 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண்கள் | 625020 |
தொலைபேசி குறியீடு | 0452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, செல்லூர் தல்லாகுளம், கோரிப்பாளையம், வண்டியூர், கருப்பாயூரணி ஊராட்சி, கே. கே. நகர், செனாய் நகர், சின்ன சொக்கிகுளம் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | கோ. தளபதி |
இணையதளம் | https://madurai.nic.in |
அண்ணா நகர் பகுதியிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சுமார் 5.5 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் மதுரை - பெரியார் பேருந்து நிலையம் உள்ளது. மேலும், எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 4.5 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது. அண்ணா நகர் பகுதியிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் அவனியாபுரம் பகுதியில் மதுரை வானூர்தி நிலையம் சிறப்புற அமைந்துள்ளது.
அம்பிகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி[1] என்ற தனியார் கல்லூரி ஒன்று அண்ணா நகரில் இயங்கி வருகிறது.
தனியார் மருத்துவமனைகளான அரவிந்த் கண் மருத்துவமனை[2] இனியா மருத்துவமனை[3] மற்றும் கே ஆர் எஸ் நியூ லைஃப் மருத்துவமனை[4] ஆகியவை அண்ணா நகர் பகுதியில் சேவைகள் புரிந்து வருகின்றன.
தமிழகத்தில் குறைந்த அளவில் காய்கனிகளை உற்பத்தி செய்யும் குறு விவசாயிகளும், வேளாண்துறை அனுமதியுடன் நேரிடையாக விற்பனை செய்யும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட உழவர் சந்தைகளில் முதலாவது மதுரை அண்ணா நகர் உழவர் சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.[5] இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், அண்ணா நகரிலுள்ள, மறுசீரமைக்கப்பட்ட புதிய மற்றும் சுத்தமான காய்கனிகள் விற்பனை செய்யும் உழவர் சந்தைக்கு, 2024 ஆம் ஆண்டு ஆகத்து பத்தாம் நாள் வரை செல்லுபடியாகும் தரச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்துள்ளது.[6]
அண்ணா நகர் பகுதியானது, மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் கோ. தளபதி ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Welcome to Ambiga College". ambigacollege.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-28.
- ↑ "Madurai". Aravind Eye Care System. பார்க்கப்பட்ட நாள் 2022-12-28.
- ↑ "Iniya Hospital". iniyahospital.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-28.
- ↑ "KRS". krsnulife.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-28.
- ↑ செ.சல்மான் பாரிஸ், குருபிரசாத். "உழவர் சந்தைகள் எப்படி செயல்படுகின்றன? ஸ்பாட் விசிட்". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2022-12-28.
- ↑ Staff Reporter (2022-08-13). "TN's first Uzhavar Sandhai gets FSSAI certification". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-12-28.