தல்லாகுளம், மதுரை

மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

தல்லாகுளம், (Tallakulam) அதாவது, தல்லாகுளம், மதுரை[1] என்ற புறநகர்ப் பகுதி, இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தல்லாகுளத்தில் இராமநாதபுரம் சேதுபதி மண்டபம் என்ற மண்டகப்படி ஒன்று உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் நடக்கும் சித்திரைத் திருவிழாவின் போது, அழகர் கோயிலிலிருந்து வந்து செல்லும் கள்ளழகர், பூப்பல்லக்கில் எழுந்தருளி, இம்மண்டகப்படிக்கு விஜயம் செய்வது வாடிக்கையான நிகழ்வு. சிறப்பாக நடைபெறும் இந்நிகழ்வில், மதுரை மாவட்டம் மட்டுமன்றி சுற்றியுள்ள பிற மாவட்டங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டு இன்புறுவர். தல்லாகுளத்தின் இதயமாக விளங்கும் தமுக்கம் மைதானம், விசுவநாத நாயக்கர் என்ற நாயக்க பரம்பரை மன்னரால் கட்டப்பட்டது. இம்மைதானத்தில், அரச விழாக்களும், கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. சுமார் 50,000 சதுர அடியில், சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் பங்கு பெறும் அளவு கொண்ட இந்த மைதானம் தற்போது மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தற்போதுள்ள 'கலையரங்கம்', சுமார் 20,000 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும், சித்திரைத் திருவிழாவை ஒட்டி, சுமார் 45 நாட்கள் இம்மைதானத்தில் நடைபெறும் சித்திரைக் கண்காட்சியை சுமார் ஓர் இலட்சம் மக்கள் கண்டுகளிக்கின்றனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடக்கும் நாளுக்கு முந்தைய இரவு முழுவதும் கண்காட்சி நடைபெற்று, மக்கள் பயன் பெறும் வகையில் அமைகிறது. சுமார் 400 கார்களுக்காகவும், 1,000 இருசக்கர வாகனங்களுக்காகவும் நிறுத்துமிடங்களும் கொண்டு, ரூ. 50 கோடி செலவில் கலையரங்கம் நவீன வசதிகளுடன் உருவாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு கண்காட்சியில் சுமார் 90,000 பேர் கலந்து கொண்டனர். காந்தி அருங்காட்சியகம், மதுரை, தல்லாகுளத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலேயே உள்ளது. மேம்பட்ட சுவைக்காகவும், பலதரப்பட்ட உணவு வகைகளுக்காகவும், இங்குள்ள 'அம்மா மெஸ்' என்ற அசைவ உணவகம் பிரபலமானது.

தல்லாகுளம், மதுரை
Tallakulam, Madurai
தல்லாகுளம்
தல்லாகுளம், மதுரை Tallakulam, Madurai is located in தமிழ் நாடு
தல்லாகுளம், மதுரை Tallakulam, Madurai
தல்லாகுளம், மதுரை
Tallakulam, Madurai
தல்லாகுளம் மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°55′56.2″N 78°08′17.9″E / 9.932278°N 78.138306°E / 9.932278; 78.138306
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
158 m (518 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625 002
தொலைபேசி குறியீடு0452
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, செல்லூர், கோரிப்பாளையம், நரிமேடு, பி.பி. குளம், சின்னசொக்கிகுளம், ஆழ்வார்புரம், செனாய் நகர், கே.கே. நகர், அண்ணா நகர், சிம்மக்கல், யானைக்கல் மற்றும் நெல்பேட்டை
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கோ. தளபதி
இணையதளம்https://madurai.nic.in

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 158 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தல்லாகுளம் புறநகர்ப் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள்: 9.932269°N78.138310"E (அதாவது, 9.932269°N, 78.138310°E) ஆகும்.

போக்குவரத்து

தொகு

சாலைப் போக்குவரத்து

தொகு

தல்லாகுளத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் மாட்டுத்தாவணியிலுள்ள மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுடன் பேருந்து சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

தொடருந்து போக்குவரத்து

தொகு

தல்லாகுளத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலுள்ள மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், மற்ற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலத் தொடர்புகளுக்கும் வழிவகை செய்கிறது.

வான்வழிப் போக்குவரத்து

தொகு

இங்கிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் அவனியாபுரத்தில் அமைந்துள்ள மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம், வெளிநாட்டுத் தொடர்புகளையும் எளிதாக்குகிறது.

கல்வி

தொகு

பள்ளிகள்

தொகு

அருகிலுள்ள நரிமேடு பகுதியில் அமைந்துள்ள ஓ. சி. பி. எம். மேல்நிலைப் பள்ளி மற்றும் நோயஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி,கமலாநகர் அமைந்துள்ள தல்லாகுளம் செங்குந்தர் உறவின்முறை உயர்நிலைப்பள்ளி ஆகியவை தல்லாகுளம் பகுதியிலுள்ள மாணவ, மாணவிகளுக்கு பயனளிக்கின்றன.

கல்லூரிகள்

தொகு

மருத்துவம்

தொகு

வழிபாடு

தொகு

இந்துக் கோயில்கள்

தொகு

மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றாகும். அகில இந்திய அளவில் மட்டுமல்லாது, வெளிநாட்டினராலும் ஈர்க்கப்பட்டு தரிசிக்கப்படும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலேயே உள்ளது.

தொழில்

தொகு

இவ்வூருக்கு பக்கத்திலுள்ள செல்லூர் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. தற்போது, தொழில்கள் நலிவுற்று எண்ணிக்கையில் குறைந்தாலும்,[3] வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொடர்ந்து வருகிறது.

அரசியல்

தொகு

தல்லாகுளம் பகுதியானது, மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[4] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் கோ. தளபதி ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தல்லாகுளம், மதுரை". Google Books.
  2. "ஸ்ரீ மீனாட்சி மகளிர் கல்லூரியில் காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி". Dinamani. https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/sep/29/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3924344.html. 
  3. "Sellur handloom units in throes of extinction". The Hindu. https://www.thehindu.com/news/cities/Madurai/sellur-handloom-units-in-throes-of-extinction/article3514474.ece. 
  4. "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-13.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தல்லாகுளம்,_மதுரை&oldid=3752592" இலிருந்து மீள்விக்கப்பட்டது