யானைக்கல், மதுரை

மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

யானைக்கல் (Yanaikkal) என்ற புறநகர்ப்பகுதி இந்தியா தீபகற்பத்தில், தமிழ்நாடு மாநிலத்தின், மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மதுரையின் வடக்கு வெளி வீதியில், நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் நிறுவப்பட்ட யானைக்கல் சிலையைச் சுற்றி அமைந்த மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியே யானைக்கல் என்ற புறநகர்ப் பகுதி. மதுரையின் நான்கு வெளிவீதிகளிலும் (கீழ வெளி வீதி, மேல வெளி வீதி, வடக்கு வெளி வீதி மற்றும் தெற்கு வெளி வீதி) பழங்காலத்தில் கட்டப்பட்டிருந்த பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்கள் மற்றும் நுழைவு வாயில்களில், மேல வெளி வீதி கோட்டை வாசலைத் தவிர மீதி மூன்று கோட்டைச் சுவர்களும், நுழைவு வாயில்களும், பிற்காலத்தில் வெள்ளைக்கார கலெக்டரான 'மாரட்' (Marret) என்பவரது உத்தரவால் அகற்றப்பட்டன. வடக்கு வாசல் அகற்றப்பட்ட இடத்தில் அடையாளச் சின்னமாக, மகாலிலிருந்து எடுத்து வரப்பட்ட ஒரு யானைக்கல் சிலை நிறுவப்பட்டது. அதுவே, இன்றும் காட்சி தருகிறது. அந்த இடமே யானைக்கல் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிழக்கு திசை நோக்கி வைக்கப்பட்டிருந்த இந்த யானைக்கல் சிலை, சில காலம் வேறு திசையைப் பார்க்கும் வண்ணம் திருப்பி வைக்கப்பட்டது. அப்போது முதல் மழை இல்லாது மதுரை வறட்சியாகக் காணப்பட்டதாகவும், பின்னர் பழையபடி கிழக்குத் திசை நோக்கியே திருப்பி வைக்கப்பட்டதும், மீண்டும் மழையால் செழிப்படைந்ததாகவும் செவி வழிக் கதை ஒன்று உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தற்போது காந்தியடிகள் சிலை, சிறிய பூங்கா மற்றும் நீரூற்றும் ஏற்படுத்தப்பட்டு, மதுரை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், யானைக்கல்லும் புதுப்பிக்கப்பட்டு ஜொலிக்கிறது.[1]

யானைக்கல், மதுரை
Yanaikkal, Madurai

யானைக்கல்
புறநகர்ப் பகுதி
யானைக்கல், மதுரை Yanaikkal, Madurai is located in தமிழ் நாடு
யானைக்கல், மதுரை Yanaikkal, Madurai
யானைக்கல், மதுரை
Yanaikkal, Madurai
யானைக்கல், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°55′24.9″N 78°07′24.7″E / 9.923583°N 78.123528°E / 9.923583; 78.123528
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்158 m (518 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்கள்625 001
தொலைபேசி குறியீடு0452
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, செல்லூர், தல்லாகுளம், கோரிப்பாளையம், செனாய் நகர், சிம்மக்கல், நெல்பேட்டை, கீழவாசல், ஆரப்பாளையம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி

அமைவிடம் தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 158 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள யானைக்கல் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள்: 9°55'24.9"N, 78°07'24.7"E (அதாவது, 9.923585°N, 78.123529°E) ஆகும்.

போக்குவரத்து தொகு

யானைக்கல் தரைப்பாலம் தொகு

வைகை ஆற்றின் இரு கரைகளையும் இணைக்கும் வண்ணம் தாழ்வான பாலம் ஒன்று உண்டு. இதற்கு யானைக்கல் பாலம் என்று பெயர். இலகுரக வாகனப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் இந்தப் பழைய பாலம், ஒவ்வோர் ஆண்டும் கனமழை பெய்யும் போதும் வைகை ஆற்றில் மூழ்கிய நிலையில் காட்சி தரும். இந்த 2022ஆம் ஆண்டும், கனமழையால் வைகை அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரைபுரண்டு ஓடிய நீரால், யானைக்கல் தரைப்பாலம் மற்றும் இணைப்புச் சாலைகள் தண்ணீரில் மூழ்கின. பாதுகாப்பு கருதி, சில நாட்கள் அந்தத் தரைப்பாலம் வழியாகப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.[2]

வைகை ஆறு தொகு

மதுரையில் பாய்ந்தோடும் ஆறான 'வைகை ஆறு' யானைக்கல் பகுதிக்கு அருகில் செல்கிறது. இந்த 2022ஆம் ஆண்டு கனமழை காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து, அதன் காரணத்தால் அதிக அளவு நீர், அணையிலிருந்து திறக்கப்பட்டு, வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி நீர் ஆர்ப்பரித்து சென்றது. இதனால் யானைக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதனால் சிம்மக்கல் பகுதி, கோரிப்பாளையம், தல்லாகுளம் சாலை, பனகல் சாலை, செல்லூர் சாலை, யானைக்கல் பாலம் ஸ்டேசன் சாலைகளில் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டது.[3] மேலும், மதுரை மாநகராட்சி கழிவுநீர் யானைக்கல் பகுதியில் வைகை ஆற்றில் கலக்கும் இடத்தில் முளைக்கும் ஆகாயத் தாமரைகளால் தண்ணீர் போக்குவரத்து தடை ஏற்படுவதும் உண்டு.[4]

அருகிலுள்ள ஊர்கள் தொகு

மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், செல்லூர், ஆரப்பாளையம், நெல்பேட்டை, கீழவாசல் ஆகியவை யானைக்கல் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்கள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைக்கல்,_மதுரை&oldid=3645557" இலிருந்து மீள்விக்கப்பட்டது