செமினியு மாவட்டம்
நாகாலாந்தில் உள்ள மாவட்டம்
செமினியுக் மாவட்டம் (Tseminyü District) இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த நாகாலாந்து மாநிலத்தின் 13-வது மாவட்டமாக 18 டிசம்பர் 2021 அன்று புதிதாக நிறுவப்பட்டச்து.[4][5] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் செமினியுக் நகரம் ஆகும். 256 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செமினியுக் மாவட்டம், ரெங்கமா நாகா மக்களின் தாயகம் ஆகும்.[6] 2011-ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 63,269 ஆகும். இம்மாவட்டம் செமினியு மற்றும் சோஜின் என இரண்டு வருவாய் வட்டங்களைக் கொண்டது.
செமினியு மாவட்டம் Tseminyü District | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | நாகாலாந்து |
நிறுவப்பட்ட நாள் | 18 டிசம்பர் 2021 |
தோற்றுவித்தவர் | நாகாலாந்து அரசு |
தலைமையிடம் | செமினியு |
அரசு | |
• மக்களவைத் தொகுதி | நாகாலாந்து |
• மக்களவை உறுப்பினர்[1] | தோக்கியோ யெப்தோம், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி |
• மாவட்ட ஆட்சியர் | சசெகுவோலி சூசி, இஆப |
பரப்பளவு | |
• மொத்தம் | 256 km2 (99 sq mi) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 63,269 |
• அடர்த்தி | 250/km2 (640/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
நெடுஞ்சாலை | தேசிய நெடுஞ்சாலை 2 |
மாவட்ட எல்லைகள்
தொகுசெமினியு மாவட்டத்தின் வடக்கில் வோக்கா மாவட்டம், தெற்கில் கோகிமா மாவட்டம், மேற்கில் நியூலாந்து மாவட்டம், கிழக்கில் சுனெபோட்டோ மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.
மேற்கோள்காள்
தொகு- ↑ "Lok Sabha Members". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் December 18, 2021.
- ↑ total area of the 2 circles.
- ↑ total population of the 2 circles.
- ↑ Nagaland Creates Three New Districts - Tseminyu, Niuland, And Chumukedima
- ↑ "Nagaland creates 3 more districts". The Assam Tribune. December 18, 2021. https://assamtribune.com/north-east/nagaland-creates-3-more-districts-1344462.
- ↑ Nagaland: Why are Rengma Nagas demanding a separate district?