நியூலாந்து மாவட்டம்

நியூலாந்து மாவட்டம் (Niuland District) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் 14-வது மாவட்டமாக 18 டிசம்பர் 2021 அன்று நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் நியூலாந்து நகரம் ஆகும். இம்மாவட்டம் திமாப்பூர் மாவட்டத்தின் நியூலாந்து வருவாய் வட்டப் பகுதிகளைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்டது.[2]இம்மாவட்டம் திமாப்பூர் நகரத்திற்கு கிழக்கே 34 கிலோ மீட்டர் தொலைவிலும்; கோகிமாவிற்கு வடகிழக்கே 68 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 11,876 ஆகும்.

நியூலாந்து
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
நிறுவப்பட்ட நாள்18 டிசம்பர் 2021
தலைமையிடம்நியூலாந்து
அரசு
 • மக்களவத் தொகுதிநாகாலாந்து மக்களவைத் தொகுதி
 • மக்களவை உறுப்பினர்[1]டோக்கியோ யெப்தோம், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
 • மாவட்ட ஆட்சியர்அஜித் குமார் இஆப
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்11,876
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)

புவியியல் தொகு

நியூலாந்து மாவட்டத்தின் வடக்கில் அசாம் மாநிலம், கிழக்கில் கோகிமா மாவட்டம், தெற்கில் சூமௌகெடிமா மாவட்டம், மேற்கில் திமாப்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மேற்கோளகள் தொகு

  1. "Lok Sabha Members". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் December 18, 2021.
  2. "Nagaland creates 3 more districts". The Assam Tribune. December 18, 2021. https://assamtribune.com/north-east/nagaland-creates-3-more-districts-1344462. 



"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூலாந்து_மாவட்டம்&oldid=3711172" இலிருந்து மீள்விக்கப்பட்டது