செம்பட்டியல் சுட்டெண்

செம்பட்டியல் சுட்டெண் (Red List Index) என்பது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கஅச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் அடிப்படையில் உலகளாவிய உயிரியற் பல்வகைமை மாறுபடும் நிலையின் ஒரு குறி காட்டியாகும். இது முக்கிய இனக் குழுக்களின் காப்பு நிலையை வரையறுக்கிறது. மேலும் காலப்போக்கில் அழிந்துபோகும் அபாயத்தின் போக்கினையும் அளவிடுகிறது. பாதுகாப்பு மதிப்பீடுகளை முறையான இடைவெளியில் நடத்துவதன் மூலம், வகைபிரித்தல் குழுவில் உள்ள உயிரினங்களின் அச்சுறுத்தல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அழிவு அபாயத்தின் போக்குகளைக் கண்காணிக்க இது பயன்படும். ஒவ்வொரு குழுக்களிலும் உள்ள உயிரினங்களுக்கான அச்சுறுத்தல் நிலையில் மாற்றங்களைப் பயன்படுத்தி பறவைகள் மற்றும் நீர்நில வாழ்வன வற்றிற்கு செம்பட்டியல் சுட்டெண் கணக்கிடப்பட்டுறது.

IUCN conservation statusesஅற்றுவிட்ட இனம்இனஅழிவுஇயலிடத்தில் அற்றுவிட்ட இனம்மிக அருகிய இனம்அருகிய இனம்அழிவாய்ப்பு இனம்அச்சுறு நிலையை அண்மித்த இனம்அழியும் வாய்ப்புள்ள இனங்கள்தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்குறைந்த தீவாய்ப்பு
IUCN conservation statusesஅற்றுவிட்ட இனம்இனஅழிவுஇயலிடத்தில் அற்றுவிட்ட இனம்மிக அருகிய இனம்அருகிய இனம்அழிவாய்ப்பு இனம்அச்சுறு நிலையை அண்மித்த இனம்அழியும் வாய்ப்புள்ள இனங்கள்தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்குறைந்த தீவாய்ப்பு
2006 ஐ.யூ.சி.என் சிவப்பு பட்டியல் வகைகளின் சுருக்கம்.
செம்பட்டியல் அட்டவணை (2019)

வகைப்பாட்டுக் குழுக்களுடன், செம்பட்டியல் சுட்டெண் ஒரு இனத்தின் அழியும் அபாய போக்கினை உயிர்ப்புவியியல், வாழ்விட வகை மற்றும் ஆதிக்கமிக்க அச்சுறுத்தல் செயல்முறைகளையும் அறியலாம்.

மாதிரி அணுகுமுறை

தொகு

முழு உயிரினக் குழுக்களையும் விரிவாக மதிப்பிடுவதன் மூலம் அழிவு அபாயத்தில் மாற்றத்தின் குறியீடுகளை உருவாக்குவது, ஒப்பீட்டளவில் குறைவான உயிரினங்களைக் கொண்டு நன்கு ஆராயப்பட்ட குழுக்களுக்குச் சாத்தியமானது. இது எல்லா வகைபிரித்தல் குழுக்களுக்கும் பொருந்தாது. பூஞ்சை, முதுகெலும்பிகள் (குறிப்பாகப் பூச்சிகள் ) மற்றும் தாவரங்கள் போன்ற பெரும் பல்லுயிர் பெருக்கத்தை உள்ளடக்கிய குறைவாக அறியப்பட்ட குழுக்களில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் மதிப்பிடுவது நடைமுறையில் சாத்தியமில்லை.

செம்பட்டியல் சுட்டெண் அச்சுறுத்தல் நிலையைத் தீர்மானிப்பதற்காகவும், குறைவாக அறியப்பட்ட மற்றும் குறைந்த ஈர்ப்பு கொண்ட இனக் குழுக்களின் போக்குகளையும் தீர்மானிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஐ.யூ.சி.என் உறுப்பினர்கள் மற்றும் லண்டன் விலங்கியல் சங்கத்தின் (இசட்.எஸ்.எல்) ஆராய்ச்சி பிரிவான விலங்கியல் நிறுவனம் (ஐ.ஓ.எஸ்) ஒத்துழைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. செம்பட்டியல் சுட்டெண் பூஞ்சை, விலங்குகள் மற்றும் தாவரங்கள் வகைபிரித்தல் குழுக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உயிரினங்களின் பிரதிநிதி மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிற்றினங்களில் மதிப்பீடானது உயிரினங்களின் மதிப்பீடு பல்லுயிரியலின் தற்போதைய நிலை குறித்த அடிப்படைத் தகவல்களைக் கொண்டது. சரியான இடைவெளியில் மறு மதிப்பீடு செய்வது, பல்லுயிர் மாற்றத்தின் ஒரு பரந்த பிரதிநிதித்துவம் மூலம் காலப்போக்கில் அச்சுறுத்தல் நிலையின் மாற்றங்களை அடையாளம் காணலாம்.

பயன்பாடுகள்

தொகு

பல்லுயிர் இழப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளதா என்பதை அளவிடக்கூடிய உலகளாவிய பல்லுயிர் குறி காட்டியை ஏற்படுத்துவதே செம்பட்டியல் சுட்டெண்ணின் நோக்கமாகும். இதன் மூலம் எந்த வகை குழுக்கள், பகுதிகள் அல்லது சுற்றுச்சூழல் மண்டலம் மிக விரைவாக மோசமாகின்றன என்பதையும், ஏன் இந்த இனங்கள் அச்சுறுத்தப்படுகின்றன, அவை எங்கு அச்சுறுத்தப்படுகின்றன, என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன, எந்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்பதைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள இச்சுட்டெண் உதவும். கொள்கை வகுப்பார்கள், வள மேலாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பாதுகாப்பு பயிற்சியாளர்கள் மற்றும் பொது மக்களுக்குப் பல்லுயிர் மாற்றம் குறித்த முழுமையான அறிவையும், தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கான கூடுதல் தகவல்களையும் வழங்குவதே இதன் நோக்கம்.

ஏப்ரல் 2002இல், உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டில் (சிபிடி), 188 நாடுகள் இதற்கான நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன: “… 2010க்குள், உலக, பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் தற்போதைய பல்லுயிர் இழப்பு விகிதத்தில் கணிசமான குறைப்பை அடையலாம்…” ஆர்.எல்.ஐ. இந்த முக்கியமான இலக்கை நோக்கிய முன்னேற்றத்தை அளவிடுவதற்கான குறி காட்டிகளில் ஒன்றாக சிபிடியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, குறிப்பாக உயிரினங்களின் அச்சுறுத்தல் நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பட்டியல்_சுட்டெண்&oldid=3367730" இலிருந்து மீள்விக்கப்பட்டது